Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அச்சம் வேண்டாம்..நாங்க இருக்கோம்.. வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழக காவல்துறை நம்பிக்கை

வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் வேலை செய்ய வந்திருக்கும் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என டிஜிபி எச்சரித்துள்ள நிலையில் வட மாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர் காவல்துறையினர்.

பிழைப்புக்காக பிறந்த மாநிலத்தை விட்டு சொந்த பந்தங்களை விட்டு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணித்து தமிழகம் வருகின்றனர் வட மாநில தொழிலாளர்கள். பல மணி நேரம் வேலை செய்து விட்டு சின்னஞ்சிறிய இடத்தில் தங்கிக் கொண்டு கிடைத்ததை சாப்பிட்டு பணத்தை மிச்சம் செய்து குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

Dont worry Tamil Nadu police trust the North state workers

கடந்த சில ஆண்டுகாலமாகவே தமிழ்நாட்டிற்கு வரும் வட இந்திய தொழிலாளர்களின் வருகை அதிகமாகவே உள்ளது. காரணம் அமைதிப்பூங்காவாக திகழும் தமிழ்நாடுதான். பிரச்சினையில்லாத இடம். நல்ல சூழ்நிலை, உணவு, குடிநீர் வசதி என எல்லாமே வசதியாக கிடைப்பதுதான். குறைந்தபட்சம் 50 ரூபாய்க்குள் 3 வேளை உணவை அம்மா உணவகத்தில் முடித்துக்கொள்ளலாம். சிறிய ஹோட்டல்கள் என்றால் 150 ரூபாய்க்குள் 3 வேளை உணவு முடிந்து விடும். குறைந்த பட்சம் ஒரு தொழிலாளி 500 ரூபாய் வரை சம்பாதிப்பார்.

ஹோட்டல்களில் வேலை செய்பவர்களுக்கு தங்கும் இடமும், உணவும் கிடைப்பதால் அவர்கள் பாதுகாப்பாக பணி செய்து விட்டு சம்பளத்தை அப்படியே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர். சென்னை, திருப்பூர், கோவை, சிவகாசி, மதுரை, என பல நகரங்களில் இன்றைக்கு வட மாநில தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். அவர்களை கிண்டல் செய்து பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட நிலையில் அதைப்பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி பீகார் வரை எதிரொலித்தது.

திருப்பூர் ரயில் தண்டவாளத்தில் பீகார் மாநில தொழிலாளர் ஒருவரின் சடலம் கிடக்கவே அவர் கொலை செய்யப்பட்டதாகவும் வதந்தி பரவியது. ஆனால் அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பூர் ரயில்வே காவல்நிலையத்தை சூழ்ந்த வட மாநில தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு பேச்சுவார்த்தை நடத்தினார். வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். போலியான வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்தார்.

காவல்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் தொடர்பு எண் குறித்தும் விளக்கமளித்தார் . வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதாகவும் திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு கூறினார்.

சென்னையில் வடமாநில தொழிலாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர். கட்டிட வேலை செய்பவர்கள், சாலை பணியாளர்கள், ஹோட்டல் தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு வட மாநில தொழிலாளர்களுக்கு புரியும் வகையில் ஹிந்தியில் பேசி காவல்துறையினர் நம்பிக்கை அளித்தனர்.

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வாட்ஸ் அப்பில் வெளியான வீடியோ உண்மையானதல்ல. அதை பழைய வீடியோ அதனை இப்போது வாட்ஸ் அப்பில் பரப்பி வருகின்றனர். அது பற்றி அச்சப்பட வேண்டாம். வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த விட பாதிப்பும் இல்லை. தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம், தைரியமாக இங்கே பணி புரியலாம். முதல்வர், டிஜிபி ஆகியோர் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். காவலன் செயலியை தொடர்பு கொள்ளலாம். சம்பளம் வாங்கிக்கொண்டு செல்லும் போது தனியாக செல்லாமல் கூட்டமாக செல்லுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளோம் என்றும் ராஜராம் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+