1 மணி நேரம்தான்.. வேகம்.. கவனமாக இருங்கள்.. வேட்பாளர்களுக்கு டிடிவி தினகரன் அனுப்பிய மெசேஜ்!

லோக்சபா மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு அதன் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய மெசேஜ் ஒன்று அனுப்பி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது.. உச்சநீதிமன்றம்- வீடியோ

    சென்னை: லோக்சபா மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு அதன் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய மெசேஜ் ஒன்று அனுப்பி இருக்கிறார்.

    பாவம்.. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அடிமேல் அடி என்றுதான் கூற வேண்டும். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தோல்வி அடைந்ததில் இருந்தே வரிசையாக எல்லா வழக்குகளிலும் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறார் டிடிவி தினகரன்.

    இந்த நிலையில்தான் இன்று நடந்த குக்கர் வழக்கிலும் அவர் பின்னடைவை சந்தித்து உள்ளார். அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை கொடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.

    பொது சின்னம்

    பொது சின்னம்

    இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு ஒரே ஆறுதலாக தற்போது பொதுச்சின்னத்தை வழங்க உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது அமமுக வேட்பாளர்கள் எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவார்கள். ஆனாலும் இவர்கள் ஒரே கட்சியாக கருதப்பட மாட்டார்கள். மாறாக சுயேட்சையாக கருதப்படுவார்கள்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இதையடுத்து டிடிவி தினகரன் வேகமாக தனது வேட்பாளர்கள் எல்லோருக்கும் போன் செய்து, முக்கிய தகவல் ஒன்றை அளித்து இருக்கிறார். அதன்படி எல்லோரும் அவரவர் தொகுதிகளுக்கு சென்று வேகமாக வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக வேட்புமனுவை தாக்கல் செய்ய கூறி இருக்கிறார்.

    இன்று முடிகிறது

    இன்று முடிகிறது

    வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் இன்றோடு முடிகிறது. இதனால் இன்று எப்படியாவது எல்லோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட வேண்டும். 2-3 மணிக்குள் சென்று குறைந்தபட்சம் டோக்கனாவது வாங்கிவிட வேண்டும். அப்போதுதான் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டு இருக்கிறார்.

    என்ன மெசேஜ்

    என்ன மெசேஜ்

    அதேபோல் தனது வேட்பாளர்களுக்கு அவர் முக்கிய மெசேஜ் ஒன்றும் அனுப்பி உள்ளார். இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் போது நிறைய இடையூறுகள் வர வாய்ப்பு இருக்கிறது. அதிகாரிகள் உங்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தாமதம் செய்யலாம். அனைத்திற்கும் தயாராக இருங்கள். சின்னம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று மெசேஜ் அனுப்பியதாக டிடிவிக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+