ஐடி ஊழியர்களுக்குத்தான் ஆப்பு.. நாளை தொடங்கும் வர்த்தக போர்.. ஆடி நிற்கும் இந்திய ஐடி துறை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பை முன்னிட்டு ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. டிரம்ப் விதிக்கும் வரிகள் காரணமாக ஐடி துறையின் பங்குகள் பங்குசந்தையில் கடுமையாக சரிய தொடங்கி உள்ளது. இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் பங்குகள் இன்று 4 சதவீதம் வரை சரிந்தன.

ஐடி சேவைகளுக்கான மதிப்புகள் குறைய தொடங்கி உள்ளன. இது ஐடி துறை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாற தொடங்கி உள்ளது. ஐடி துறையில் அடுத்த ஆண்டு வளர்ச்சி 4%க்கும் குறைவாகவே இருக்கும். வர்த்தக போரால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே வர்த்தக போர் காரணமாக மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது. 81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்திய மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவை இப்போது உண்மையான மதிப்பை நோக்கி சரிய தொடங்கி உள்ளன. வரும் நாட்களில் இவை மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன. இதுவும் ஐடி துறையை நேரடியாக பாதிக்கும்.

Donald Trump s reciprocal Tariff will affect Indian IT field heavily

இன்று கடுமையான சரிவு

இன்று நிஃப்டி ஐடி குறியீடு இன்ட்ராடே வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 3 சதவீதம் சரிந்தது, அனைத்து 10 பாயிண்டுகளும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்தன. பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் சரிவை சந்தித்தது. இது NSE இல் பங்கு ஒன்றுக்கு 4.5 சதவீதம் சரிந்து ரூ.5,262 ஆக குறைந்தது. இன்ஃபோசிஸ் 3.36 சதவீதம் சரிந்து ஒரு பங்கிற்கு ரூ.1,517.85 ஆக சரிந்தது.

அதேபோல் Coforge, HCL Technologies மற்றும் LTIMindtree போன்ற IT மேஜர்கள் முறையே 2.76 சதவீதம், 2.78 சதவீதம் மற்றும் 2.65 சதவீதம் சரிவை சந்தித்தன. பெரிய நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களும் 2 சதவீதம் வரை இழந்தன.

ஐடி துறை சரிவு

ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளையண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மற்றும் கடுமையான விசா குடியேற்றக் கொள்கைகள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களை பாதிக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இவை நேரடியாக ஐடி துறையை பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக பாதிக்கும். அதாவது அமெரிக்க குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட இந்திய ஊழியர்களை நம்பியிருக்கும் IT நிறுவனங்கள் சவால்களை சந்திக்கும். கடுமையான குடியேற்றக் கொள்கைகள் காரணமாக இந்தியர்கள் ஆன்சைட் போக முடியாத நிலை ஏற்படும்.

இதை நிவர்த்தி செய்ய, TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் அமெரிக்காவிலேயே பணிக்கு எடுக்கும் திட்டத்தில் உள்ளதாம். அதாவது விசா பிரச்சனைகளை சமாளிக்க TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் நிறுத்தலாம். அமெரிக்காவில் உள்ளவர்களையே பணிக்கு எடுக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக சர்வதேச அளவில் பல துறைகள் பாதிக்கின்றன. இதனால் ஐடி சேவைகளை பயன்படுத்தும் பல நிறுவனங்கள் செலவை கட்டுபடுத்த ஐடி சேவைகளுக்கு செலவு செய்வதை குறைக்க முடிவு செய்துள்ளன.

Take a Poll

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணத்தை வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், துரதிர்ஷ்டவசமாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் நீண்ட காலமாக நமது தேசத்தை கொள்ளையடித்துக்கொண்டு இருக்கின்றன. அமெரிக்கத் தொழிலாளர்கள் மீதான தங்கள் வெறுப்பை அவர்கள் நேரடியாக வெளிப்படுத்தியுள்ளனர். முக்கியமாக அமெரிக்க விவசாய பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதிக்கின்றனர்.

நாளை வர்த்தக போர்

Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபரின் வர்த்தக போர் காரணமாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை இரசாயனங்கள் துறை, உலோக பொருட்கள் துறை, நகைகள் துறை, மேலும் ஆட்டோமொபைல்கள் துறை , மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் துறை ஆகியவை பாதிக்கப்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக இரசாயனங்கள், உலோக பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து செய்யப்படும் ஆட்டோமொபைல் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்த ஏற்றுமதி 15 சதவிகிதம் வரை பாதிக்கும், மருந்து ஏற்றுமதி 30 சதவிகிதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+