சரத்குமார் போட்ட போடு.. படக்குனு பார்த்த பாஜக.. கடுப்பில் அதிமுக.. சமக கூட்டணி யாருடன்? ஓ "அவங்களா"
சென்னை: எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வரும்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியும் இன்று தன்னுடைய முடிவை அறிவிக்க போகிறது. இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய தினம் சமக கூட்டம் நெல்லையில் நடக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில் சமகவின் சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களை இன்று நடக்கும் கூட்டத்தில் சரத்குமார் அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. அப்போது எம்பி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது யாருடன் கூட்டணி என்பது குறித்தும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமக: சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்தவரை, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டது. ஆனால், வரும் தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிட போகிறது என்று தெரியவில்லை. எனினும், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டதால், சமகவில் உள்ள ஒருதரப்பினர் அதிர்ச்சி அடைந்து, அதிமுகவில் இணைந்துவிட்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு, சமகவின் 17-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், சரத்குமார் பேசியபோது, "16 வருஷமா இந்த இயக்கத்தை நடத்தியிருக்கிறோம். சமத்துவம் இருந்தால் மட்டுமே இந்த நாடும் முன்னேறும், நாமும் முன்னேறுவோம் என்ற அடிப்படையில் தான் சமத்துவ மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.
தனித்து போட்டி: 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கஷ்டமோ, நஷ்டமோ சமத்துவ மக்கள் கட்சி தனியாக போட்டியிட வேண்டும்... மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
சரத்குமார்: அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, சரத்குமார் தந்த ஒரு பேட்டியில், "எம்பி தேர்தலைவிட சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் சமத்துவ மக்கள் கட்சி பணியாற்றி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தலிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட விரும்புகிறது. அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை" என்று கூறியிருந்தார்.
அதிமுக கூட்டணி: அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று மீண்டும் சரத்குமார் உறுதியாக கூறியிருந்ததால், ஒருவேளை, திமுகவுடன் இந்த முறை கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதோ? என்ற சந்தேகம் நிலவியபடியே உள்ளது..
அதற்கேற்றவாறு, திமுகவையும் சரத்குமார் அவ்வளவாக விமர்சிக்காமலும் வருவதால், கூட்டணி குறித்த சந்தேகம் அதிகரித்தது. இதற்குநடுவில் திமுக நடத்திய மகளிர்தின விழாவில், ராதிகா சரத்குமார் பங்கேற்று பேசியிருந்தது, நிலவிவந்த சந்தேகத்தை மேலும் வலுவாக்கியது.
போதாக்குறைக்கு பாஜகவையும் சரத்குமார் கடுமையாக விமர்சித்திருந்தார். "இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு கர்நாடகாவில் இருந்தாலும் தண்ணீர் தருவதாக இல்லை... ஒரு நாட்டுக்குள் இந்த பிரச்சினையை ஏன் தீர்க்க முடியவில்லை? இதில் மத்திய அரசு தலையிட்டு தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறார்களே.. அந்த ஒரே நாட்டில் இப்படியான பிரச்சினைகள் வருவது வேடிக்கையாக உள்ளது.
எம்பி தேர்தல்: வரப்போகும் எம்பி தேர்தல் குறித்து வருகிற டிசம்பர் 9-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் நாங்கள் அறிவிப்போம். பாராளுமன்ற தேர்தல் எப்படியும், பண நாயகமாக தான் இருக்கும். 100 கோடி: எம்பி தேர்தலில் நின்றால் ரூ.100 கோடி வேண்டும் என்கிறார்கள்... சட்டசபை தேர்தல் என்றால் ரூ.25 கோடி வேண்டும் என்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? என்று தெரியவில்லை என்று சாடியிருந்தார் சரத்குமார்.
ஆக, அதிமுகவுடனும் கூட்டணியில்லை.. பாஜகவையும் விமர்சித்து வரும்நிலையில், சமகவின் தேர்தல் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. எப்படி பார்த்தாலும், எம்பி தேர்தலில் சமக போட்டியிட வாய்ப்பிருக்காது என்றும், வரப்போகும் சட்டமன்ற தேர்தலையே எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
எதிர்பார்ப்பு: அதேசமயம், எம்பி தேர்தலில் யாருக்கு ஆதரவை தரப்போகிறது? அதிமுகவும் இல்லை, பாஜகவும் இல்லை என்றால், அப்ப "அவங்களா"??? தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்..
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications