முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10.40 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு தனது உடல் பரிசோதனையை மேற்கொண்டார். பின்னர் அவர், அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன் இன்ப நிதி உள்ளிட்ட குடும்பத்தினர் விரைந்து வந்தனர்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், மா.சுப்பிரமணியன் உள்பட அமைச்சர்களும், நிர்வாகிகளும் வருகை தந்தனர். அப்பல்லோ மருத்துவமனையில் லேசான தலைசுற்றல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- முதல்வர் ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படி வேறுசில பரிசோதனைகளை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்தவாறே உத்தியோகப்பூர்வ கடமைகளை முதல்வர் நிறைவேற்றுவார்.
முன்னதாக, இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ பணிகள் இயக்குனர் அனில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மு.க. ஸ்டாலின் வழக்கமான காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டிருக்கிறது. இந்த அறிகுறிகளை மதிப்பீடு செய்வதற்காக, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications