"தங்கம்".. இப்படி போட்டு உடைச்சிட்டாரே.. "அவருக்கு" ஆயில் மசாஜ் நடக்குதாமே? ஆமா, ஓபிஎஸ் எங்கே காணோம்?
சென்னை: ஓபிஎஸ் எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று திமுகவின் மூத்த தலைவர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தி உள்ளார்..!
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.. அவருக்கு மொத்தம் 3 சாய்ஸ்கள் உள்ளதாக சொல்கிறார்கள்.

ஒன்று, அதிமுகவில் மறுபடியும் சேருவது அல்லது வேறு கட்சியில் இணைவது, இல்லாவிட்டால் தனிக்கட்சி தொடங்குவது.. இந்த வழிகளில் ஒன்றை மட்டுமே அவரால் தேர்ந்தெடுக்க முடியும். இதுவரை எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை.
தேர்தல் ஆணையம்: அதேசமயம், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு தந்த அங்கீகாரத்தினால், மிகவும் நொந்து போயுள்ளதாகவும் தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில், அவருக்கு உடல்நல பிரச்சனை உள்ளதாகவும், சிகிச்சையில் உள்ளதாகவும் செய்திகள் பரபரப்பாக வெளியாகி வருகின்றன. அதிலும், கேரளாவில் ரகசிய சிகிச்சையை எடுத்து கொண்டு வருவதாகவும் தகவல்கள் பரபரத்த நிலையில், இதுகுறித்து சில செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.
வழக்கமாக வருடந்தோறும் கேரளாவுக்கு சென்று பாரம்பரிய மூலிகை சிகிச்சை எடுத்துக்கொள்வது ஓபிஎஸ்ஸின் வழக்கமாம்.. ஆனால், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அதிமுகவுக்குள் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக சட்ட போராட்டங்கள் நடத்துவது, தொடர் ஆலோசனைகள் என்று எப்போதும் மிகவும் பிஸியாக இருந்து வந்த நிலையில், இப்போது மூலிகை சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கேரளாவுக்கு சென்றிருக்கிறாராம்..
ரகசிய சிகிச்சை: 10 நாட்கள் அங்கேயே தங்கி இருந்து விட்டு சிகிச்சை எடுத்துவிட்டு சென்னை திரும்ப உள்ளதாக சொல்கிறார்கள்.. இந்த சிகிச்சையின் மூலம் மன அழுத்தங்கள் குறைந்து உடலும் புத்துணர்ச்சி பெறும் என்கிறார்கள்..
ஆனால், கேரளாவுக்கு மூலிகை சிகிச்சைக்கு சென்றதை ரகசியமாக வைத்துள்ளாராம்.. ஆனால், மற்றொரு தரப்பிலோ, கேரளாவிலுள்ள கோவிலுக்கு ஓபிஎஸ் சென்றுள்ளார் என்கிறார்கள்.. இன்னொரு தரப்பிலோ, ஓபிஎஸ் பெங்களூர் சென்றுள்ளார் என்கிறார்கள்.. இப்படி வேறு வேறு தகவல்கள் வட்டமடித்து வரும்நிலையில், திமுகவின் தங்க தமிழ்செல்வன் விஷயத்தை போட்டு உடைத்துள்ளார்.
ஞாயிறு விழா: தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.. அப்போது, "வரும் ஞாயிறு அன்று போடிநாயக்கனூரில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பபட்டுள்ள முல்லை பெரியாறு- கொட்டக்குடி கூட்டுக் குடிநீர் திட்டத்தை துவக்கி வைக்க நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் வர உள்ளனர்" என்றார்.. இதற்கு செய்தியாளர்கள், போடி சட்டமன்ற உறுப்பினரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுமா? என்று கேட்டார்கள்.
உடனே தங்கதமிழ்செல்வன், "சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் விழாவிற்கு அவருக்கு அழைப்பு விடப்படும். ஆனால், வருவதும் வராமல் இருப்பதும் அவரது தனிப்பட்ட விருப்பம்.
ஆயில் மசாஜ்: போடி சட்டமன்ற தொகுதியில் ஜெயித்த பிறகு இதுவரை அவர் இங்கு எத்தனை முறை வந்துள்ளார்? தோற்றுப்போன நான் தான் அடிக்கடி போடிக்கு வந்து மக்கள் நல திட்டங்களைச் செயல்படுத்துகிறேன். 15 வருடங்களாக அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், போடிக்கு எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை.. போடி தொகுதியின் எம்எல்ஏ-வான ஓ.பன்னீர்செல்வம் தொகுதிக்குள் வராமல், இப்போது கேரளாவில் ஆயில் மசாஜ் செய்து வருவதாக தகவல் வந்துள்ளது" என்றார்.
ஒரே தொகுதிக்குள் மோதிக் கொள்பவர்கள் தங்க தமிழ்செல்வனும் - ஓபிஎஸ்ஸூம் ஆவார்.. போடி என்றில்லை, ஓபிஎஸ் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட போவது தங்க தமிழ்செல்வனாகத்தான் இருப்பார். இருவருமே சமபலத்துடன் அன்று ஜெயலலிதா அவையை அலங்கரித்தவர்கள்.. இருவருக்குமே சாதி ஓட்டுக்கள் கை கொடுத்தன.. இருவருக்குமே தொகுதிக்குள் செல்வாக்கு இருக்கின்றன.
விறுவிறு பணி: எனினும் கடந்த அதிமுக ஆட்சியில் படுவேகமாக வளர்ந்துவிட்ட ஓபிஎஸ்ஸை, தங்க தமிழ்செல்வனால் அவ்வளவு சுலபமாக வீழ்த்த முடியவில்லை.. ஆனால், கடந்த தேர்தலில் அபார வெற்றியை ஓபிஎஸ் பெறமுடியாத அளவுக்கு டஃப் தந்து கொண்டிருக்கிறார் திமுகவின் தங்க தமிழ்செல்வன்... விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அதற்கு இப்போதே தொகுதிக்குள் களப்பணியில் தீவிரமாக இறங்கி உள்ளாராம்..!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications