சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வேலையை" காட்டிய டாக்டர் சரவணன்.. அதுவும் "தலைவரை". டக்கென திரும்பிய திமுக, அதிமுக.. என்னாச்சு?

டாக்டர் சரவணன் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவின் டாக்டர் சரவணன் செய்துள்ள ஒரு காரியம், திராவிட கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.. அதுவும் அதிமுகவுக்கு டென்ஷன் எகிறிவிட்டது என்றே சொல்லலாம்.

Recommended Video

    கருப்பு எம் ஜி ஆர்..! பாஜகவின் டாக்டர் சரவணன் செய்துள்ள ஒரு காரியம் - வீடியோ

    திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவாக அன்றைய தினம், தமிழக அரசியலில் அறியப்பட்டவர் சரவணன்.. இவர் ஒரு டாக்டர்..

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அவ்வளவாக தமிழகத்தில் நுழைவதற்கு முன்பே மானிய கோரிக்கை விவாதத்திற்காக சட்டப்பேரவைக்கு, முதன்முதலாக மாஸ்க்குடன் வந்து பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்தவர்!!

     பக்கா ப்ளான் போடும் எதிர்கட்சிகள்! கெத்தாய் இருக்கும் பாஜக! வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு தெரியுமா? பக்கா ப்ளான் போடும் எதிர்கட்சிகள்! கெத்தாய் இருக்கும் பாஜக! வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு தெரியுமா?

     டாக்டர் சரவணன்

    டாக்டர் சரவணன்

    அதேபோல, கொரோனா வைரஸ் குறித்து கட்சிக்கு ஒருவர் என்ற முறையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து பேசும்போது, திமுக சார்பில் அன்று பேசியவரும் டாக்டர் சரவணன்தான்.. தனிப்பட்ட முறையில் பல நன்மைகளை தொகுதி மக்களுக்கு செய்து, அதன்மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தவரும்கூட.. ஆனால், கடந்த தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்ததுமே அதிருப்தியில் வெளியேறினார்.

     டென்ஷன் திமுக

    டென்ஷன் திமுக

    திமுக எம்எல்ஏக்களிலேயே நான்தான் சொந்த பணத்தைச் செலவழித்து தொகுதி மக்களுக்கு சேவை செய்தேன்.. மணல் கடத்தலுக்கு எதிராக வழக்கு போட்டேன்... இப்படி நல்ல விஷயங்களை செய்ததால்தான் எனக்கு சீட் தரவில்லையா? என்று சரவணன் கேட்ட கேள்வி திமுகவை உச்சத்துக்கும் கோபப்படுத்திவிட்டது எனலாம்.. அத்துடன், உடனடியாக பாஜகவிலும் இணைந்தார் சரணவன்.. அதுமட்டுமல்ல, டாக்டர் சரவணனுக்கு அக்கட்சியில் சேர்ந்த 3 மணி நேரத்தில் மதுரை வடக்கில் போட்டியிட சீட்டை ஒதுக்கி, மாஸ் காட்டியது தமிழக பாஜக... மக்கள் செல்வாக்கு பெற்ற நிலையிலும், திடீர் அரசியல் ஸ்டண்ட்டால் தோல்வியை சந்தித்தார்.

    போஸ்டர்

    போஸ்டர்

    ஆனால், இவர் கட்சியில் சேர்ந்ததுமே பாஜக தரப்பு படுகுஷியானது.. வேறு ஒரு கணக்கையும் போட்டது.. மதுரையில், சரவணனை வைத்து பாஜகவை வலுப்படுத்திவிடலாம், கொங்குவை போலவே தென்மாவட்டங்களிலும் பாஜக காலூன்றும் என்று நம்பப்பட்டது.. அதனாலேயே, அண்ணாமலையின் முதல் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் இதே மதுரையில் நடத்தப்பட்டது. இப்போது விஷயம் என்னவென்றால், மதுரையில் ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளார் சரவணன்..

