ஆஹா.. திமுகவை குறை சொல்றதுக்கு ஒன்னும் இல்லையா? அண்ணாமலைக்கே டஃப் தந்த எடப்பாடி பழனிசாமி.. புரியலயே
சென்னை: பாஜகவுக்கும் - அதிமுகவுக்குள்ளும் கள்ள உறவு இருப்பதாக திமுக தொடர்ந்து சொல்லி வருகிறது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால், அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியும், திமுகவை தூற்றுவதில் ஒரே மாதிரி இருக்கிறார்களாம்.
இந்த முறை கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.. மாநில தலைவர் என்பதால் கண்டிப்பாக ஜெயித்தாக வேண்டிய நிலைமை அண்ணாமலைக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டிலேயே பாஜக ஓரளவு செல்வாக்கு பெற்றது கோவை தொகுதிதான் என்பதால், இங்கு ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் அண்ணாமலைக்கு வந்துள்ளது.
நடைபயணம்: அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்குவை, திமுக தன் பக்கம் திருப்பிவரும்நிலையில், இந்த 2 கட்சிகளுக்கும் நெருக்கடியை தர வேண்டிய நிர்ப்பந்தம் அண்ணாமலைக்கு வந்துள்ளது. போதாக்குறைக்கு நடைபயணம் + பிரதமரின் ஸ்பெஷல் வருகை என கவனத்தை திருப்பியிருந்ததால், இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியும் அண்ணாமலைக்கு வந்துள்ளது.
அதனால்தானோ என்னவோ, வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, கோவை தொகுதி வெப்பமாய் அனலடித்து கொண்டிருக்கிறது.. இருக்கிற வெப்பம் போதாதென்று, அண்ணாமலையின் வெப்பநிலை பேச்சு, அதற்கு மேல் கொழுந்துவிட்டு கனன்றது.
அண்ணாமலை: தேர்தல் வியூகங்கள் குறித்து பாஜக நிர்வாகிகளிடம் அண்ணாமலை பேசும்போது, "கோவை ஒரு காலத்தில் மிகவும் குளுமையாக இருந்தது. இப்போது 2 முதல் 3 டிகிரிகள் வரை வெயில் அதிகரித்து விட்டது. இப்போது கோவையில் பைக்கில் போகவே முடியாத நிலைமை இருக்கிறது. எல்லாரும் மாஸ்க் இல்லாமல் வெளியே வர முடியாத அளவுக்கு தூசி அதிகமாகிவிட்டது.. இதுக்கெல்லாம் காரணம் திமுகான். இதையெல்லாம் மாற்றுவதற்காக மக்கள், பாஜகவை தேர்வு செய்வார்கள்" என்றார்.
கோவையில் வெப்பம் அதிகரிப்பதற்கு, திராவிட அரசுகள் தான் காரணம் என்று அண்ணாமலை சொன்னதை கேட்டு, கோவை மக்களே அப்போது கிறுகிறுத்து போய் குழம்பிவிட்டார்கள்.
இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சூழலியல் ஆர்வலருமான சுந்தர்ராஜன் பதிலடி தந்திருந்தார்.. "முதல் கேள்வி, ஒரு கட்சியால் ஒரு நகரத்தின் வெப்பத்தை 2 டிகிரி அதிகரிக்க முடியுமா? இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா உங்களுக்கு?
அறிவு இருக்கா?: உங்களுக்கு கொஞ்சமாவது அறிவியல் அறிவு இருந்தால், @IPCC_CHயின் அறிக்கையை படித்துப்பாருங்கள், உலக சராசரி வெப்பநிலை 1.45டிகிரி அதிகரித்துவிட்டதாக "ஐபிசிசி அறிவித்துவிட்டது.
"அதுசரி, உங்களுக்கு எப்படி தெரியும்? உங்க தலைவர்தான், "We have only changed, climate has not changed" என்று சொன்னவராச்சே. உங்களுக்கு எப்படி காலநிலை மாற்றம் பற்றியெல்லாம் தெரியும்? ஆத்மநிர்பர் பாரத் என்கிற பெயரில், மத்திய இந்தியாவில் உள்ள 1.75லட்சம் ஹெக்டர் காடுகளை பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்தவர்களுக்கு வெப்ப உயர்வை பற்றியெல்லாம் கவலை எதற்கு ?" என்று கடுமையாக சாடியிருந்தார்.
டஃப் பேச்சு: இப்போது விஷயம் என்னவென்றால், அண்ணாமலைக்கே டஃப் கொடுக்கும் வகையில் எடப்பாடி பேசியிருக்கிறார்.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ரூமிலிருக்கும் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி ரிப்பேர் ஆகிறதே" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
பாதுகாப்பு: அதற்கு எடப்பாடி, "இதுக்கு திமுக ஆட்சிதான் காரணம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது சிறப்பான பாதுகாப்பை வழங்கினோம்.. இப்போது, இந்த திமுக ஆட்சியில் வெப்பம் அதிகரித்து வருகிறது" என்றார்.
எடப்பாடியின் இந்த பதில்தான், தமிழக மக்களுக்கு குழப்பத்தை தந்து வருகிறது.. தமிழகம் முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு சொல்லிவரும் நிலையில், திமுக ஆட்சியால் தான் வெப்பம் அதிகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே எப்படி?
குழப்பம்: எப்போதுமே தேர்தலை நடத்துவது தேர்தல் கமிஷன்.. இந்த தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில்தான் வாக்கு எண்ணும் மையங்கள் இப்போதும் உள்ளன.. இதுகூட தெரியாமல், இதுக்கும் திமுக அரசுதான் பொறுப்பு என்கிறாரே எப்படி?" என்ற குழப்பம் எழுந்துள்ளதாம்.. ஏற்கனவே வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தால், எடப்பாடியின் இந்த பதில் அதற்கு மேல் தமிழகத்தை கிறுகிறுக்க வைத்து வருகிறதாம்..!!!
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications