எடப்பாடிக்கு ‘போனஸ்’.. பின்னணியில் பாஜக மேலிடத்தின் ‘கை’! கர்நாடகாவை முன்வைத்து லிங்க்? ப்ரியன் பரபர
சென்னை : "அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்ததற்குப் பின்னணியில் பாஜகவின் தலையீடும், சில கர்நாடகா தேர்தல் செலவு கணக்குகளும் இருக்கின்றன" என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், "ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான மோதல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இப்போது வரை தொடர்கிறது. பெரும்பான்மையான வழக்குகளில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும், அதில் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லும் என்றும் ஐகோர்ட்டில் தீர்ப்பு வந்தது. ஓபிஎஸ் தரப்பில், அவர் தொண்டர்களின் மூலம் ஒற்றை வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவரை நீக்க முடியாது என்ற வாதத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

எதிர்பாராத முடிவு : கர்நாடகா தேர்தலை முன்வைத்து டெல்லி ஐகோர்ட்டை நாடி, அங்கிருந்து நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் தனக்கு சாதகமான உத்தரவைப் பெற முயன்றார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை ஊறப்போட்டு, இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்காது என்றே எதிர்பார்த்தோம். ஏற்கனவே கர்நாடகாவில் சுயேட்சையாக போட்டியிட்டதை சுட்டிக்காட்டி, இந்த முறையும் அதேபோல நிற்கலாம், இப்போது முடிவெடுக்க முடியாது எனச் சொல்லும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால், திடீரென அதிகாரிகள் ஆலோசித்துவிட்டு ஒரு சிறிய கடிதத்தில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டனர். இது உண்மையிலேயே அதிசயமான ஒரு விஷயம். இவ்வளவு விரைவாக தேர்தல் கமிஷன் முடிவெடுக்க வேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை. கர்நாடகாவை பொறுத்தவரை அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சியே கிடையாது, ஆனால், எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததோடு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் அனுமதி அளித்திருக்கிறது.

பாஜகவின் கை : இதில் நிச்சயமாக பாஜகவின் கை இருக்கிறது. பாஜக தலைமை சொல்லித்தான் தேர்தல் ஆணையம் இந்த முடிவை அறிவித்திருக்கும். ஏதோ ஒரு வகையில், கர்நாடகா தேர்தலுக்கும் - அதிமுகவுக்கும் - பாஜகவுக்கும் ஒரு லிங்க் இருப்பதாகவே நினைக்கிறேன். அதனால் தான் இந்த விவகாரம் மிக விரைவாக முடிவுக்கு வந்திருக்கிறது. இது இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறது. அதிமுகவுக்கும் - பாஜகவுக்கும் இடையேயான உறவு இன்னும் வலுவாகி இருக்கிறது.
அண்ணாமலை ஒருபக்கம் அதிமுக உடனான கூட்டணிக்கு எதிராகப் பேசிக்கொண்டிருந்தாலும், பாஜக - அதிமுக இடையேயான உறவு ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. பாஜக மேலிடம் அதிமுகவுடன் மிகவும் நெருக்கமாகவே இருக்கிறது. இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம், இவ்வளவு பிரச்சனைக்குரிய விஷயத்தில் விரைவாக இப்படி ஒரு முடிவு எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. நிச்சயமாக இதற்குப் பின்னணியில் பாஜகவின் தலையீடு இருக்கிறது.

கர்நாடகா - பாஜக அதிமுக லிங்க் : கர்நாடகாவில் அதிமுக தனியாகப் போட்டியிடுகிறது. அதனாலேயே இங்கும் பாஜகவோடு எதிர்த்து நிற்பதாக அர்த்தம் இல்லை. பாஜகவை எதிர்த்து அதிமுக அங்கு புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும்போது அதைப் பற்றி அண்ணாமலை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆக, இதற்குப் பின்னால் திரைமறைவில் பல வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. கர்நாடகா - அதிமுக - பாஜக இடையே ஏதோ நெருக்கம் இருக்கிறது.
இந்த நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி, போனஸாக, இரட்டை இலை சின்னத்தில் கர்நாடகா தேர்தலில் நிற்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த புள்ளிகளை எல்லாம் இணைத்து கோலம் போட்டால் ஒரு இடத்தில் லிங்க் ஆகும் என்பது எனது கருத்து." எனக் கூறியுள்ளார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications