Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024 தேர்தலுக்கு பிறகுதான் ‘அவுட்’.. ஈபிஎஸ் பாஜக ரகசிய டீல்? விளக்கும் பத்திரிகையாளர் குபேந்திரன்!

பாஜக, எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறும் பிளானை செய்யக்கூடும், ஓபிஎஸ்ஸை இணைக்க பாஜக நெருக்கடி கொடுத்தால் நிச்சயம் அதற்கு முன்பே வெளியேறிவிடுவார் என நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அஸ்திரங்களை ஏவி வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக குழப்பமே தோல்விக்கு காரணம் என்கிறார்.

இனி பாஜக, எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்குமா? அதை ஈபிஎஸ் ஏற்பாரா என்பது பற்றி நம்முடன் பேசியுள்ளார் பத்திரிகையாளர் குபேந்திரன். அவரது பேட்டி வருமாறு:

ஈபிஎஸ் கணக்கு

ஈபிஎஸ் கணக்கு

கேள்வி : உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தது, இரட்டை இலை சின்னம் கிடைத்தது, பாஜக ஆதரவு இருக்கிறது, தேர்தலுக்கு 72 மணி நேரம் முன்னதாக பொதுக்குழு வழக்கிலும் சாதகமாக தீர்ப்பு வந்தது. இத்தனை இருந்தும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட் தான் வாங்க முடிந்தது, இவ்வளவு பெரிய வித்தியாசம் வந்துள்ளது, அப்படியென்றால் நீங்கள் எப்படி வலிமையான தலைவர் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் தரப்பு கேள்வியை முன்வைக்கிறதே?

குபேந்திரன் : இந்த தோல்வி என்பது இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கே உரிய பிரச்சனை. இரட்டை இலை சின்னம் ஜெயலலிதா இருந்தபோதும் தோற்றிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அவரை விட வலிமையான தலைவரா? ஈபிஎஸ் தான் கட்சியின் ஒற்றைத் தலைமையாக நிரூபிக்க வேண்டும், கட்சி என்னுடையது என்பதை காட்டுவதற்காக இந்த தேர்தலை பயன்படுத்திக்கொண்டார். இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். சுமார் 30 சதவீத வாக்குகளைப் பெற்றுவிடுவோம், வித்தியாசம் ஒரு 30 ஆயிரத்துக்குள் வரும் என எதிர்பார்த்தார். ஆனால், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வந்ததுதான் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி. ஒருவேளை, இந்த தேர்தலில் நாம் களமிறங்க வேண்டாம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம், ஜிகே வாசன் கட்சிக்கே சீட் கொடுத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி இந்தளவுக்கு செலவு செய்திருக்க வேண்டியதில்லை.

தந்திரங்கள்

தந்திரங்கள்

காங்கிரஸ் vs தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியாக இருந்திருக்கும். திமுக அமைச்சர்களும் இந்த அளவுக்கு இறங்கி வேலை செய்திருக்க மாட்டார்கள். இத்தனை பரபரப்பு இல்லாமல் எளிதாக இந்த தேர்தல் நடந்து முடிந்திருக்கும். எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக வேட்பாளரை நேரடியாக களமிறக்கி களத்தில் அனலைக் கிளப்பினார். இந்த முடிவு மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. இரட்டை இலை சின்னம் கைக்கு வந்துவிட்டது. கட்சியும் ஈபிஎஸ் கைக்கு வந்துவிட்டது. இதற்குப் பிறகு பொதுக்குழு கூட்டம் ஒன்றையும் நடத்தப்போகிறார்கள். தொண்டர்கள் வாக்களித்துத்தான் தேர்ந்தெடுக்க முடியும், அதிமுக சட்ட விதியை மாற்ற முடியாது என எத்தனை வாதங்கள் வைத்தாலும் அதையெல்லாம் அடித்து நொறுக்கி இன்று கட்சியை தனதாக்கியுள்ளார். அரசியல் என்றாலே பதவிக்கு வருவதற்கு பல நரி தந்திரங்களை செய்யவேண்டும், எடப்பாடி பழனிசாமி அதைத்தான் செய்தார். முடிந்தால், ஓபிஎஸ் தொண்டர்கள் பலத்தை வைத்து கட்சியைக் கைப்பற்றட்டுமே..

டிடிவி தினகரன் + ஓபிஎஸ்

டிடிவி தினகரன் + ஓபிஎஸ்

கேள்வி : ஓபிஎஸ் அணி போட்டியிடாமல் விலகியதால் தான் எடப்பாடிக்கு இந்த வாக்குகளே கிடைத்துள்ளது. ஓபிஎஸ்ஸும், தினகரனும் களத்தில் நின்றிருந்தால் எடப்பாடி அணி வேட்பாளர் இன்னும் அதிக வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருப்பார் என ஓபிஎஸ் அணியினர் விமர்சிக்கின்றனரே..

குபேந்திரன் : டிடிவி தினகரன், சின்னம் வழங்கப்படாததைக் காரணமாகக் காட்டி புத்திசாலித்தனமாக தப்பித்து விட்டார். ஓபிஎஸ் அணி தனியாக நின்றிருந்தாலும் 100 வாக்குகள் தான் வாங்கியிருக்க முடியும். கொங்கு மண்டலத்தில் அவர்களுக்கு எந்த பலமும் இல்லை. இந்த இடைத்தேர்தல் தென் மாவட்டங்களில் நடந்திருந்தால் இதைவிட பெரிய வித்தியாசத்தில் திமுக கூட்டணி ஜெயித்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

2 தொகுதி அண்ணாமலை டார்கெட்

2 தொகுதி அண்ணாமலை டார்கெட்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒற்றுமையாக இல்லாததே தோல்விக்குக் காரணம் என்று கூறியுள்ளார். அப்படி ஒற்றுமையாக இருக்க நினைப்பவர், மார்ச் 1ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சொன்னதுபோல, ஆளுங்கட்சிக்கு எதிரான ஒரு வலிமையான கூட்டணியை அமைக்க முயற்சிக்கலாமே? அவரும் ஏன் பாஜக போட்டியிட வேண்டும் என்று விரும்பினார்? கொங்கு மண்டலத்தில் அண்னாமலை அடுத்த எம்.பி தேர்தலில் நிற்பதற்கு தயார் செய்வதற்காகத்தான் எம்எல்ஏ சீட்டை பெற முயன்றார். நீலகிரிக்கு எல்.முருகன், கோவை அல்லது ஈரோட்டில் அண்ணாமலை. இந்த 2 தொகுதிகளையும் அண்ணாமலை தயார் செய்து கொண்டிருக்கிறார். இதை வைத்துத்தான் முதல் ஆளாக தேர்தல் பணிக்குழுவை நியமித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி முடிவுகளை அக்குவேறு ஆணிவேராக பிரித்து எடுத்தால் தான் பாஜகவின் உண்மையான வாக்குகள் எவ்வளவு என்று தெரியவரும். பாஜகவுடன் இருப்பதால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது.

பாஜக ப்ரஷ்ஷர்

பாஜக ப்ரஷ்ஷர்

கேள்வி : ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைய வேண்டும் என்ற குரலையே பாஜக தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த இடைத்தேர்தல் வெளிப்படுத்தி இருக்கும் செய்தியால் இனி அதை வீரியமாக வெளிப்படுத்துமா? எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக கூடுதல் அழுத்தும் கொடுக்குமா?

குபேந்திரன் : எடப்பாடி பழனிசாமி அடுத்து பொதுச் செயலாளராக அறிவித்துக்கொள்ளப் போகிறார். தமிழ்நாடு முழுவதும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களை நடத்துவார்கள். ஓபிஎஸ் நீதிமன்றம் நீதிமன்றமாகத்தான் அலைகிறார். ஓபிஎஸ் பக்கம் இருக்கும் தலைவர்களே ஈபிஎஸ் பக்கம் வரவும் ரெடியாக இருப்பார்கள். ஓபிஎஸ் உடன் இணைந்துதான் செயல்பட வேண்டும் என்று பாஜக நெருக்கடி கொடுத்தால், எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வெளியே வந்துவிடுவார்.

ரகசிய ஒப்பந்தம்

ரகசிய ஒப்பந்தம்

கட்சியை கண்ட்ரோல் செய்த சசிகலா, தினகரன் ஆகியோரே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது ஓபிஎஸ்ஸால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துள்ளார் ஈபிஎஸ். எனவே பாஜகவும் அதற்கு அழுத்தம் கொடுக்காது. அழுத்தம் கொடுத்தால் எடப்பாடி அதற்கான பதிலைக் கொடுப்பார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவுடன் தான் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறும் பிளானை செய்யக்கூடும். அதற்கு முன்பாகவே, அரசியல் சூழல்களால், தனியாக நின்று ஒரு 5 எம்பிகளையாவது ஜெயித்து பாஜகவுக்கு ஆதரவு தருகிறேன் என ரகசிய ஒப்பந்தம் போடலாம். அல்லது பெரிய தோல்விக்குப் பிறகு, கூட்டணி வொர்க் அவுட் ஆகாது என உணர்ந்து தனியாக நிற்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+