பை பை அப்பா.. சிரித்தபடி அப்பாவுக்கு டாட்டா.. மறு நொடி ஆற்றில் குதித்த 21 வயது பெண்! உலுக்கிய வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜம்மு-காஷ்மீரில், தன்னுடைய அப்பாவிடம் போனில் பேசிய 21 வயது இளம்பெண், "பை பை அப்பா" என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டே, பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... கீழே குதித்ததுமே, அந்த பெண் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. என்ன நடந்தது?

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தை சேர்ந்தவர் பாயல் தேவி... 21 வயதான இவர், பாயல் நேற்று முன்தினம் உள்ளூரில் நடந்த திருவிழாவிற்கு சென்றிருந்தார்... அங்கு தனது அப்பா கிருஷ்ண லாலுக்கு போன் செய்து, தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், டாக்டரை சந்திக்க போவதாகவும் கூறியுள்ளார்.

Doda Woman Chenab River Bye Bye Papa

வண்டியில் சிக்கிய துப்பட்டா

அதன்படி டாக்டரை பார்க்க சென்றபோது, அங்கு டாக்டர் இல்லாததால் தனது கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாயலின் துப்பட்டா பைக்கின் சக்கரத்தில் சிக்கி விட்டது.. இதனால் அந்த நபர் வண்டியை நிறுத்தி துப்பட்டாவை எடுக்க முயன்றுள்ளார். அந்த நேரத்தில் பாயல் திடீரென அருகில் இருந்த பாலத்தை நோக்கி ஓடினார்..

"நான் தற்கொலை செய்து கொள்ளப் போறேன்" என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டே பாலத்தை நோக்கி ஓடினார்.. இதைக்கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, அவரை சமாதானப்படுத்தி, அங்கிருந்து வரும்படி கதறினார்கள்.. ஆனால் பாயல் கேட்கவில்லை.

பாலத்தின் ஓரம் இளம்பெண்

உடனே பாயலை பைக்கில் அழைத்து சென்ற நபர், என்ன செய்வதென்று தெரியாமல், பாயலின் அப்பாவுக்கு போன் செய்து நடந்ததை சொல்லியுள்ளார்.. உடனே தந்தையும் மகளிடம் போனில் பேசியுள்ளார்.

"என்ன நடந்தது? யாராவது உன்னிடம் ஏதாவது சொன்னார்களா? அல்லது உனக்கு ஏதாவது செய்தார்களா?" என்று அப்பா கேட்டுள்ளார். அதற்கு பாயல், அதெல்லாம் இல்லை அப்பா.. இது என் வாழ்க்கை. என் மனம் இப்படித்தான் செல்ல வேண்டும் என்று சொல்கிறது" என்று கூறியிருக்கிறார்..

பை பை அப்பா

மகளின் மனதை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று பதற்றத்துடன் அப்பா போனில் என்வென்னவோ பேசினார்.. ஆனால், அப்பா பேசிக்கொண்டிருந்தபோதே, "பை பை அப்பா" என்று சிரித்தபடி சொல்லி, செனாப் ஆற்றில் குதித்துவிட்டார் அந்த பெண்.

பிரேம் நகர் அருகே உள்ள இந்த பாலத்தில் பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. பாயல் பாலத்தில் நின்றிருந்த காட்சிகளும், சிரித்தபடி அவர் பை, பை சொன்னதும், அங்கிருந்தவர்கள் அவரைத் தடுக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

சிரித்தபடியே குதித்த பெண்

பாயல் ஆற்றில் குதித்ததும் போலீசார், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து ஆற்றில் தேடும் பணியை தொடங்கினார்கள்.. ஆற்றின் கரையோரம் மற்றும் தொடர்ந்து செல்லும் பகுதிகளிலும் தேடுதல் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை பாயல் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதற்கான தெளிவான காரணமும் இதுவரை தெரியவில்லை.

சிரித்தபடி கையசைத்து கொண்டிருந்த ஒரு இளம்பெண், சில நிமிடங்களிலேயே ஆற்றில் குதித்த சம்பவம் அப்பகுதி மக்களையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+