வெளியே நடந்த யோசிக்காத சம்பவம்.. இந்த விஷயம் செந்தில் பாலாஜிக்கு தெரியுமா? ஒரே குழப்பமாக இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில்.. திமுக உள்ளே நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

senthil balaji coimbatore

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலே செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்து வருவதாக அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், வங்கி ஆவணங்களை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு வருடமாக அவர் சிறையில் உள்ள நிலையில்.. இந்த வழக்கு அடுத்த 3 மாதங்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில்.. திமுக உள்ளே நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேயர் நீக்கம்: கோவையில் உள்கட்சி பூசல் இப்படி நெல்லை போல பட்டவர்த்தனமாக வெளியில் வரவில்லை. வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தேர்வாக கோவை மேயர் கல்பனா இருந்தார். கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயரான கல்பனாவுக்கு, சொந்த கட்சி சகாக்கள் மற்றும் கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேயரும், அவரது கணவர் ஆனந்தகுமாரும் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டினர்.

2023 அக்டோபரில் சின்னவேடம்பட்டியில் சாலைத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தை ஏற்க அவர் ஒப்புதல் வழங்கவில்லை என்று பல கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கோரிக்கைகளை அவர் மறுத்தாலும், சர்ச்சைகள் ஓயவில்லை. உண்மையில், கல்பனா தனது மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உயர் அதிகாரிகளை சந்தித்து தெளிவுபடுத்த சென்னையில் முகாமிட்டுள்ளார்.

கல்பனா உடல்நிலை மற்றும் பிற தனிப்பட்ட காரணங்களால் விலகினார் என்று கூறப்படுகிறது. இரு மாநகராட்சி கவுன்சிலர்கள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பகுதியில் உள்ள அதிகாரவர்க்கம் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களால் கலக்கமடைந்துள்ளனர்.

செந்தில் பாலாஜியின் சாய்ஸ்தான் இவர்.. இப்படி இருக்க இவர் பதவி விலகி உள்ளது சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+