Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கேட்டுச்சா".. பாமக பற்றி திருமாவளவன் நறுக்.. பாஜக புத்தி.. "அதை" எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது

திருமாவளவன் பாஜகவுடன் கூட்டணி என்று ஏன் சொன்னார் என்பதற்கு விளக்கம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை திமுக கூட்டணியில்தான் விசிக தொடர்ந்து பயணிக்கிறது என்றும், இந்த கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைக்கவே முடியாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் ஒருமுறை உரக்க சொல்லி, உறுதி செய்துள்ளார்.. அந்த வகையில், திருமாவளவனின் நெய்வேலி பேச்சு, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மேலும் உஷ்ணமாக்கி வருகிறது..

நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய சுரங்கங்களுக்கு கூடுதல் நிலத்தைக் கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

எனவே, என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும், கொடுக்கவிருப்போரும் உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

வேல்முருகன்

வேல்முருகன்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் போராட்டம் வலுப்பெறும் என விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இந்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்தனர்.. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, என்எல்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என வேல்முருகனும் கேட்டுக்கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார்.. அப்போது 2 விஷயங்களை திருமாவளவன் தன்னுடைய பேச்சில் தெளிவுபடுத்தினார்..

 சீன் மாறுது

சீன் மாறுது

ஒன்று, பாஜகவுடன் விசிக கூட்டணி வைக்கும் என்று ஊடகங்களில் வந்த செய்திகள் குறித்து விரிவாக பதிலளித்தார்.. மற்றொன்று, திமுகவுடன்தான் கூட்டணி, அதை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது" என்று மீண்டும் ஒருமுறை உறுதி செய்தார்.. திருமாவளவன் அந்த கூட்டத்தில் பேசிய பேச்சின் சுருக்கம்தான் இது: "வீடு நிலம் கொடுத்தவர்கள் இனி என்எல்சி நிறுவனத்திடம் பங்கு தொகைதான் கேட்கவேண்டும். என்எல்சி நிறுவனம் ஆண்டுக்கு 1000 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி வருகிறது. எனவே ஏக்கருக்கு 1 கோடி இழப்பீடு வழங்கினால் என்ன?

 பாயிண்ட் A

பாயிண்ட் A

இழப்பீடு எங்களுக்கு வேண்டாம் எங்கள் நிலத்தில் இருந்து எவ்வளவு நிலக்கரி எடுக்கப்படுகிறதோ அதில் பங்கு தொகை தான் இனி கேட்க வேண்டும். படிப்பு இல்லை என்று இங்கு உள்ள இளைஞர்களை என்எல்சி புறக்கணிப்பதா? எதுவும் தெரியாது என்று எங்களை புறக்கணிக்கக்கூடாது. உரிய பயிற்சியை கற்றுத்தாருங்கள்... வாய் சொன்னால் எங்கள் கை செய்யும். அதற்குரிய பயிற்சி தாருங்கள். Unskilled என்று சொல்லியே வேலையை மறுக்கிறார்கள்.. அரசியல் காரணங்களுக்காக கிடையாது.. கட்சிகளுக்காக கிடையாது.. விவசாயிகளுக்காக மட்டுமே இந்த பேரணியை நடத்தினோம்... ஒட்டுமொத்த தமிழகத்திலும் வடமாநிலத்தவர்கள் குவிந்து கொண்டு இருக்கறார்கள்.. இந்தி பேசும் மக்களை திரட்டுவோம் என மறைமுகமாக சதி போன்று உள்ளது. இதில் சதி உள்ளதாக தோன்றுகிறது.

 பாயிண்ட் B

பாயிண்ட் B

திமுகவும் இந்த 17 கோரிக்கைகளுக்கும் உடன்பட்டவர்கள் தான்... ஆனால், இந்த மேடை, திமுக அல்லாத மேடையாக இருக்கிறது என்பதால், இதை பற்றி கதை கட்டுவதற்காகவே குசும்பு ஊடகக்காரர்கள் சிலர் இருக்கிறார்கள்.. அவர்கள் என்ன கதை கட்டினாலும், இந்த கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைத்துவிட முடியாது.. சிதைத்துவிட முடியாது.. ஏனென்றல், நாங்கள் கொள்கை சார்ந்து ஒன்றிணைந்த கூட்டணியாக இருக்கிறோம்.. தனிப்பட்ட பாஜகவுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அது பேசும் அரசியலை எதிர்க்கிறோம்.. அதன் கொள்கையை எதிர்க்கிறோம்.. அவர்கள் கொள்கையை நாங்கள் விமர்சிக்கிறோம்.. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகத்துக்கே எதிரி என்று எங்களை திசைதிருப்புகிறார்கள்..

 அம்பு 1

அம்பு 1

பாமகவின் அணுகுமுறைகளை நாங்கள் விமர்சிக்கிறோம்.. அதற்காக நாங்கள் ஒட்டுமொத்த வன்னியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை.. அது தவறு.. பாஜகவை விமர்சிப்பதால், ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் நாங்கள் எதிரிகள் இல்லை.. பாமகவை எதிர்ப்பதால், ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் நாங்கள் எதிரிகள் இல்லை.. உழைக்கிற மக்கள் வேறு.. கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள் என்பது வேறு.. அவர்கள் பேசும் அரசியல் முரண்பாடாக இருப்பதால் விமர்சிக்கிறோம்.. அவ்வளவுதான்.. அப்படி நினைத்துதான் அன்று கிறிஸ்துமஸ் விழாவில் சொன்னேன், "பாஜக தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொண்டு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி போன்ற நிலைப்பாடுகளை எடுத்தால், பாஜகவுடனும் கைகோர்க்க எங்களுக்கு சிக்கல் இல்லை" என்று சொன்னேன்.

 அம்பு 2

அம்பு 2

உடனே திரிபுவாதிகள் வந்துவிட்டார்கள்.. "திருமாவளவன் பாஜகவுடன் கைகோர்க்க தயார்" என்று கிளப்பிவிட்டுள்ளார்கள்.. ஒன்று சொல்கிறேன், சிறுத்தை தன் உடம்பில் உள்ள கரும்புள்ளிகளை கூட மாற்றிக்கொள்ளுமே தவிர, பாஜக தன்னுடையை கொள்கையை மாற்றிக் கொள்ளாது.. பாஜகவின் சங்பரிவாரர்கள்ன் புத்தி ஒருபோதும் மாறாது.. அது சாதீயவாத புத்தி.. அது சனாதன புத்தி.. அது மாறவே மாறாது.. அந்த பாஜகவின் அரசின் கொள்கை, பேச்சுக்களைத்தான் எதிர்க்கின்றோம்... அதனால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை. அதேபோல் பாமகவின் அரசியலுக்கு எதிரானவர்கள் என்றாலும், ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் எதிரானவர்கள் இல்லை' என்றார் திருமாவளவன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+