பாக்யராஜ்ஜுக்கு பாஜகவின் "ரகசிய" அசைன்மென்ட்.. வெளுக்கும் சாயம்.. டக்கென திரும்பும் எடப்பாடி.. என்ன?
பாக்யராஜ் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தர காரணம் என்ன
சென்னை: அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், தற்போது இணைந்துள்ளார் பாக்யராஜ்... ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவும் தந்துள்ளார்.. இந்த சம்பவம் நடந்து 2, 3, நாட்கள் ஆனபோதும், அதன் பரபரப்பு இன்னமும் குறையவில்லை.
அதிமுக விவகாரம் 3 மாத காலமாக நடந்து, இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.. இருவரில் ஒருவர்கூட, விட்டுத்தருவது போலவும் தெரியவில்லை.
அரசியல் கட்சியின் உட்பிரச்சனைகளை, ஒரு நீதிமன்றம் தீர்த்து வைப்பது என்பது அந்த அளவுக்கு சுலபமில்லை.. அரசியல் கட்சி பிரச்சனைகளுக்கான தீர்வை, அரசியல் கட்சிக்குள்ளேதான் தேட முடியும் என்பதை நம்மால் மறுக்க முடியாது.

ஏடாகூடம்
எனினும் அப்பீலுக்கு சென்றுள்ளதால், அங்கு வரும் தீர்ப்பு மட்டுமே எடப்பாடி & ஓபிஎஸ் அரசியல் எதிகாலத்தை முடிவு செய்யக்கூடியதாக உள்ளது.. இதற்கு நடுவில், ஏராளமானோர் மெல்ல மெல்ல ஓபிஎஸ் பக்கம் தாவி வருகிறார்கள்.. அந்த வகையில், பாக்யராஜ்ஜும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்திருக்கிறார்.. எடப்பாடி & ஓபிஎஸ் என இரு அணிகளின் தாவல்களுக்கு இடையில், பாக்யராஜின் என்ட்ரி குழப்பத்தை தந்து வருகிறது.. அதிமுகவே இரண்டாக பிரிந்துள்ள நிலையில், இவர் ஏன் இப்போது என்ட்ரி தந்துள்ளார் என்ற சந்தேகமும் இன்னும் அடங்கவில்லை..

மேட்டர் 1
இதையடுத்து, பாக்யராஜ்ஜை வைத்து ஓபிஎஸ் பிளான் என்ன என்பது குறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம் சொன்ன கருத்து இவைதான்: "முதலில் இது ஓபிஎஸ் பிளான் என்பதே தவறு.. தென்மண்டலத்தில் பெருத்த செல்வாக்குடன் வலம் வரும் ஓபிஎஸ்ஸால், கொங்குவில் அப்படியான ஆதரவை பெற முடியவில்லை என்பது உண்மைதான்.. பாக்யராஜ் போல ஒரு கொங்கு பிரபலம், தன்னுடன் இருக்கும்போது, தன் தரப்பு நியாயங்களை கொங்கு மண்டலத்தில், பிரச்சாரம் செய்யவும், பாக்யராஜை களமிறக்கலாம் என்றெல்லாம் இது சம்பந்தமாக சோஷியல் மீடியாவில் தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்..

மேட்டர் 2
ஒருவேளை இந்த தகவல் உண்மையானால், ஓபிஎஸ்ஸுக்கு இதைவிட பெரிய மைனஸ் பாயிண்ட் வேறு எதுவும் இருக்க முடியாது.. பாக்யராஜை நம்பி, தன் ஆளுமையை கொங்குவில் நிரூபிக்க வேண்டிய நிலைமை இருக்குமானால், அது ஓபிஎஸ்ஸின் இத்தனை வருட அரசியலுக்குதான் சறுக்கலாக பார்க்கப்படும்.. எடப்பாடி + ஓபிஎஸ் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிப்பேன் என்று பாக்யராஜ் சொல்கிறார்.. இந்த காரணம் ஓரளவு உண்மையாக இருக்கலாம் அல்லது பாஜக மேலிடத்தின் உத்தரவு அல்லது மறைமுக தூண்டுதலின் பேரில் இப்படி சொல்லியிருக்க வாய்ப்புண்டு.. அந்தவகையில், "தூதராகவும்" பாக்யராஜ் களமிறக்கப்பட்டிருக்கலாம்.

மேட்டர் 3
பாஜகவை பொறுத்தவரை, எடப்பாடியின் தனித்துவத்தை ரசிக்கவில்லை என்றாலும், கட்சி பிளவுபடுவதை "இப்போதைக்கு" விரும்பவில்லை... கட்சி ஒன்றாக இருக்க வேண்டும், அதேசமயம், வலுவில்லாமலும் இருக்க வேண்டும் என்றே பாஜக கணக்கு போடுகிறது.. திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால், அது அதிமுகவால் மட்டுமே முடியும் என்பதை பாஜக ஆணித்தரமாக நம்புகிறது. எனவே, திமுகவை எதிர்க்க அதிமுகவின் பலம் மொத்தமாக தேவைப்படுகிறது.. மேலும், இவர்கள் 2 பேரும் பிரிந்து விட்டால் இலை முடங்கும் அபாயமும் உள்ளது.. இலை தான் கட்சியின் மூலவேர் என்பதால், அதை முடக்கும் அளவுக்கு போய்விடக்கூடாது என்பதே பாஜகவின் விருப்பமாக உள்ளது.

கட் அண்ட் ரைட்
அந்தவகையிலும் தன்னுடைய மறைமுக ஆதரவாளரான, பாக்யராஜை மேலிடம் அசைன்மென்ட் தந்து அனுப்பியிருக்கலாம்.. ஆனால், இதுவும் பலன் தராது.. காரணம், ஓபிஎஸ் உடன் இணைந்து கட்சியை செயல்படுத்த வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோர்ட்டிலேயே திட்டவட்டமாக சொல்லிவிட்டார்களே.. அதிமுகவின் பிரச்சனையை சரி செய்ய, ரஜினிக்கு அசைன்மென்ட் தரப்பட்டிருப்பதாகவும், ரஜினி தலைமையில் 3வது அணி அமைத்து தேர்தலுக்கு பாஜக தயாராவதாகவும் கடந்த வாரம் செய்திகள் கசிந்தன.. அது இப்போது என்னவானது? ரஜினியாலேயே இந்த கால அரசியலில் எதுவும் செய்ய முடியாத நிலையில், பாக்யராஜ் வந்து என்ன செய்ய போகிறார்?

அதிமுக + திமுக + பாஜக
அதனால் பாக்யராஜ் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்ததால், ஓபிஎஸ்ஸுக்கும் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.. பாஜகவுக்கும் எந்த பலனும் கிடைக்க போவதில்லை.. அதிமுகவுக்கும் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை.. மார்க்கெட் இழந்த 'ரிட்டையர் டைரக்டர்' என்பதால், பாக்யராஜ்ஜுக்கு வேண்டுமானால், மீடியா வெளிச்சம் மூலம் பலன் கிடைக்கும்.. அவ்வளவுதான்.. மற்றபடி, அடிக்கடியான அணி தாவல்களும், கட்சி தாவல்களும் ஒருவர் மீதான மொத்த நம்பிக்கையையும் அடியோடு குலைத்துவிடும்.. அந்தவகையில், அதிமுக + திமுக + பாஜக = என பல கலர்கள் பாக்யராஜ் மீதுள்ளதால், அவைகளின் சாயங்களும் என்றைக்கோ வெளுத்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை" என்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications