ஐடி, என்ஜினீயர்களை விட அதிகம் சம்பாதிக்கும் ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்கள்? நெட்டிசன்கள் ரியாக்ஷன்
சென்னை: மாதத்திற்கு 50 ஆயிரம் வரை சம்பாதிப்பதாக ஸ்விக்கி, சோமேட்டோ டெலிவரி ஏஜெண்ட்கள் அளித்த பேட்டி இணையத்தில் வேகமாக டிரெண்ட் ஆகி வருகிறது. ஐடி ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட இது அதிகமாக இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
ஸ்விக்கி, சோமேட்டோ பொன்ற உணவு டெலிவரி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்து வருகிறார்கள். காலை முதல் இரவு வரை பைக்கில் ஒரு பையை வைத்துக் கொண்டு சாலைகளில் சிட்டாக ஸ்விக்கி, சோமேட்டோ உணவு டெலிவரி ஊழியர்கள் பறப்பதை பார்க்க முடியும். பிடித்த உணவுகளை பிடித்த ஹோட்டல்களில் வாங்குவதற்கு வெளியில் அலையாமல் வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வாங்கி கொள்ள முடியும் என்பதால் பலரும் ஆர்டர் போட்டு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இதனால், இந்த துறை அசுர வளர்ச்சியை கண்டு வருகிறது. உணவு டெலிவரி ஊழியர்களும் கடுமையாக உழைத்து வருமானம் ஈட்டுகிறார்கள். பலரும் பார்ட் டைம் ஆக கூட வேலை பார்ப்பதை பார்க்க முடிகிறது. விடிய விடிய வேலை பார்த்தாலும் கூட போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை எனவும் டெலிவரி ஊழியர்கள் சொல்வதையும் பார்க்க முடிகிறது.
அதேவேளையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்று ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்களிடம் பேட்டி எடுத்து அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது பற்றிய வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதோடு உணவு டெலிவரி ஊழியர்கள் பெறும் வருமானமும் நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
அதாவது ஒரு உணவு டெலிவரி ஊழியர் அளித்த பேட்டியில் மாதம் ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வருமானம் ஈட்டுவதாக கூறுகிறார். இது ஐடியில் வேலை பார்ப்பவர்களின் சராசரி சம்பளத்தை விட இது கூடுதல் தொகையாகும். அதிலும் ஒரு உணவு டெலிவரி ஊழியர் ஆறு மாதங்களில் 2 லட்சம் வரை சேமித்ததாக சொல்கிறார். சோமேட்டோ உணவு டெலிவரி ஏஜெண்ட் ஒருவர் கூறுகையில், நான் ஒரு நாளைக்கு 1,500 முதல் 2000 வரை வருமானம் ஈட்டுகிறேன்.
எனது வார வருமானம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை உள்ளது. மாதத்திற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிக்க முடிகிறது. எங்களுக்கு டிப்ஸ், ஊக்கத்தொகை ஆகியவை கிடைக்கிறது. மாதம் 5 ஆயிரம் வரை இந்த தொகை கிடைக்கிறது. எனவே எப்படியும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை எளிதாக கிடைக்கிறது. இதில் 30 ஆயிரம் ரூபாயை சேமிக்கிறேன்" என்றார்.
இந்த பேட்டிக்குதான் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை கொட்டி வருகிறார்கள். டெலிவரி செய்வதன் மூலமே இவ்வளவு வருமானம் ஈட்ட முடிகிறது என்றால்.. நான் ஒரு பைக் வாங்கிவிட்டு டெலிவரியில் இறங்கலாம் என இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், வாழ்க்கையில் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை எனக்கு இந்த வீடியோ உணர்த்துகிறது எனக் கூறியுள்ளார்.
ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்களுக்கு நிலையான சம்பளம் என ஒன்றும் இல்லை. அவர்கள் எவ்வளவு நேரம் உழைக்கிறார்களோ அதற்கேற்றார் போல வருமானம் ஈட்ட முடியும். முழு நேரப்பணி என்றால் குறைந்தது 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். பார்ட் டைம் என்றால் குறைந்தது 4 மணி நேரம் செய்ய வேண்டும்.
சோமேட்டோவில் ஒரு டெலிவரிக்கு 40 ரூபாயும் ஸ்விக்கியில் ரூ.20ம் கிடைக்கிறது. 5 கிலோ மீட்டர் ரேஞ்சுக்குள் இந்த தொகை கொடுக்கப்படும். இதற்கு மேல் உள்ள தொலைவிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10 கிடைக்கும் என்றும் அந்த யூடியூப் சேனலில் விவரிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications