இடியே விழுந்தாலும்.. ரயிலில் புக் செய்து பயணம் செய்யும் போது.. இதை மட்டும் பண்ணவே பண்ணாதீங்க! ரூல்ஸ்
சென்னை: ரயிலில் புக் செய்து பயணம் செய்யும் மக்கள் வசதியாக பயணிக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான விதி ஒன்றை ரயில்வே வாரியம் கொண்டு வந்துள்ளது.
ரயிலில் அவ்வப்போது புதிய விதிகள் கொண்டு வரப்படும். பயணிகளின் பாதுகாப்பு, வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரயில் பயண விதிகளில் மாற்றங்கள் செய்யப்படும். முக்கியமாக புக்கிங் செய்து பயணம் செய்யும் நபர்களுக்கு என்று விதிகள் அடிக்கடி மாற்றப்படுவது வழக்கம்.

ரயில் பயணம் என்பது பலருக்கும் பிடித்தமானது. நீண்ட தூரம் பயணிக்க பேருந்தை விட ரயில் சிறப்பானது. பாதுகாப்பானது.
அதே சமயம் பட்ஜெட் ரீதியாகவும் பேருந்து, விமானத்தை விட ரயில் குறைவான கட்டணம் கொண்டது. பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன.
உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி நன்றாக சவுகரியமாக அமர்ந்து கொள்வது வரை பல வசதிகள் இதில் உள்ளன.
இந்த ரயிலில் பொதுவாக பல்வேறு இருக்கைகள் முன் பதிவில் கிடைக்கும். அதாவது அப்பர், மிடில், லோயர், சைடு அப்பர், சைடு லோயர். இதில் ஒவ்வொருவர் .. ஒவ்வொரு மாதிரியான இருக்கைகளை விரும்புவார்கள்.
உங்களின் வயதுக்கு ஏற்ப இருக்கைகள் உங்களுக்கு ரயில்வே மூலம் ஒதுக்கப்படும். இந்த பெர்த் அனைத்திற்கும் ஒரே விதிகள் கிடையாது. விதிகள் அனைத்திற்கும் தனி தனி. இது தொடர்பாக ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதன்படி ரயிலில் பயணம் செய்யும் பட்சத்தில்.. புக்கிங் செய்யப்பட்ட பெட்டிகளில் இருந்தால் இரவு 10 மணிக்கு மேல் பாடல்களை ஒளிபரப்ப கூடாது.
போனில் சத்தமாக பேச கூடாது. சத்தம் எழுப்ப கூடாது. மக்கள் தூங்கி கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு தொந்தரவு செய்வது போல குடும்பமாக சத்தமாக பேச கூடாது.
முக்கியமாக 10 மணிக்கு மேல் விளக்குகளை அணைக்க வேண்டும். மேலும் மேல் பர்த்தில் இருப்பவர்கள்.. மேலே போக மாட்டேன் என்று கூறி கீழ் பர்த்தில் உள்ளவர்களின் தூக்கத்தை கெடுக்க கூடாது, என்று ரயில்வே விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
வேறு சில விதிகள்
அதேபோல் நீங்கள் ரயிலில் பயணம் செய்கையில் உங்களுக்கு என்ன பெர்த் கிடைக்கிறதோ அதற்கு ஏற்றபடி விதிகள்மாறும்.
சைடு அப்பர் - நீங்கள் சைடு அப்பரில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். அங்கே உங்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது. உங்களுக்கு மேல் உள்ள விளக்கை 10 மணிக்கு மேல் இரவில் எரிய விட கூடாது. நீங்கள் பகல் நேரத்தில் சைடு லோயரில் இருக்க விரும்பினால் இருக்கலாம். ஆனால் இரவு 10க்கு மேல் சைடு லோயரில் நீங்கள் அமர கூடாது.
சைடு லோயர் - நீங்கள் சைடு லோயரில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். ஆனால் சைடு அப்பரில் உள்ளவர் கீழ அமர விரும்பினால் அவருக்கு பகல் நேரத்தில் மட்டும் இடம் கொடுக்க வேண்டும். அதாவது இரவு 10 மணி வரை மட்டும் இருக்கைகளை பகிர நீங்கள் அனுமதிக்கலாம். அதன்பின் சைடு அப்பரில் உள்ளவர் அவரின் இடத்திற்கு செல்ல வேண்டும்.
லோயர் - நீங்கள் லோயரில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்க முடியாது. 10 மணிக்கு பின்தான் தூங்க வேண்டும். அதுவரை மிடில் சீட்டில் இருப்பவர் உங்களுடன் அமர இடம் கொடுக்கப்பட வேண்டும். மிடில் சீட்டை தூக்காமல், அவரை உங்களுடன் அமர வைக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை மிடில் சீட்டில் இருப்பவர் உங்களை அனுமதித்தால் நீங்கள் பகலிலும் தூங்கிக்கொள்ள முடியும். அதாவது இரவு 10 மணி வரை மட்டும் இருக்கைகளை பகிர நீங்கள் அனுமதிக்கலாம். அதன்பின் மிடிலில் உள்ளவர் அவரின் இடத்திற்கு செல்ல வேண்டும்.

மிடில் - நீங்கள் மிடிலில் இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் தூங்க முடியாது. 10 மணிக்கு பின்தான் தூங்க வேண்டும். அதுவரை லோயர் சீட்டில் இருப்பவருடன் அமர வேண்டும். மிடில் சீட்டை தூக்கி லோயர் சீட்டில் இருப்பவர்களுக்கு உட்கார முடியாமல் இடையூறு கொடுக்க முடியாது. ஒருவேளை லோயர் சீட்டில் இருப்பவர் உங்களை தூங்க அனுமதித்தால் மட்டுமே நீங்கள் பகலிலும் மிடிலில் தூங்கிக்கொள்ள முடியும். அதாவது இரவு 10 மணி வரை மட்டும் இருக்கைகளை பகிர நீங்கள் அனுமதிக்கலாம். அதன்பின் மிடிலில் உள்ளவர் அவரின் இடத்திற்கு சென்று தூங்க முடியும்.
அப்பர் - அப்பரில் இருப்பவர் யாருடனும் இருக்கையை பகிர வேண்டியது இல்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications