பொண்டாட்டி வீட்டுக்கு போற கார், படக்குன்னு "அங்க" போய்டும்.. திமுகவின் "***" பிஜேபி: சீமான் தாறுமாறு
சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி வரும்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சீமான், திமுகவை விமர்சித்துள்ளது, இணையத்தில் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.. சீமான் பேச்சால் அதிர்ந்த திமுகவினர், திரண்டு சென்று, அதற்கு பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தபோது, அதிமுக விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு சீமான், அந்த கட்சியின் எதிர்காலம் குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது , என் கட்சியின் எதிர்காலம் குறித்து தான் சிந்திப்பேன் என்றார்.
தொடர்ந்து சீமான் பேசும்போது, நாங்கள் தேர்தல்களில் எப்போதுமே தனித்துதான் போட்டியிடுவோம். இதுவரை நடந்த தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை.. ஆனால், மக்கள்தான் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறார்கள்..

வேட்பாளர்: வரும் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும்... கடந்த பாராளுமன்ற தேர்தலில் இப்படி ஒரு அணியை உருவாக்கினார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தியை "பிரதமர் வேட்பாளர்" என்று ஸ்டாலின் அறிவித்ததால் அந்தக் கூட்டணி சிதறுண்டு போனது.. மறுபடியும், வரும் தேர்தலில் அதுபோல் ஒரு மாற்று அணியை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்...
மாற்று அணி : எப்போதுமே நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்... நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலுமே தனித்து போட்டிதான். தற்போதைக்கு என் தலைமையிலான கூட்டணிக்கு யாரும் வரமாட்டார்கள். பாஜகவை வர விடாமல் தடுக்க மாநில கட்சிகள் இணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும்" என்றார். அதற்கு செய்தியாளர்கள், "ஒருவேளை மாற்று அணி வந்தால் அதில் கூட்டணி அமைப்பீர்களா? என்று சீமானிடம் கேள்வி கேட்டனர்..
தனி ஒருவர்: அதற்கு சீமான், மாற்று அணி வந்தாலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம்... இருந்தாலும், அப்படி ஒரு சூழல் வந்தால் அந்த நேரத்தில் கூட்டணியில் சேரலாமா என்பது குறித்து சிந்திப்போம் என்றார். பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை கட்டமைக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியிருந்தது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.. அத்துடன், தேர்தல் சமயங்களில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல், "தனி ஒருவராகவே" வலம்வந்து கொண்டிருந்த சீமான், பாஜகவுக்கு எதிரான மாற்று அணி உருவானால், கூட்டணியில் சேர்வது பற்றி சிந்திப்போம் என்று கூறியுள்ளதும், வியப்பை தந்தது..

கட்சி ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகியும், இதுவரை ஒரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றதில்லை. எனினும், குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவுக்கு அக்கட்சி முன்னேறி வருவதை மறுக்க முடியாது. அதேசமயம், நடந்த தேர்தல்களில் ஒன்றில் கூட டெபாசிட் வாங்காததால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்..
எனவே, 10 வருடம் கழித்து, கூட்டணி என்ற விஷயத்தை சீமான் முன்னிறுத்தி பேசியிருந்தது மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.. ஆனால், யாருடன் கூட்டணி? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது.. காரணம், பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தில், திமுக + காங்கிரஸ் + விசிக + மநீம + கம்யூனிஸ்ட்கள் இப்படி பலரும் உள்ள நிலையில், இவர்களில் யாருடன் சீமான் கூட்டணி வைக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.. இப்போதைக்கு பாஜகவுக்கு எதிரான கூட்டணியை தேசிய அளவில் கட்டமைப்பதில், முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக உள்ளார்.. அப்படியானால், திமுகவுடன் சீமான் கூட்டணி வைப்பாரா? என்றும் தெரியவில்லை..
எப்படி பாஜகவின் பி டீம் என்று விமர்சனங்கள் வருகிறதோ, அதுபோலவே, திமுகவின் பிடீம் என்ற விமர்சனத்துக்கும் சீமான் ஆளாகி உள்ளதால், அவர் முன்வைத்துள்ள "மாற்று அணி" மிகப்பெரிய ஆர்வத்தை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்திவருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், நேற்றைய தினம் சீமான், திமுகவை பற்றி விமர்சித்திருப்பது மிகப்பெரிய அதிர்வலையை இணையத்தில் ஏற்படுத்தி வருகிறது. காரணம், பாஜக - திமுக இரு கட்சிகளுக்கும் கூட்டணி என்று கொளுத்தி போட்டுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர்களின் மீட்டர் கட்டணத்தை உயர்த்தவும், பைக், டேக்சியை தடை செய்யக்கோரியும் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடந்தது.. இதில் சீமான் கலந்து கொண்டு பேசும்போது, "திமுக - பாஜகவுக்கும் இடையே திரைமறைவில் தொடர்பு இருக்கிறது, பிரதமர் மோடி சென்னையில் வருகையின்போது அது வெளிப்படையாகவே புரிந்திருக்கும்.. காங்கிரஸை எல்லாருக்கும் தெரிஞ்சு கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க.. பிஜேபியை கள்ளக்காதலியா வெச்சிருக்காங்க.. பொண்டாட்டி வீட்டுக்கு கார் போகிறது போல் தெரியும், டபக்குன்னு திரும்பி அப்படியே திரும்பி கள்ளக்காதலி வீட்டுக்கு அந்த கார் போய்விடும்.. அதான் இவங்க'' என்று பேசியுள்ளார்.
இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளதுடன், விவாதங்களையும் கிளப்பி உள்ளது.. திமுக - பாஜக இடையே கூட்டணி என்று சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவின் சிவி சண்முகம் கொளுத்தி போட்டது மிகப்பெரிய பரபரப்பை அப்போது ஏற்படுத்தியிருந்த நிலையில், சீமானும் தற்போது அதையே தெரிவித்துள்ளார்.. இத்தனை நாட்களும் சீமான் தன்னுடைய பேச்சில் பாஜக, காங்கிரஸ், திமுக என தனித்தனியே விமர்சித்து வந்தார்.. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வாக்குகளையும் பிரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார் சீமான் என்றாலும், காங்கிரசும், பாஜகவும் ஒன்றுதான் என்று சொல்லி வருகிறார்..
குறிப்பாக, "இரண்டு கட்சிகள் இடையே கொள்கை ஒன்றுதான்.. ஆனால் கட்சிகள் மட்டுமே வேறு.. பணமதிப்பிழப்பீடு தவிர்த்து சிஏஏ, என்ஆர்சி, என்ஐஏ, ஜிஎஸ்டி, நீட் தேர்வு இவைகளை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் அவற்றை செயல்படுத்தியது பாஜக. 2 பேருமே பேராபத்தை நோக்கி நாட்டை நடத்துபவர்கள்" என்று மேடைக்கு மேடை சீமான் முழங்கி வரும்நிலையில், திடீரென இந்த கட்சிகளுடன் திமுகவையும் இணைத்து பேசியுள்ளது மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி கொண்டிருக்கிறது.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications