"பத்திக்கிச்சே".. சிக்கலே இனிதான்.. "பூதக்கண்ணாடி" பாஜக.. உதயநிதியை நோக்கி பாயும் கோரிக்கை இதுதான்
திராவிட சித்தாந்தம் வலுப்பெற உதயநிதி காட்சி ஊடகத்தை தவிர்க்க கூடாது என்கிறார்கள்
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கான பொறுப்பு இனிமேல்தான் அதிகமாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. அத்துடன், மிக முக்கிய பணி ஒன்று அவருக்காக உள்ளது என்றும் அக்கறையுடன் தங்கள் வேண்டுகோளை விடுத்துள்ளார்கள்.. என்ன அது?
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி என்பது கடந்த ஒரு வருட காலமாகவே, வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியாகும்.. ஒவ்வொருமுறையும் அதுகுறித்த செய்திகளும் மீடியாவில் இடம்பிடிப்பதும், பிறகு சத்தமே இல்லாமல் காணாமல் போவதும் தொடர்ந்து கொண்டே வந்தது.
கடந்த 3 நாட்களாகவே, உதயநிதிக்கு அமைச்சர் பதவி குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியானது.. இதையடுத்து சோஷியல் மீடியாவில் இதுகுறித்த விவாதங்களும் வெடித்தன. அந்தவகையில், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்பது குறித்து கருத்து கூறியிருந்தார்..

மாடல்கள்
குறிப்பாக, "ரவி போன்றவர்கள் ஆளுநராக தமிழகத்தில் உள்ள நிலையில்.. திராவிட மாடலுக்கும், குஜராத் மாடலுக்கும் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில்... மத்திய அரசு நம்மீது வைக்கப்படும் பார்வைகள் எல்லாமே தற்போது வித்தியாசமாக உள்ள நிலையில்.. காசி சங்கமத்தை நடத்துவது உட்பட அக்னிவலையில் திமுக அரசு சிக்கி உள்ள நிலையில், உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்படுவது சரியா? யாரை வேண்டுமானாலும் அமைச்சராக்குவதற்கு முதல்வருக்கு உரிமை உள்ளது.. ஆனால், கெடுபிடிகள் சூழ்ந்து வரும்போது, அவைகளை புரிந்து கொண்டு, சில விஷயங்களே நாம் தவிர்த்து விடலாமே?

ஓயாத விவாதம்
வாரிசுகள் வந்தால்தான், சித்தாந்தங்கள் நிலைத்திருக்கும்.. ஏன் அவசரம்? திராவிட இயக்கத்தின்மீது பற்று இருக்கும் காரணத்தினால் மட்டுமே நான் அச்சப்படுகிறேன்" என்று கூறியிருந்தார்... இந்நிலையில், இன்றைய தினம் உதயநிதி, அமைச்சராக பொறுப்பேற்ற பிறகும்கூட, விவாதங்கள் ஓயவில்லை.. இன்று காலை உதயநிதி பேட்டி தந்தபோது, மாமன்னன் தன்னுடைய கடைசி படம் என்று கூறியிருந்தார்.. இதுகுறித்து மீண்டும் தராசு ஷ்யாம், ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் உதயநிதிக்கு விடுத்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

சிறை சிக்கல்
"அமைச்சர் என்ற சிறையில்தான் உதயநிதி சிக்கி உள்ளார்.. துணை செயலாளர்கள், ஐஏஎஸ் என்ற சிறையில் அவர் சிக்குகிறார்.. அவரது சினிமா ரோல் மிக முக்கியமானது.. நாங்கள் எல்லாம் அன்று சினிமாவை பார்த்துதான், திராவிட சித்தாந்தத்தை கற்று வந்தோம்.. காட்சி ஊடகம் என்பது அந்த அளவுக்கு வலிமை நிறைந்தது.. திராவிட சித்தாந்தத்தை, திராவிட சித்தாந்தத்தின் வலிமையை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு, காட்சி ஊடகத்துக்கு உள்ளது..

எஸ்எஸ்ஆர்
உதயநிதி இவ்வளவு குறுகிய காலத்திற்குள் அமைச்சராக வேண்டுமா என்பது பொதுவான விமர்சனம் இருந்தாலும், எனக்கு அதை பற்றி கவலையில்லை.. குறுகிய காலத்திற்குள் யார் வேண்டுமானாலும் அமைச்சர் ஆகலாம்.. அதில் தவறில்லை.. ஆனால், இதில் என் பார்வை வேறுபடுகிறது.. திராவிட சித்தாந்தத்தில் உதயநிதி வகிக்கும் ரோல், மிக முக்கியமானது.. தற்போது, திராவிட சித்தாந்தத்தில் நிறைய இடர்பாடுகள் சூழ்ந்துள்ளன.. இதுபோன்ற நேரத்தில் காட்சி ஊடகம்தான் முக்கிய பங்கு வகிக்கும்..

நாடோடி மன்னன்
எம்ஜிஆருக்கு பல படங்கள் புராண படங்களாக இருந்தாலும், 1952-க்கு பிறகுதான் மெல்ல மெல்ல எம்ஜிஆர் பிம்பம் மாற ஆரம்பித்தது.. நாடோடி மன்னன் படத்துக்கு பிறகு, அந்த பிம்ப உயர்வு என்பது மிக அதிகம்.. அது பல வகைகளில் திமுகவுக்கும், திராவிட சித்தாந்தத்துக்கும் உதவியாக அப்போது இருந்தது.. இத்தனைக்கும் எம்ஜிஆர் அப்போது கடவுள் மறுப்பாளர் கிடையாது.. இருந்தாலும், எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர் போன்றோர்கள் மிகப்பெரிய பரிமாணங்களாக இருந்தார்கள்.. அப்படி ஒரு பரிமாணம்தான் இப்போது இங்கு காட்சி ஊடகத்திற்கு தேவையாக இருக்கிறது..

முகம் தனிமுகம்
இளைஞர்களை கவர்ந்திழுத்தும் பல தகவல்களை இன்று சொல்ல வேண்டி உள்ளது.. அப்படி தகவல் சொன்னால்தான், 10 பேரில் 2 பேருக்காவது அந்த தகவல் போய் சேரும்.... இதற்கு ஒரு முகம் தேவை.. இந்த முகம் உதயநிதியிடம் உள்ளது.. இளைஞர் அணிக்கு உதயநிதி தவிர வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை.. இவர்தான் பொருத்தமானவர்.. இளைஞர் அணியின் தேவை திமுகவுக்கு மிகவும் உள்ளது.. பாஜகவின் ஆபத்து, இன்றைய அதிமுக நிலை இவைகளை எல்லாம் வைத்து பார்க்கும்போது, இன்றைக்கு திராவிட சித்தாந்தத்தின் ஒரே நம்பிக்கை திமுக மட்டும்தான்..

திரைப்பிம்பம்
அதற்கு உதயநிதி என்கிற திரைப்பிம்பம் உதவியாக இருக்கும். சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று உதயநிதி உறுதியாக சொன்னாலும், சித்தாந்தங்கள் நிலைத்து நிற்க காட்சி ஊடகத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.. பக்தி இலக்கிய சித்தாந்தங்கள் என்றாலும்கூட, நாயன்மார்களும், ஆழ்வார்களும் தேவைப்படுகிறார்கள்.. சமுதாய சித்தாத்தங்கள் என்றாலும், பெரியார்களும், அண்ணாக்களும் இன்றும் தேவை.. இவர்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் யார் என்று பார்த்தால், எம்ஜிஆர் மாதிரி, எஸ்எஸ்ஆர் மாதிரி, உதயநிதி மாதிரி போன்றோர்கள்தான்.. இன்றைய சூழலில், உதயநிதியின் இந்த ரோலை வகிப்பதற்கு வேறு யாரும் இல்லை..

எம்ஜிஆர்
திமுக அரசின் பல திட்டங்களை பூதக்கண்ணாடி வைத்துகொண்டு எதிர்க்கட்சிகள் பார்த்து வருகின்றன.. குறிப்பாக, எந்த திட்டத்தின் ஃபைல்களும் எளிதில் நகர்வதில்லை, கிடப்பிலேயே உள்ளது என்ற விமர்சனமும் குறையும் திமுக மீது உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், உதயநிதியின் அமைச்சர் பதவியானது, திட்டங்களை விரைவுப்படுத்த உதவும்.. திமுக மீதான குறைகளை களைக்க, உதயநிதியின் செயல்பாடு அமையும்.. ஆனாலும், காட்சி ஊடகத்தில் அவரது பங்களிப்பு இனி நிறையவே உள்ளது" என்றார்... ஆக, உதயநிதி சினிமாவை விட எக்காரணத்தை கொண்டும் கைவிடக்கூடாது என்பதே பலரது விருப்பமாக உள்ளது.. இந்த விருப்பத்தின் அடிப்படையில்தான், சுடச்சுட விவாதங்களும், கருத்துக்களும், இணையத்தில் வலம்வருகின்றன..!!
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications