Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹீரோ" வர்றார்.. "நம்பர் 1" மாநிலமாகுதா.. அடித்தாட பாஜக நினைத்தால்.. திமுக "பதிலடி" கொடுக்குதே.. பலே

உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய அசைன்மென்ட் ஒன்று தரப்பட்டுள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலூன்ற பல்வேறு வகைகளில் பாஜக தீவிரம் காட்டி வரும்நிலையில், அதற்கு நெருக்கடி தரும் வகையில், திமுக மேலிடமும் வேறு ஒரு கணக்கை போட்டு வைத்துள்ளதாம்.. இதனால் களம் தகிக்க துவங்கி உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, கல்வி, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை முன்வைத்து தி.மு.க மாணவரணி சார்பில் தேசிய மாநாடு நடந்தது.. சென்னையில் நடைபெற்ற இந்த தேசிய மாநாடு, அரசியல் வட்டாரத்தில் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது.
காரணம், கேரளா தொழில் மற்றும் சட்டத்துறை அமைச்சரான சிபிஎம் பி.ராஜீவ், திரிணாமுல் காங்கிரஸ் மஹுவா மொய்த்ரா, சிபிஐ கட்சியின் சந்தோஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் கன்ஹையா குமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதி, வழக்கறிஞர் அருள்மொழி இப்படி பலரும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்..

 ஹீரோ உதயநிதி

ஹீரோ உதயநிதி

இவர்கள் அனைவருமே, அந்த மாநாட்டில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தனர்.. "திராவிடவியல் கோட்பாடு", "திராவிட மாடல்" குறித்து அழுத்தமாகப் பேசிவரும் முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடலை இந்தியா முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும் என்று சொல்லிவரும் நிலையில், அந்த மாநாடு பலரது கவனத்தை ஈர்த்தது.. அதற்கு இன்னொரு காரணம், பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட அந்த மேடையின் ஹீரோவாக உதயநிதி முன்னிறுத்தப்பட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.. இந்தியாவிலேயே பாஜக எதிர்ப்பு உணர்வு மேலோங்கிய மாநிலமாக தமிழ்நாடு இருந்துவருகிறது...

 எதிர்ப்பு வலை

எதிர்ப்பு வலை

கடந்த எம்பி தேர்தலிலும் சரி, சட்டமன்றத் தேர்தலிலும் சரி, திமுக கூட்டணி வெற்றிபெற்றதற்கு பாஜக எதிர்ப்பு உணர்வு முக்கியக் காரணம்.. அதனால்தான், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாகவும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று திமுக விரும்புகிறது... அந்தவகையில், தமிழகத்தில் நிலவும் பாஜக எதிர்ப்பு வலையை மேலும் வலுப்படுத்துவதற்காகவே, தன்னுடைய மாணவரணியையும் இளைஞரணியையும் திமுக தலைமை களமிறக்கியிருப்பதாக சொல்லப்பட்டது..

 குறி வெச்சாச்சு

குறி வெச்சாச்சு

அப்போதே பாஜகவுக்கு எதிரான பிரச்சார பீரங்கியாக உதயநிதியை திமுக கருத துவங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.. மதுரையில் அன்று ஒரு செங்கலை எடுத்துக்காட்டி, பாஜகவை அலறவைத்த நிலையில், பாஜகவுக்கு எதிரான அரசியலை சிறப்பாக செய்யக்கூடியவர் உதயநிதி என்ற நம்பிக்கையும் திமுக தலைமைக்கு இருந்து வருவதாக சொல்கிறார்கள்.. அதற்கான அடுத்த அதிரடிதான் தற்போது கையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. எம்பி தேர்தலை குறிவைத்து, உதயநிதி முழுவீச்சில் களமிறங்க போவதாக தகவல்கள் கூறுகின்றன.. இந்த தேர்தலில் திமுகவை எதிராக முன்னிறுத்தியே பாஜக, முனைப்பு காட்டி வருகிறது.

 டபுள் சிக்கல்

டபுள் சிக்கல்

திமுக மீதான புகார்கள், குறைகள், அதிருப்திகள், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து, திமுகவை டேமேஜ் செய்ய வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது... இதனிடையே, ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் வருடப்பிறப்பன்று திருச்செந்தூரில் இருந்து நடைபயணம் ஆரம்பிக்கிறார் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை.. 39 பாராளுமன்ற தொகுதிகளை குறிவைத்து 140 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு உள்ளது... அதில், திமுக தேர்தல் பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளில் எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற லிஸ்ட் இடம்பெற்றுள்ளதாம்..

 டேமேஜ் திமுக

டேமேஜ் திமுக

இதுபோக, மின் கட்டணம், பால் விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கையில் எடுத்தும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல போகிறார் அண்ணாமலை.. இதற்கு பதிலடியாகவே, உதயநிதியை களமிறக்க போகிறதாம் திமுக.. அதன்படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது... உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பதால் மாவட்ட வாரியாக விளையாட்டு குழுக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

 பறைசாற்றுதல்

பறைசாற்றுதல்

கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, சிலம்பாட்டம், கராத்தே, துப்பாக்கி சுடுதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி முடித்த இளைஞர் குழுக்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களுக்கு புதிய உத்வேகம் அளிக்க போகிறார். விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆங்காங்கே விளையாட்டு போட்டிகளையும் தொடங்கி வைக்க உள்ளார். மக்கள் பணியில் திமுக என்பதை பறைசாற்றும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள், அரசின் நிதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் அவர் செய்து கொடுக்க உள்ளார்.

 கொதிக்கும் களம்

கொதிக்கும் களம்

முக்கியமாக, இதன் மூலம் அரசின் சாதனைகளை மக்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் அவரது நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.. சுருக்கமாக சொல்வதானால், தமிழகத்தை நம்பர்-1 மாநிலமாக்க ஸ்டாலின் பாடுபட்டு வருவதுபோல், உதயநிதியும் திமுக அரசின் திட்டங்கள் செயல்பாடுகளை பறைசாற்றும் வகையில் அவரது சுற்றுப்பயணத்தில் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது... ஆக மொத்தம் ஒரு பக்கம் அண்ணாமலையின் நடைபயணம், மறுபக்கம் உதயநிதியின் சுற்றுப்பயணம் என இருவித பயணங்களால், தமிழக களமே சுடச்சுட கொதிக்க போகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+