Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாச வீடியோ லீக்கானால்.. முதலில் இதை பண்ணுங்க.. அன்புமணி மனைவி "அட்வைஸ்".. பாராட்டிய திமுக எம்பி

உங்களை பலரும் ஜட்ஜ் செய்வார்கள், அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி பேசி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் தங்களின் ஆபாசமான வீடியோக்கள் வெளியானால் என்ன செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி பேசி இருக்கிறார். இதை திமுக எம்பி செந்தில் குமார் பாராட்டி உள்ளார்.

பெண்கள் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு, இளைஞர்கள் அதை எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்து எடுக்கப்பட்ட படம் பகாசூரன். மோகன் ஜி இயக்கத்தில் இந்த படம் சில இடங்களில் பாராட்டுகளை பெற்றது. அதே சமயம் உலகம் போகிற போக்கில்.. மிகவும் பிற்போக்குத்தனமான கருத்துக்களை பேசுவதாகவும் சர்ச்சைகளுக்கு உள்ளானது.

முக்கியமாக இளைஞர்கள், பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இருப்பதாக இந்த படம் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த படத்தின் பெயரை குறிப்பிடாமல், பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி பேசி இருக்கிறார்.

மகளிர் தினம்

மகளிர் தினம்

மகளிர் தினம் நிகழ்ச்சி ஒன்றில் சௌமியா அன்புமணி பேசினார். அவர் பேசுகையில், இங்கே மகளிர், குழந்தைகள் எல்லாம் இருக்கிறார்கள். எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்களுக்கு எல்லாம் ஒன்று சொல்கிறேன். யாரும் இந்த நியூட் போட்டோ, வீடியோக்களுக்கு பயப்பட வேண்டாம். பிளாக்மெயில் செய்தால் அஞ்ச வேண்டாம். அதற்கெல்லாம் தயவு செய்து பயப்படவே பயப்பட வேண்டாம். அது உண்மையான வீடியோவாக இருந்தால் கூட பயப்பட வேண்டாம். யாராவது உங்களை மிரட்டினால் பயப்பட வேண்டாம்.

வீடியோ

வீடியோ

உங்களின் நியூட் வீடியோவை, அசிங்கமான வீடியோவை வைத்து மிரட்டினால் பயப்பட வேண்டாம். அதை பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். இந்த லவ் டுடே படத்தில் வந்தது பார்த்தீர்களா? அது போல வந்தால் பயப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள். உங்கள் வீட்டில் சொல்லுங்கள். உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள். சோஷியல் மீடியா, சமூக வலைத்தளத்தில் இதெல்லாம் 2-3 நாட்கள் இருக்கும். அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம்.

மறந்துடுங்க

மறந்துடுங்க

அதன்பின் மறந்துவிடுவார்கள். உங்கள் வீடியோக்கள் இணையத்தில் கசிந்தால் பயப்பட வேண்டாம். அம்மாவிடம் சொல்லுங்கள். அடி வாங்கிக்கொள்ளுங்கள். திட்டு வாங்கிக்கொள்ளுங்கள். எங்கேயோ போய் வதை படுவதற்கு அம்மாவிடம் சொல்லுங்கள். அம்மா அடித்தால் பிரச்சனை இல்லை. வெளியே போய் மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு உங்கள் அம்மாவின் சப்போர்ட் இருக்கும். அவர் திட்டினால் அதனால் வருத்தப்பட வேண்டாம்.

ஜட்ஜ்

ஜட்ஜ்

உங்களை பலரும் ஜட்ஜ் செய்வார்கள். அவள் அப்படித்தான், அவள் அப்படித்தான் ஆடை போடுவாள். அவளுக்கு இப்படித்தான் நடக்கும் என்பார்கள். ஆனால் அதை பற்றி கவலைப்பட வேண்டாம். தவறு நடந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம். பெற்றோர்களிடம் சொல்லுங்கள். முக்கியமாக அம்மாவிடம் சொல்லுங்கள். அம்மாவிடம் போவதே சரியான முடிவாக இருக்கும். வெளியே போய் யாரிடமும் மாட்டிக்கொள்ள வேண்டாம். இது முக்கியமான வேண்டுகோள். போன் வைத்துக்கொள்ளலாம், வேண்டாமா என்று படம் எடுக்கிறார்கள். எது வைத்து இருந்தாலும் ஜாக்கிரதையாக இருங்கள். கவனமாக இருங்கள். மனநலம் மிகவும் முக்கியம், என்று சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாராட்டு

பாராட்டு

இதை திமுக எம்பி செந்தில் குமார் பாராட்டி உள்ளார். அவர் தனது போஸ்டில் பாராட்டுக்கள் மேடம், சௌம்யா, உங்களின் பேச்சிற்கு ஆயிரம் Salute. இது மாதிரியான ஊக்கமும் அறிவுரைகளும் தான் இன்றைய குழந்தைகளுக்கு தேவை பெண்களுக்கு மனவலிமையும் தைரியமும் தன்னம்பிக்கையும் கட்டாயம் சொல்லி கொடுக்க வேண்டும் ஆண்களுக்கு ஒரு போதும் அவர்கள் அடிபணிய கூடாது especially blackmail., என்று பாராட்டி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+