ஒரு குறிப்பிட்ட நிலம் தனியார் நிலமா? அரசு நிலமா என்று தெரிந்துக் கொள்ள வேண்டுமா? எப்படி
சென்னை: நீங்கள் வாங்க போகும் குறிப்பிட்ட நிலம் தனியார் நிலமா? அரசு நிலமா என்று தெரிந்துக் கொள்ள வேண்டுமா? சர்வே நம்பர் தெரிந்தால் போதும்... சில நொடிகளில் அறிய முடியும்.. எப்படி அறியலாம் என்பதை பார்ப்போம்..
வீடு நிலம் வாங்கும் விஷயத்தில் தான்.. தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் ஏமாறுகிறார்கள். பல வருடம் குருவி சேர்ப்பது போல் சேர்த்து மக்கள் இடம் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் இடம் நல்ல இடமாக இருக்க வேண்டும். முதல் விஷயம் அரசின் புறம்போக்கு இடமாக இருக்கக்கூடாது. நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடாக அல்லது மனையாக இருக்கக்கூடாது.

மழை காலத்தில் தண்ணீர் தேங்கக் கூடாது. தண்ணீர் வெளியேற வழிகள் இருக்க வேண்டும். முக்கியமாக மனைகளில் வில்லங்கம் இருக்கக்கூடாது. பூர்வீக சொத்துக்களாக இருந்தால் பாகப்பிரிவினை சரியாக நடந்து இருக்க வேண்டும். கூட்டு பட்டா சொத்துக்களை வாங்கும் போது மிக கவனமாக வாங்க வேண்டும். ஏனெனில் அனைவரும் கையெழுத்து போட்டால் மட்டுமே பத்திரம் செல்லும். பட்டா மாறுதலுக்கு அலைய வேண்டிய சிக்கல் ஏற்படும். பட்டா இல்லாத நிலம் என்றால் சிக்கல் வரலாம்.
இதேபோல் அரசின் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும், பத்திரம் பதிந்து இருப்பார்கள். ஆனால் பட்டா வழங்கப்பட்டிருக்காது. அப்படியான நிலங்களை தவிர்ப்பது நல்லது. இதேபோல் கோயில் நிலத்தில் பல ஆண்டுகளாக சிலர் வசிப்பார்கள். அவர்களுக்கு அரசு பட்டா வழங்கி இருக்காது. பத்திரம் மட்டுமே இருக்கும். அந்த நிலங்களை வாங்குவதும் சிக்கலுக்கு வழிவகுக்கும்.
இதேபோல் பஞ்சமி நிலங்களையும் எந்த காரணம் கொண்டும் வாங்கக்கூடாது. இதேபோல் அரசால் இலவசமாக கொடுக்கப்பட்ட நிலம் என்றாலும் வாங்க வேண்டாம். ஏனெனில் இனாமாக கொடுக்கப்பட்ட நிலத்தை வேறு யாருக்கும் விற்க கூடாது என்ற நிபந்தனையும் வழங்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட நிலங்களை அல்லது வீடுகளை அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கக்கூடாது.
எல்லாம் சரி என்றால், அது எந்த வகையான நிலம் என்பதை கவனிக்க வேண்டும்.ஒரு குறிப்பிட்ட நிலம் தனியார் நிலமா? அரசு நிலமாக என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். https://eservices.tn.gov.in/eservicesnew/land/poramboke.html என்ற வெப்சைட்டுக்கு போக வேண்டும். அதில் ஆன்லைனிலேயே ஒரு நிமிடத்தில் அறிய முடியும். - மாவட்டம் - தாலுக்கா, - கிராமம், சர்வே எண், - துணை பிரிவு எண் (Sub division) ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் எந்த நிலம் என்பதை அறிய முடியும். அரசு நிலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் வாங்கவே வேண்டாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications