சி.எஸ். பார்த்துக்குவார் அண்ணே.. சட்டென சொன்ன ஸ்டாலின்? கிளம்பி சென்ற துரைமுருகன்? என்ன சொல்றீங்க?
சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் ரூ.89.18 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ரூ.908 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளது. சிங்கப்பூர்,இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக திமுக MP ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதை கணக்கில் வைத்தே ₹89.18 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன மற்றும் ₹908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி ஒப்புதலை பெறாமல் வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கியது தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடு சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இது தொடர்பான தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார். பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

சிங்கப்பூர் பயணம்: முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில், துரைமுருகன் சிங்கப்பூர் சென்றுள்ளார். வேலூரிலிருந்து சனிக்கிழமை சென்னை திரும்பிய அமைச்சர் துரைமுருகன், ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சிங்கப்பூர் சென்றுவிட்டார். புதன் கிழமை வரை சிங்கப்பூரில் இருக்கும் அவர், வியாழக்கிழமை சென்னை திரும்புகிறார்.
வழக்கமான உடல் பரிசோதனைக்காக துரைமுருகன் சென்றிருப்பதாக அவரது தரப்பினர் சொல்லப்பட்டு வரும் நிலையில், ஜெகத்ரட்சகன் சம்மந்தப்பட்ட விவகாரமாக சிலரை சந்திக்க சென்றதாகவும் ரகசிய தகவல்கள் கிடைக்கின்றன. அந்த சந்திப்புக்கு பிறகு தேவைப்பட்டால் ஜெகத்தும் சிங்கப்பூர் செல்லக்கூடும் என திமுக மேல்மட்டத்தில் தகவல் பரவியுள்ளன.
சிங்கப்பூர் நிறுவனத்தில் பிஸ்னெஸ் டீலிங் வைத்ததில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியை பெறவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு ஜெகத்துக்கு 908 கோடி ரூபாய் அபராதத்தை சமீபத்தில் விதித்தது அமலாக்கத்துறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, திமுகவின் கட்சி பணிகளை ஒருங்கிணைக்க குழு அமைத்தது போல, அமெரிக்காவில் தான் தங்கியிருக்கும் நாட்களில் ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என ஸ்டாலின் சொல்லியிருந்தாராம்.
குறிப்பாக துரை தலைமையில் உதயநிதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் கொண்ட மூவர் குழு அமைக்கப்படும் என சொல்லப்பட்டதாம். ஆனால், எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சு, அதைத் தொடர்ந்து துரைமுருகனின் பதிலடி என சர்ச்சைகள் வெடித்ததால் துரை மீது கோபமாக இருந்தார் ஸ்டாலின். அதனால் நிர்வாக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது பற்றி யோசிக்கவில்லை.
குழு அமைக்கவில்லை: ஆனால், அமெரிக்காவுக்கு புறம்படும் முன்பு, தலைமைச் செயலாளரிடம், 'உதயநிதியிடம் கலந்து பேசி நீங்க முடிவெடுங்க. சிக்கலான பிரச்சனையில் என்னை கலந்து பேசாமல் முடிவெடுக்கக் கூடாது' என அட்வைஸ் செய்து விட்டுச் சென்றார் ஸ்டாலின். துரை தலைமையில் குழு அமைப்பதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இருந்திருக்கிறது. ஆனால், அதிகாரிகள் தான் அதனை தடுத்து விட்டனர். இந்த நிலையில், ஒருங்கிணைப்புக் குழு குறித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்டாலினிடம் துரைமுருகன் பேசியதாகவும், அதற்கு ஸ்டாலின், 'சி.எஸ். பார்த்துக்குவார் அண்ணே ! ' என்று ஒற்றை வரியில் சொன்னதாகவும், அந்த கோபத்தில்தான், நாமும் வெளிநாடு போவோம் என முடிவு செய்து பறந்து விட்டார் என்றும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications