எடப்பாடி கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்.. முதல் டார்கெட்டே அவங்கதானாம்! "ஜெ. ஸ்டைல்" - சீனியர்கள் ‘கிலி’!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற கையோடு முக்கியமான வேலையில் இறங்கப்போகிறாராம் எடப்பாடி பழனிசாமி. ஒருவழியாக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியை வளர்க்கும் பணிகளில் இனி தீவிர கவனம் செலுத்தப்போகிறாராம்.

அதற்காக, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பட்டியலில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். வேகமில்லாமல் சுணக்கமாகச் செயல்படும் சீனியர்கள் பலரை தூக்கியடிக்கப்போகிறாராம் ஈபிஎஸ்.

கட்சியில் இளம் ரத்தத்தைப் பாய்ச்சும் வகையில், பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களாகவும், தலைமைக் கழகப் பொறுப்பிலும் இருக்கும் சீனியர்களின் மா.செ பதவியை இளம் நிர்வாகிகளுக்கு வழங்கப் போகிறாராம்.

அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுக பொதுச் செயலாளர்

கடந்த 9 மாதங்களாக இந்தா அந்தா என இழுத்துக் கொண்டிருந்த பொதுச் செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமியின் கைக்கு வந்துவிட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, அதிமுகவை நடத்தும் இடத்திற்கு வந்துவிட்டார் ஈபிஎஸ். முன்பு ஒவ்வொரு அறிவிப்புக்கும், ஓபிஎஸ்ஸின் கையெழுத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, இனி தனது ஒரே கையழுத்தில் கட்சியில் யார் தலையெழுத்தையும் மாற்றும் அதிகாரத்தைப் பெற்றுவிட்டார். இதனால், பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றது முதலாகவே கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

கண்கூடாக

கண்கூடாக

பதவியில் அமர்ந்தால் மட்டும் போதுமா? அதிமுக தான் தலைமையேற்ற பிறகு பெரிய அளவில் வளர்ச்சியைக் காண வேண்டும் என்ற ஐடியாவில் இருக்கிறாராம் ஈபிஎஸ். இத்தனை மாதங்களாக காபந்து பதவியில் இருந்தால், கட்சி நிர்வாகிகளை கண்டிக்க முடியாத சூழலில் இருந்தார் ஈபிஎஸ். சீனியர்கள் பலர் தங்கள் இஷ்டத்திற்குச் செயல்பட்டு வந்தனர். தங்கள் ஆதரவால் தான் ஈபிஎஸ் ஒற்றைத் தலைமையாக இருக்கிறார் என்ற மிதப்பில் இருந்து வந்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளின்போதே இதைக் கண்கூடாக உணர்ந்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. பல மாஜி அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியின் பேச்சையே கேட்கவில்லையாம். அப்போதே, பொதுச் செயலாளர் தேர்தல் முடியட்டும் என பல்லைக் கடித்துக்கொண்டாராம் ஈபிஎஸ்.

மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள்

இப்போது பதவி கைக்கு வந்துள்ள சூழலில், விரைவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். தலைமைக் கழக பதவிகளில் இருக்கும் சீனியர்கள் பலர் மாவட்ட செயலாளர்களாகவும் இருக்கிறார்கள். இப்படி சிலர் நான்கைந்து பதவிகளைக் கூட வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா இருக்கும்போது மாவட்ட செயலாளர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களாக இருப்பது கட்சிக்கு பண பலம் அடிப்படையில் உதவும் என்பதால் புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் பொறுப்புகளுக்கு கொண்டு வராமல் இருந்தனர் ஈபிஎஸ் ஓபிஎஸ்.

பதவி பறிப்பு

பதவி பறிப்பு

இப்போது ஒற்றைத் தலைமையாக முடிசூடியுள்ள எடப்பாடியார், பல மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகளில் அதிருப்தியில் இருக்கிறாராம். பல்வேறு மாவட்டங்களில் கட்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாம். சீனியர் புள்ளிகளின் அலட்சியம் காரணமாக துடிப்பான நிர்வாகிகள் பலர் இந்த சில ஆண்டுகளில் திமுகவுக்குச் சென்றுள்ளனராம். இதனால், இளம் நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் எடப்பாடி பழனிசாமி அமர்த்தப்போவதாக பேச்சுகள் அடிபடுகின்றன. தலைமைக் கழக பொறுப்புகளில் இருக்கும் சீனியர்களின் மா.செ பதவிகள் விரைவில் பறிக்கப்படக்கூடும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

துணிந்து இறங்குவாரா

துணிந்து இறங்குவாரா

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கட்சியை அனைத்து மட்டங்களிலும் பலப்படுத்தும் திட்டத்தோடு இருக்கிறார் ஈபிஎஸ். பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதுமே முதல் அறிவிப்பே உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாகத்தான் வெளியிட்டார். கட்சியை பலப்படுத்தும் திட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் பலர் தூக்கப்பட்டு, துடிப்பான, பசையுள்ள நிர்வாகிகள் நியமிக்கப்படுவதுதான் அடுத்த ஸ்டெப்பாக இருக்கும் என்கிறார்கள் அதிமுகவினர். எடப்பாடி பழனிசாமி இந்த நடவடிக்கையில் துணிந்து இறங்குவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+