எடப்பாடியை ‘குறி’ வைக்கிறதா ஈடி? யார் இந்த இளங்கோவன்? இதில் வைத்தியலிங்கம் சிக்கியது ஏன்?
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான வைத்தியலிங்கத்திற்குத் தொடர்பான இடங்களில் அதிரடியாக ஈடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து கடந்த மக்களவைத் தேர்தலில் பலாப் பழ சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் கடைசி நேரம் வரை இரட்டை இலை சின்னம் தனக்குக் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு, இறுதிக் கட்டத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

பலரும் அவர் பாஜக தாமரை சின்னத்தில் நிற்பார் என்றே நினைத்தனர். பாஜகவும் அதையே விரும்பியது. ஓ.பி.எஸ் அதிமுகவிலிருந்து தான் வெளியேற்றப்பட்டது கட்சி விதிமுறைக்கு விரோதம் என வாதிட்டு வழக்குப் போட்டுள்ள நிலையில், அவர் பாஜக சின்னத்தில் போட்டியிட்டால் தனது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் என்றே அவர் சுயேச்சையாக நிற்கும் முடிவை எடுத்திருந்தார்.
ஒபிஎஸ் அணியின் மிகத் தீவிரமான ஆதரவாளரான வைத்தியலிங்கம், சில வாரங்கள் முன்னதாகக் கூட '2026 டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணைந்துவிடும். அதற்காக வேலைகள் நடந்து வருகின்றன' என்று சூசகமாகப் பேசி இருந்தார். இந்நிலையில்தான் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்தியலிங்கத்தின் மீதே ஈடி விசாரணை தொடங்கியுள்ளது. இது எப்படி சாத்தியம்? பாஜக அணியில் உள்ளவர் மீது ஏன் ரெய்டு நடத்த வேண்டும்? எனப் பலரும் பல வழிகளில் யோசிக்கத் தொடங்கி உள்ளனர்.
ஆனால், இந்த ரெய்டு மறைமுகமாக எடப்பாடிக்கு வைக்கப்படும் செக் என்றும் அதை வைத்தவரே ஓபிஎஸ்தான் என்றும் ஒரு தகவலை கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். வைத்தியலிங்கத்தின் இடங்களில் நடக்கும் ரெய்டுக்கும் எடப்பாடிக்கும் என்ன தொடர்பு? அது பற்றி குபேந்திரன் பேசுகையில், "2011 முதல் 2016 வரையான காலகட்டத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது 28கோடி ரூபாய் லட்சம் பெற்றதாகப் புகார் பெறப்பட்டது. அதை அறப்போர் இயக்கம் கொடுத்தது.
ஆனால், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுகவும் அமைதியாகவே இருந்தது. திடீரென்று தூசி தட்டி முதல் தகவலறிக்கை பதியப்பட்டது. அப்போதே ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிருப்தி. அவர் ஆள் மீது கைவைப்பதாக என வருத்தப்பட்டார்.
லட்ச ஒழிப்புத்துறை போட்ட வழக்கைத்தான் அமலாக்கத்துறை இப்போது கையில் எடுத்துள்ளது. சுமார் விஜிலென்ஸ் 10 லட்சம் வரையான புகாரைத்தான் விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது. அதற்கு மேல் தொகை அதிகரித்தால் அமலாக்கத்துறை வழக்கைக் கையில் எடுத்துவிடும். பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள வைத்தியலிங்கத்தின் மீது பாஜக அரசு கைவைத்துள்ளது எனப் பலரும் பேசுகிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி மீதே ஈடி குறிவைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. இது நேரடியாக நடக்கவில்லை. எடப்பாடியின் நிழல் மீது பாஜக அரசு குறிவைத்துள்ளது.
கடந்த 22 ஆம் தேதி கோவை சிறுமுகை பகுதியில் அமைத்துள்ள 3 பேப்பர் மில் நிறுவனங்களில் ஐடி ரெய்டு நடந்துள்ளது. இதில் ஒரு கம்பெனியின் உரிமையாளர் பால சுப்பிரமணியம். இவர் யார்? மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தலைவராக இருந்த சேலம் இளங்கோவனின் சம்பந்திதான் இவர். இவரது மகள் மோனிகாதான் இந்த பேப்பர் கம்பெனியின் இயக்குநர். சரி, ஏதோ வருமான வரி ஏய்ப்பு இருக்கும். ஆகவே சோதனை நடத்தப்பட்டுள்ளது எனப் பலரும் கடந்துபோய்விட்டார்கள். அங்கேதான் ஒரு முக்கியமான திருப்பம் இருக்கிறது.
இந்த நிறுவனத்தைப் பால சுப்பிரமணியம் எப்போது தொடங்கினார்? அது முக்கியமான கேள்வி. இந்த ஐடி சோதனை தொடர்ந்து இளங்கோவன் மகன் பிரவீன் சேலம் முசிறியில் நடத்தி வரும் எம்ஐஐடி கல்லூரியிலும் வருமான வரி சோதனை நடந்துள்ளது. கடந்த 10 நாட்கள் முன்னதாக தான் எடப்பாடி பழனிசாமி அந்தக் கல்லூரியின் ஆண்டு விழாவில் போய் பங்கேற்றார். எடப்பாடி ஊடகத்தைச் சமீபத்தில் சந்தித்துப் பேசிய போது இந்த இளங்கோவன் அருகில்தான் அமர்ந்திருந்தார்.
சரி, பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள வைத்தியலிங்கத்தின் மீது ரெய்டு நடத்துகிறார்கள். இதே திமுக ஆட்சியில்தான் வேலுமணி, தங்கமணி, வீரமணி, கே.பி.அன்பழகன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் என 10 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. வைத்தியலிங்கம் மீது 28 கோடிதான் லஞ்சப் புகார். ஆனால், இந்த 10 பேர் மீது அதைவிடப் பல கோடிகள் அதிகம் லஞ்சம் பெற்றதாக வழக்கு உள்ளது.
அப்படி எனில் இந்த 10 பேர் மீது என் அமலாக்கத்துறை சோதனை செய்யவில்லை? அங்குதான் சந்தேகம் வருகிறது இல்லையா? அது ஏன் என்பது தெரியவந்துள்ளது. ஓபிஎஸ் பக்கம் நின்று பாஜகவை ஆதரித்து வந்த வைத்தியலிங்கம் இபிஎஸ் பக்கம் தாவத் திட்டம் போட்டிருந்தார். இவருக்கு வேலுமணி மீதுதான் வருத்தம். அதற்காக எடப்பாடியைப் பகைத்துக்கொள்வது நல்லது அல்ல என்றும் ஆகவே இபிஎஸ் அணிக்கு தாவிவிடடலாம் என்றும் முடிவு எடுத்திருந்தார். அதற்கு செக் வைக்கத்தான்"என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய குபேந்திரன், "சேலம் இளங்கோவன் மீது சோதனை நடத்தியதே கிட்டத்தட்ட எடப்பாடி மீது நடத்தியதாகவே அர்த்தம். ஏனென்றால் பணமதிப்பிழப்பு போது கூட்டுறவு வங்கிகளின் மூலம் செல்லாது போன பணத்தை எல்லாம் இளங்கோவன் மூலமாக எடப்பாடி கைமாற்றினார் என்று ஒரு புகார் முன்னதாகவே பேசப்பட்டு வருகிறது. இளங்கோவன் எடப்பாடி பினாமி என்று ஊருக்கே தெரிகிறது.
சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி யாருக்கு விட்டுக் கொடுத்தார்? இந்த இளங்கோவனுக்குத்தான். முதலில் ஐடி மூலம் இளங்கோவனிடம் வாக்குமூலம் பெற பாஜக அரசு முயல்கிறது. அதன் பின்னர் ஈடி வரும். அது பழனிசாமியை டார்கெட் செய்யும்" என்கிறார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி











Click it and Unblock the Notifications