Jothimani: நான் கரூர்ல இருக்கேன்! என்னை ஏன் வம்பிழுக்குறீங்க? "தளபதி"க்கு ஜோதிமணி எம்பி கேள்வி
சென்னை: திமுக எம்எல்ஏ தளபதி, தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக் கூடாது, நீங்கள் மதுரையில் இருக்கீங்க, நான் கரூரில் இருக்கிறேன் என கரூர் எம்பி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.தளபதி அவர்கள் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது?

காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை
எமது தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.
அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.
களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.அமைதி காக்கிறோம்.
கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன்.
வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது. இவ்வாறு ஜோதிமணி தெரிவித்திருந்தார்.
மீண்டும் சலசலப்பு
திமுக கூட்டணியில் மீண்டும் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோருக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ. தளபதி தெரிவித்த கருத்து ஒரு பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. மதுரை எம்.எல்.ஏ. தளபதியின் இந்தப் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. சமூக வலைத்தளத்தில் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நடந்தது என்ன
சமீபத்தில் மதுரையில் நகர் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில், எம்.எல்.ஏ. தளபதி உரையாற்றினார். அவர் தனது பேச்சில், "காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் எப்படியோ எம்.பி.க்களாகிவிட்டனர். தற்போது எல்லாவற்றிலும் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் எனப் பேசுவது வேதனை அளிக்கிறது," என்றார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு மூவாயிரம் ஓட்டுகளே உள்ளன; பூத் கமிட்டிக்குக்கூட ஆட்கள் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தளபதி பேசியது என்ன
தளபதி தொடர்ந்து பேசுகையில், "இதை திமுக தலைமை புரிந்துகொண்டு வரும் மக்களவைத் தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது. அதற்கான பணியை நாம் செய்ய வேண்டும். திமுக இல்லையெனில் 'இந்தியா' கூட்டணியே இல்லை; தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தான் இக்கூட்டணியைக் காப்பாற்றி வருகின்றனர்," என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூர்
தளபதியின் இந்தப் பேச்சுக்குக் காட்டமாகப் பதிலடி கொடுக்கும் விதமாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில், "இந்த முறை மதுரை வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானத்தைக் காக்க சிலருக்குப் பாடம் புகட்ட வேண்டும். அதிகாரத் திமிருடன் இருந்தால் தோழமைக் கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது," என்று தெரிவித்தார். இது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் மேலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மோதல் ஏன்
இந்த மோதலின் பின்னணி குறித்து அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை வடக்கு தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக திமுகவின் தளபதி இருக்கிறார். வரவிருக்கும் தேர்தலில் இத்தொகுதியைத் தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது. மாணிக்கம் தாகூர் எம்.பி. இந்த கோரிக்கையின் பின்னால் இருப்பதாலேயே தளபதி அக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேறுபட்ட கருத்து
தளபதியின் இந்தப் பேச்சு குறித்து இரு வேறுபட்ட கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றன. "இது தேவையற்றது; கூட்டணிக்குள் தேவையற்ற புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது," என்கிறது ஒரு தரப்பு. ஆனால், "திமுகவை அடிக்கடி விமர்சிக்கும் மாணிக்கம் தாகூருக்குத் தளபதி சரியான பதிலடி கொடுத்துள்ளார்," என மற்றொரு தரப்பு தளபதியின் கருத்தை ஆதரித்து வருகிறது.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications