சிறப்பு வகுப்பு வேண்டாம், உறவுகளோடு பழகட்டும்! தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை- வீடியோ

    சென்னை: கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை கண்டித்துள்ளது.

    பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கோடையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது தவறு என கண்டித்துள்ளதோடு, அப்பபடி செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அந்த அறிக்கையில், "மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறைகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புபகள் நடத்தக்கூடாது என கடந்த ஆண்டு அறிவுறுத்தப்பட்டது. தற்போது கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன..

    கட்டாய ஓய்வு

    கட்டாய ஓய்வு

    கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும்.

    உறவுகள் மேம்படும்

    உறவுகள் மேம்படும்

    கோடை விடுமுறை என்பது மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது உறவினர்களோடு பழகவும் உறவுகளின் அவசியத்தை தெரிந்து கொள்ளவும் உறவுகளை மேம்படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இதனால் மாணர்களின் வாழ்வியல் விழுமியம் ஏற்படும்.

    வேண்டாம்

    வேண்டாம்

    எனவே மாணவர்களின் நலன் கருதி கோடை விடுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிகல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    உடனே நடவடிக்கை

    உடனே நடவடிக்கை

    இது தொடர்பாக பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்தால் தனியார் பள்ளிகள் மீது எந்தவித காலதாமதம் இன்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு ராமேஸ்வரமுருகன் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+