வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த நாய்.. கூடவே லொள் லொள்.. பெண்ணுக்கு இரும்பு கம்பியால் சரமாரி அடி!
நாயுடன் வாக்கிங் சென்றவரை தாக்கிய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: நாய்க்கு தெரியுமா இடம், பொருள், ஏவல்? சொன்னால் புரியுமா? அதன் மண்டையில்தான் முழுசா ஏறுமா? ஆனால் சில மனிதர்களுக்கு தெரிய வேண்டாமா?
சுகுணாவை இரும்புக் கம்பியால் தாக்கும் வீடியோ வெளியாகி எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. நங்கநல்லூரைச் சேர்ந்தவர் சுகுணா. வயது 45. இவர் ஒரு நாய் வளர்த்து வருகிறார்.

சிறுநீர் கழித்தது
தினமும் காலையில் வாக்கிங் போவது சுகுணாவின் பழக்கம். அப்போது கூடவே தன்நாயையும் கூட்டி செல்வார். நேற்று காலையும் அப்படித்தான் நாயை கூட்டிக் கொண்டு வாக்கிங் போனார். அப்போது திடீரென ஓடிப்போய் ஒரு வீட்டின் வாசலில் அந்த நாய் சிறுநீர் கழித்தது. இதனை அந்த வீட்டு உரிமையாளர் சத்தியநாராயணா என்பவர் பார்த்தார். பிறகு அந்த நாய் சக்தியை பார்த்து குரைத்தது. இதுதான் விஷயம்.

தகராறு முற்றியது
இது ஒரு பெரிய பிரச்சனை என்று எடுத்து கொண்டு சுகுணாவிடம் சண்டைக்கு போய்விட்டார். வாய்க்கு வந்தமாதிரியெல்லாம் சுகுணாவை சத்தியநாராயணா திட்டினார். "நாய் எப்படி என்னை பார்த்து குரைக்கலாம், எப்படி என் வீட்டின் சுவரில் சிறுநீர் கழிக்கலாம் என்று கேள்வி மேல் கேட்டார்". பதிலுக்கு சுகுணாவும் சத்தம்போட வாக்குவாதம் முற்றியது.

ரத்தம் கொட்டியது
ஆனால் நாய் தன்னை பார்த்து முறைத்ததையும், சிறுநீர் கழித்ததையும் பொறுத்து கொள்ளவே முடியாத சத்திய நாராயணா, உடனே ஓடிச்சென்று அருகிலிருந்த தண்ணீர் பைப் இரும்பு கம்பியை எடுத்து வந்து பலமாக சுகுணாவை தாக்க ஆரம்பித்தார். இதனால் சுகுணாவுக்கு ரத்தம் பொலபொலவென கொட்ட தொடங்கியது.

மக்கள் அதிர்ச்சி
இதையடுத்து படுகாயம் அடைந்த சுகுணா உடனடியாக சிகிச்சைக்காக ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வீட்டு உரிமையாளர் சுகுணாவை தாக்கும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரோ வீடியோ எடுத்து இணையத்திலும் போட்டுவிட்டார்கள். இந்த வீடியோவை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சத்திய நாராயணா கைது
இதனிடையே சுகுணாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போதே சத்தியநாராயணா எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சக்தியை தேடி வந்தனர். இந்நிலையில் அவரை கைது செய்தனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications