யாருமே எதிர்பார்க்காத ஒன்று.. பதவி ஏற்ற 2ம் நாளே.. இந்தியாவிற்கும் "வார்னிங்" தந்த டிரம்ப்!
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளார். டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேற நினைத்தால், டாலர் வர்த்தகத்தை குறைத்தால் 100% வரி விதிப்பை மேற்கொள்ளுவோம் என்று அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஏற்கனவே டாலரில் வர்த்தகம் செய்யவே விரும்புவதாகவும்.. பிரிக்ஸ் கரன்சி கொண்டு வருவதில் ஆதரவு இல்லை என்று பிரிக்ஸ் நாடுகளுக்கு இந்தியா தகவல் அனுப்பி உள்ளதாம். அதிகாரபூர்வமற்ற ஆலோசனைகளில் பிரிக்ஸ் நாடுகளிடம் இந்தியா இந்த தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவின் இந்த முடிவு அமெரிக்காவிற்கு சாதகமாக மாறி உள்ளது. டாலர் வர்த்தகத்தை எதிர்க்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து உள்ளது. ஆனாலும் பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து உள்ளது.
டாலர் வர்த்தகம்: அமெரிக்க டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை தொடங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. பிரிக்ஸ் கரன்சி கொண்டு வரும் திட்டம் எல்லாம் எதுவும் இல்லை என்று சமீபத்தில் கூட கத்தாரில் நடந்த டோஹா ஃபோரம் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இப்போது அதிகாரபூர்வமற்ற ஆலோசனைகளில் பிரிக்ஸ் நாடுகளிடம் இந்தியா இந்த தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
டிரம்ப் எச்சரிக்கை:
சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது போஸ்டில், பிரிக்ஸ் குழு தனியாக நாணயம் ஒன்றை உருவாக்க பார்த்ததை அமெரிக்கா வேடிக்கை பார்த்த காலம் போய்விட்டது. பிரிக்ஸ் நாடுகள் புதிதாக நாணயம் எதையும் உருவாக்க கூடாது. இல்லையென்றால் ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தை பயன்படுத்த கூடாது.
அமெரிக்க டாலரை மட்டுமே இவர்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு 100% கூடுதல் வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் அவர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டுவிடலாம். வேறு யாராவது ஏமாளி கிடைத்தால் அவர்களிடம் அவர்கள் போய் வியாபாரம் செய்யட்டும். பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வியாபாரத்தில் டாலரை தவிர வேறு எதையும் பயன்படுத்த கூடாது. டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உங்களுக்கு உள்ள உறவையும் துண்டித்துக்கொள்ளுங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பிரிக்ஸ் நாணயம்; பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். கடந்த கூட்டத்தில் இவர்கள் பிரிக்ஸ் நாணயம் குறித்து மேலோட்டமாக ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் பிரிக்ஸ் எதிர்ப்பு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களை உள்ளடக்கிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிய நாணயத்தை உருவாக்கவோ அல்லது டாலருக்குப் பதிலாக வேறு நாணயத்தை பயன்படுத்தவோ கூடாது என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில்தான் அமெரிக்க டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை தொடங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பிரிக்ஸ் நாடுகளுக்கும் - அமெரிக்காவிற்கும் இடையே நல்ல உறவு உள்ளது, முதல் முறை டிரம்ப் ஆட்சி நடந்த போதும்.. அவர்களுடன் எங்களுக்கு மிகவும் உறுதியான உறவு இருந்தது. எங்கள் இரண்டு தரப்பிற்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தன. ஆனாலும் பெரிய அளவில் மோதல் உள்ளது. டிரம்பின் கீழ் QUAD மீண்டும் தொடங்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பிரிக்ஸ் கரன்சி கொண்டு வரும் திட்டம் எல்லாம் எதுவும் இல்லை. அப்படி நாங்கள் எதையும் ஆலோசனை செய்யவில்லை. பிரதமர் மோடிக்கும் ட்ரம்புக்கும் இடையே தனிப்பட்ட உறவு இருக்கிறது...டாலரை எதிர்க்க.. அல்லது துறக்க இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. இப்போது பிரிக்ஸ் நாணயம் வேண்டும் என்ற திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளோம். அதை பற்றி நாங்கள் விவாதிக்கவும் இல்லை.
BRICS நிதி பரிவர்த்தனைகள் பற்றி மட்டுமே விவாதம் செய்தோம்... அமெரிக்கா எங்கள் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும், டாலரை பலவீனப்படுத்துவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications