சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்ட விஜய்... பாஜக அதிர்ச்சி?.. வேற லெவலில் விளக்கம் தந்த குஷ்பு!
சென்னை: நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டதை அரசியலாக்க வேண்டாம் என்று பாஜக வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குபதிவு மையத்துக்கு விஜய் சைக்கிள் ஓட்டியபடி வருகை தந்தார்.
பச்சை நிற டி சட்டை அணிந்தபடி அவர் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டதால் வழிநெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விஜய் சைக்கிளில் வந்ததாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

ஸ்டேட்மென்ட்
இது பயணம் அல்ல.. ஒரு ஸ்டேட்மென்ட். சரியான நேரத்தில் இதை சொல்லியுள்ளார், என்று ரசிகர்கள் டுவிட்டரில் கூறுவதை பார்க்க முடிகிறது.

டுவிட்டரில் டிரெண்ட்
பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்ற பெயரில் #PetrolDieselPriceHike ஹேஷ்டேக், டுவிட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்ட்டாகிவருகிறது. ஆனால் இதை அரசியலாக்க வேண்டாம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு பக்கம்
நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததை அரசியலாக்க வேண்டாம். அவர் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டதற்கு வேறு காரணம் இருக்கிறது. விஜய் வீட்டுக்கு அருகே வாக்குப் பதிவு மையம் இருக்கிறது. எனவே அவர் காரை பயன்படுத்தாமல் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். அவ்வளவுதான் விஷயம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

என்ன காரணம்
விஜய் சைக்கிளில் வந்ததற்கு இதுதான் காரணமா அல்லது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பதற்காக விஜய் சைக்கிளில் வந்தாரா, ஒருவேளை அப்படி எதிர்ப்பு தெரிவிப்பதற்கு வந்திருந்தால் கடந்த முறை தேர்தலில் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது ஏன் என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் இப்போது ஓடிக் கொண்டிருக்கின்றன.
விஜய் சைக்கிளில் வந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பேசு பொருளாகி விட்டது. அனைவரும் இதைப் பற்றியே பேசுகின்றனர். மிகப் பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இது பாஜகவுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் பாஜக வேட்பாளரான குஷ்பு இந்த டிரெண்டுக்கு நேர் முரணாக ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங்












Click it and Unblock the Notifications