     போலீஸ் சரவணன்

    போலீஸ் சரவணன்

    பாஜக நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் இந்த போஸ்டர்களை பாஜக தரப்பினரே ஒட்டியுள்ளனர்.. இதில், பாண்டிய நாட்டிற்கு வருகை தரும் ராமஅவதாரம் என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருக்கிறது.. அதில் அண்ணாமலையை ராமர் அவதாரத்தில் சித்தரித்துள்ளனர்.. வேல், அம்பு அண்ணாமலை கையில் உள்ளது.. இதிலும் டாக்டர் சரவணன் போஸ்டர் இடம்பெற்றுள்ளது. அதேபோல இன்னொரு போஸ்டரில் "எட்டு ஆண்டு சாதனை விளக்க அழைக்கிறார் கருப்பு எம்ஜிஆர் அண்ணாமலை" என்று அண்ணாமலை போட்டோ உள்ளது.. இன்னொரு பக்கம் பாஜக மதுரை மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சரவணன் போட்டோ உள்ளது.. ஆனால், அந்த போஸ்டரில், சரவணன் போலீஸ் டிரஸ்ஸில் இருக்கிறார்.. ஐபிஎஸ்ஸாக இருந்த அண்ணாமலை, ப்ளு கலர் பேன்ட் - ஷர்ட்டில் பைக்கிலும், டாக்டர் சரவணன், காக்கி டிரஸ்ஸிலும் காணப்படுகின்றனர். இந்த போட்டோதான் வைரலாகி கொண்டிருக்கிறது.

     கருப்பு எம்ஜிஆர்

    கருப்பு எம்ஜிஆர்

    இது பரவலான சர்ச்சைகளையும் கிளப்பி விட்டு வருகிறது.. காரணம், தமிழ்நாட்டில் தேர்தலுக்கான அறிகுறி தென்பட்டால் போதும், உடனே எம்ஜிஆர் சீனில் வந்துவிடுவார்.. தேர்தல் முடியும் வரை, எம்ஜிஆரை துணைக்கு அழைத்து வந்து பக்கத்தில் வைத்து கொள்வது தமிழக அரசியல் கட்சிகளின் வழக்கம்.. இப்படித்தான் கடந்த முறை தேர்தலில் விஜய்யை எம்ஜிஆர் ஆக்கி, போஸ்டர்கள் ஒட்டினார்கள்.. அதேபோல கமலும், "நாளை நமதே" என்ற முழக்கத்தை பயன்படுத்தியே பிரச்சாரத்தை தொடங்கினார்..

     விஜயகாந்த் அரசியல்

    விஜயகாந்த் அரசியல்

    முதன்முதலில், விஜயகாந்த் அப்படித்தான் நினைத்தார் - வந்தார் - ஓரளவு வெல்லவும் செய்தார்... தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று கூட சொல்ல வைத்தார்.. ஆனால், அவரது விளம்பரங்களிலும் அவரது கட்சித் தொண்டர்கள் மூலமாகவும்தான் கருப்பு எம்ஜிஆர் என்ற வார்த்தை விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர, பொதுமக்கள் யாருமே விஜயகாந்தை அப்படி அழைத்ததே இல்லை. காரணம் அவர்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு எம்ஜிஆர்தான்.. கருப்பு, சிவப்பு, பச்சை எம்ஜிஆர்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

    நடிகர்கள்

    நடிகர்கள்

    அவர் மட்டுமல்ல, அவருக்கு பிறகு வந்த எத்தனையோ பேர் எம்ஜிஆர் பெயரை அரசியல், சினிமாவில் பயன்படுத்தி கொள்ளதான் செய்தனர்.. ஆனால் எம்ஜிஆருக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்தது ஜெயலலிதா மட்டுமே. எனவே அடுத்த எம்ஜிஆர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய முடியுமே தவிர வேறு எந்த சக்தியாலும் அதை தீர்மானிக்க முடியாது.. ஏன் சம்பந்தப்பட்ட நடிகர்களின் செல்வாக்கே கூட அதை தீர்மானிக்க முடியாது என்பதே நிதர்சனம்.. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், பாஜகவும் எம்ஜிஆரை பிடித்து கொண்டுவிட்டது..

     டாக்டர் சரவணன்

    டாக்டர் சரவணன்

    அன்று எல். முருகன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டார்.. அதில், தீப்பற்றி எரிந்து முடியும் நேரத்தில் ஒரு புறம் பாஜக என்று வரும்.. இன்னொரு பக்கம் தாமரைமலர் எம்ஜிஆர் படமும் இடம்பெறும்.. இதற்கு அப்போதே சொந்த கூட்டணியில் இருந்த அதிமுகவினர் கொந்தளித்தனர்.. இப்போதும் மீண்டும் பாஜக எம்ஜிஆரை கையில் எடுத்துள்ளது.. இதற்கு அதிமுக என்ன சொல்ல போகிறது என்று தெரியவில்லை.. எம்ஜிஆருக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்பதா? அல்லது எம்ஜிஆருக்கும் காவி சாயம் என்று எடுத்து கொள்வதா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

    English summary
    Doctor saravanans bjp posters showing mass in madurai black mgr calls annamalai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X