கேஸ் சிலிண்டர் வேணுமா? பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0.. பெண்களுக்கான அருமையான திட்டம் இதுவே
சென்னை: கிராமப்புற மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பெண்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகவே, கொண்டுவரப்பட்டதுதான் உஜ்வாலா 2.0 திட்டமாகும். இந்த திட்டத்தின் வேறு சிறப்பு பலன்கள் என்னென்ன? இதற்கான ஆவணங்கள் என்னென்ன?
இல்லத்தரசிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், வளமான வாழ்வுக்காகவும், மத்திய அரசு கொண்டுவந்த சிறப்பான திட்டம்தான், உஜ்வாலா யோஜனா 2.0 திட்டமாகும்.. 2016ல் பிரதமர் மோடி துவக்கிய இந்த திட்டமானது, 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதாகும்.

உஜ்வாலா யோஜனா திட்டத்துக்காகவே, மத்திய அரசு ரூ.8,000 கோடியை ஒதுக்கி செயல்படுத்திவருகிறது.. இந்தியா முழுவதிலுமே லட்சக்கணக்கான பெண்கள் நேரடியாகவே பலனடைந்து வருகிறார்கள்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த திட்டத்திற்காக, புதிய பயனாளிக்கு ரூ.1,600 நிதியுதவியும் இந்த திட்டத்தில் தரப்படுகிறது. கேஸ் சிலிண்டரை நிரப்பி கொள்வது அல்லது எல்பிஜி அடுப்பு பெற்றுக் கொள்வது போன்றவற்றையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.பெண்கள் இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா? இதன் தகுதிகள் என்னென்ன தெரியுமா?
இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?
- www.pmuy.gov.in என்ற வெப்சைட்டிற்குள் சென்று, உஜ்வாலா 2.0 திட்டத்தின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.. பிறகு, பெயர், முகவரி, ஜன்தன் கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து, அடையாள ஆவணங்களையும் அப்லோடு செய்தால் போதும்.. உங்கள் விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு சிலிண்டர்களை வழங்குவார்கள்.
ஆவணங்கள்: இதற்கு நகராட்சி தலைவர் (நகர்ப்புற பகுதி) அல்லது பஞ்சாயத்து தலைவர் (கிராமப்புற பகுதி) வழங்கிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜாதி சான்றிதழ், முகவரி சான்றிதழ், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.
இந்த திட்டத்திற்கான தகுதிகள் என்னென்ன? இந்திய பிரஜையாக, வறுமை கோட்டுக்கு கீழுள்ள பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். சமையல் சிலிண்டர் இணைப்பு எதுவும் இதுவரை பெற்றிருக்கக்கூடாது.
பட்டியல் வகுப்பு/பழங்குடி குடும்பங்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழுள்ளவர்களும் இந்த திட்டத்தில் பலன் பெற முடியும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications