எம்மாடி இதுதான் நடிகர் தனுஷின் 150 கோடி ரூபாய் பங்களாவா? ஹோம் டூர் வீடியோவை பார்த்தாலே தலைசுத்துதே!
சென்னை: நடிகர் தனுஷின் போயஸ் தோட்ட வீட்டின் உள்பகுதியை பார்த்துள்ளீர்களா... அவருடைய ரசிகர்கள் தீயாய் பரப்பும் வீடியோ இதோ!
நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் தற்போது விஜய், அஜித்தை போல் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்கிறார்.
அவர் இதுவரை 46 படங்களில் நடித்துள்ளார். அவற்றில் சில படங்களையும் அவர் தயாரித்துள்ளார். அவர் 14 சைமா விருதுகளையும் 9 விஜய் விருதுகளையும் , 7 பிலிம்பேர் விருதுகளையும் 5 விகடன் விருதுகளையும் பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் இந்தியா சார்பில் வெளியாகும் 100 பிரபலங்கள் பட்டியலில் இதுவரை 6 முறை அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

சினிமா துறை
இந்த நிலையில் அவர் சினிமா துறையில் அசுர வளர்ச்சி பெறுவதற்கு முன்பே 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தனர்.

பேச்சுவார்த்தை
இதையடுத்து அவர்களை சேர்த்து வைக்கும் பேச்சுவார்த்தை இரு தரப்பினரின் பெரியோர்கள் நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் அவர் பாலிவுட் முதல் ஹாலிவுட் படம் வரை தனுஷ் உயர்ந்துள்ளார். கடைசியாக அவர் நடித்த வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸானது. அது போல் கேப்டன் மில்லர் என்ற திரைப்படமும் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள்
இந்த நிலையில் அவருடைய அடுத்த படம் எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தனுஷ், தனது முன்னாள் மாமனார் ரஜினிகாந்த் வீடு இருக்கும் போயஸ் தோட்டம் பகுதியில் ரூ 150 கோடியில் பிரம்மாண்ட வீட்டை கட்டியிருந்தார். அதற்கு அவர் கிரகபிரவேஷம் செய்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

குடும்ப உறுப்பினர்கள்
தனது அம்மா, அப்பா, அண்ணன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இந்த விழா நடந்தது. இந்த வீட்டை தனுஷ் தனது தாய், தந்தையருக்காக கட்டியதாக கூறப்படுகிறது. இந்த மூன்று மாடி கட்டடமாக உருவாகியுள்ளது. வீடு முழுவதும் நவீன பாதுகாப்பு கருவிகள், நிறைய இடங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளன. வீட்டில் வெள்ளை பளிங்கு கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

8 படுக்கை அறை
8 படுக்கை அறைகள் கொண்ட வீடாக இது உள்ளது. வீட்டில் சிறிய திரையரங்கம், வீட்டின் பின்புறத்தில் நீச்சல் குளம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. வீட்டின் மாடி படிகளின் பக்கவாட்டு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் விலை உயர்ந்த கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவருடைய வீட்டின் வெளிபுறத்தை கண்டு வியந்திருப்பீர்கள். தற்போது வீட்டின் உள்புற தோற்றம் குறித்த வீடியோவை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

என்ன இருக்கிறது?
அந்த வீடியோவில் வீட்டின் முகப்பில் மிகப் பெரிய வாசற்படி இருக்கிறது. ஒரு வரவேற்பறை உள்ளது. அதை தாண்டி சென்றால் ஒரு பெரிய ஹால் இருக்கிறது. அதாவது கீழ் தளம், முதல் தளம், இரண்டாவது தளம், மூன்றாவது தளம் என உள்ளது. பார்க்கவே மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. வீட்டில் எல்லா இடங்களிலும் மரத்தால் ஆன ஸ்டைலிஷ் கப்போர்ட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் வீட்டின் வெளி அழகை கண்டு ரசிக்க பால்கனி இருக்கிறது. . ஒவ்வொரு தளத்திலும் உள்ள அறைகளில் அலங்கார விளக்குகள் உள்ளன. அது போல் அறைகளுக்கு வெளியேவும் விலை மதிப்புள்ள விளக்குகள் தொங்க விடப்பட்டுள்ளன. மேலும் அறைகளுக்கு செல்லும் இடங்களில் ஆங்காங்கே சோபா செட்கள் போடப்பட்டுள்ளன. வெளிபுறத்தில் அடிக்கப்பட்டுள்ள பெயிண்ட்கள் உயர்ரகத்தை சேர்ந்தவையாகும். அது போல் உள்ளேயும் கண்களுக்கு குளிர்ச்சியான வகையில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்த வீட்டில் திரையங்கம், தனுஷ் இயக்குநர்களை சந்திக்கும் அலுவலகம் உள்ளிட்டவையும் அமைந்துள்ளது. தனுஷின் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி வீட்டை விட இந்த போயஸ் தோட்ட இல்லம் நன்றாக இருக்கிறது. வீட்டின் வெளியே 5 அல்லது 6 கார்கள் வரை நிறுத்தும் அளவுக்கு இடம் இருக்கின்றன. அது போல் செடி, கொடிகளை வளர்க்கவும் இடம் வைக்கப்பட்டுள்ளது. தனுஷ் சிவனின் பக்தர் என்பதால் வீட்டின் முகப்பில் ஏதாவது சிவபெருமானின் படமோ சிலையோ வைக்கப்படும் என தெரிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கியிருக்கும் போயஸ் தோட்ட இல்லத்தில் வீடு வாங்க திரையுலகினர் போட்டி போட்டு வருகிறார்கள். அது போல் சசிகலாவும் போயஸ் தோட்டத்தில் ஒரு வீடு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications