வெளியூர் பயணங்களை தற்காலிகமாக தவிருங்கள்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டாக்டர்கள் அன்புக்கட்டளை!
சென்னை: வெளியூர் பயணங்களை முடிந்தவரை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்களாம்.
அண்மையில் முதல்வருக்கு ஏற்பட்ட லேசான காய்ச்சல் குணமடைந்து விட்டாலும் கூட, உடனடியாக வெளியூர் சுற்றுப்பயணம் செய்தால் அதன் மூலம் அலுப்பு ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக இந்த அறுவுறுத்தலாம்.
இதனால் வரும் 26-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் செல்லவிருந்த திருச்சி மாவட்ட சுற்றுப்பயணம் கூட ஒத்தி வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

லேசான காய்ச்சல்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடந்த சனிக்கிழமை இரவு முதல் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் 4 நாட்கள் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு வீட்டில் ஓய்வில் இருந்தார். ஆனாலும் கூட அரசின் முக்கிய கோப்புகளை முகாம் அலுவலகமான தனது வீட்டில் இருந்தே கவனித்து அதன் மீது நடவடிக்கையும் எடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்நிலையில் நான்கு நாட்களுக்கு பிறகு நேற்று முதல் தனது வழக்கமான பணிகளை பரபரப்பாக கவனிக்க ஆரம்பித்துவிட்டார் முதல்வர்.

திருமண விழா
இதனிடையே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேத்தி திருமணத்தை தலைமை தாங்கி நேற்று நடத்தி வைத்த அவர், உடல் நலிவுற்ற சூழலிலும் இந்த திருமண விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தான் இங்கு வந்தேன் எனப் பேசினார். அப்போதே திருமண விழாவில் பங்கேற்றவர்கள் காய்ச்சல் குணமாகிவிட்டாலும் கூட இன்னும் முதலமைச்சருக்கு உடல் அலுப்பு தீரவில்லை போல், என தங்களுக்குள் முணுமுணுத்தனர்.

டாக்டர்கள் அறிவுறுத்தல்
தற்போது சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்குமாறும் வெளியூர் சுற்றுப்பயணங்களை 10 நாட்களுக்கு பிறகு வைத்துக் கொள்ளுமாறும் அன்பின் மிகுதியாலும், அக்கறையாலும் மருத்துவர்கள் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தி உள்ளார்களாம். இதனையே அவரது குடும்பத்தினரும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இதனால் வரும் திங்கள்கிழமை அன்று திருச்சிக்கு சுற்றுப்பயணம் செல்லவிருந்த முதல்வர் அதனை ஒத்திவைக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர் பயணம்
இந்த வாரம் மட்டும் தான் முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி வீட்டில் ஓய்வில் இருந்திருக்கிறார். இதற்கு முன் எல்லா வாரங்களும் வாரத்திற்கு இரண்டு மாவட்டங்கள் என தொடர் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கட்சிக்காரர்களையும், மக்களையும் பயணம் செய்து சந்திப்பது என்றால் மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications