பதறும் ஐடி ஊழியர்கள்.. TCS, Infosys, Cognizantல் ஒரே பதற்றம்.. காரணமாக மாறிய 3 பெரிய பூதங்கள்
சென்னை: கடந்த சில நாட்களாக இந்திய ஐடி துறை கடுமையான சரிவை நோக்கி செல்ல தொடங்கி உள்ளது. வாரம் வாரம் பல நூற்றுக்கணக்கில் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
டிசிஎஸ், அக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் திறன் மேம்பாடு மற்றும் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் தங்கள் நிறுவனங்களில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளன.

டிசிஎஸ், அக்சென்சர், மைக்ரோசாஃப்ட்,
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2025-26 நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை, அதாவது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2% பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான தேவையின் அதிகரிப்பால், நிறுவனம் தற்போது மறுசீரமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
உலகளாவிய சர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள், அதன் செயற்கை நுண்ணறிவு அமைப்பை விரைவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, வடிவமைப்பு தொடர்பான பணிகளில் இருந்த 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. விப்ரோவில் அதிகாரப்பூர்வ பணிநீக்கங்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், செலவுத் திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த 24,516 வேலைகளை நிறுவனம் குறைத்துள்ளது. நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஹெச்.சி.எல் டெக் 2024 இல் 8,000 க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைத்துள்ளது. இது பெரும்பாலும் அதன் நிறுவனப் பங்குகளை விற்றதாலும், துறையில் நடந்த மறுசீரமைப்புகளாலும் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தொடங்கி உள்ள வர்த்தக போர் தொடங்கி பல்வேறு காரணங்களால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. ஏஐ எழுச்சி, டிரம்ப் வர்த்தக போர், அவுட் சோர்சிங் உள்ளிட்ட 3 பெரிய போர்கள் காரணமாக இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூதம் 1
ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளைண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன.
ஐடி சேவைகளுக்கான மதிப்புகள் குறைய தொடங்கி உள்ளன. இது ஐடி துறை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாற தொடங்கி உள்ளது . ஐடி துறையில் அடுத்த ஆண்டு வளர்ச்சி 4%க்கும் குறைவாகவே இருக்கும். வர்த்தக போரால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வர்த்தக போர் காரணமாக மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது. இந்திய மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவை இப்போது உண்மையான மதிப்பை நோக்கி சரிய தொடங்கி உள்ளன. வரும் நாட்களில் இவை மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன. இதுவும் ஐடி துறையை நேரடியாக பாதிக்கும்.
பூதம் 2
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மற்றும் கடுமையான விசா குடியேற்றக் கொள்கைகள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களை பாதிக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இவை நேரடியாக ஐடி துறையை பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக பாதிக்கும். அதாவது அமெரிக்க குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட இந்திய ஊழியர்களை நம்பியிருக்கும் IT நிறுவனங்கள் சவால்களை சந்திக்கும். கடுமையான குடியேற்றக் கொள்கைகள் காரணமாக இந்தியர்கள் ஆன்சைட் போக முடியாத நிலை ஏற்படும்.
இதை நிவர்த்தி செய்ய, TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் அமெரிக்காவிலேயே ஊழியர்களை பணிக்கு எடுக்கும் திட்டத்தில் உள்ளதாம். அதாவது விசா பிரச்சனைகளை சமாளிக்க TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் நிறுத்தலாம். அமெரிக்காவிலேயே உள்ளவர்களை பணிக்கு எடுக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதோடு அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக சர்வதேச அளவில் பல துறைகள் பாதிக்கின்றன. இதனால் ஐடி சேவைகளை பயன்படுத்தும் பல நிறுவனங்கள் செலவை கட்டுபடுத்த ஐடி சேவைகளுக்கு செலவு செய்வதை குறைக்க முடிவு செய்துள்ளன. உலகம் முழுக்க உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்களுடனான சேவை ஒப்பந்தங்களை அமெரிக்கா நீக்கி உள்ளது. $5.1 பில்லியன் மதிப்பு உள்ள ஒப்பந்தங்களை அத்தியாவசியமற்ற செலவுகள் எனக் குறிப்பிட்டு அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
இது உலகளாவிய தகவல் தொழில்நுட்ப வணிகத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதாவது பொதுவாக ஐடி பணிகளை வெளிநாட்டிற்கு அமெரிக்க அரசு அவுட் சோர்சிங் செய்யும். அதாவது குறைந்த வருமானத்தில் ஊழியர்கள் கிடைப்பதால் பணிகளை வெளியே அவுட் சோர்சிங் செய்வார்கள். முக்கியமாக இந்திய, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு இதை அவுட் சோர்சிங் செய்வார்கள். இதைத்தான் தற்போது டிரம்ப் நிறுத்தி உள்ளார். இந்த பணிகளை அமெரிக்காவிற்கு உள்ளேயே செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
பூதம் 3:
இதுபோக ஏஐ வருகை காரணமாக ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் குறையும் வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலை வாய்ப்புகள், முக்கியமாக ஜூனியர் வேலை வாய்ப்புகள் குறைய வாய்ப்புகள் உள்ளன.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications