பெரிய உள்நோக்கம் உள்ளது! இந்தியாவை டிரம்ப் சீண்ட காரணமே வேற! அமெரிக்க எதிர்க்கட்சிகள் சொன்ன சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க நாடாளுமன்ற எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர், இந்தியா மீது டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக இந்த வரி விதிக்கப்படவில்லை, டிரம்ப் ஈகோ காரணமாக இப்படி செயல்படுகிறார், அவரின் செயல் தவறானது என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் விமர்சனம் வைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை உக்ரைன் விவகாரம் பற்றியது அல்ல என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் வாதிடுகின்றனர். இந்த வரி விதிப்பானது அமெரிக்க-இந்தியா உறவுகளைப் பாதிக்கும் என்றும், அமெரிக்கர்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

Donald Trump India

இந்தியா - அமெரிக்கா மோதல்

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பை அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% சேர்க்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் பொருளாதாரத் தொடர்பு வைத்துள்ள நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் வரிவிதிப்பு நடவடிக்கையின் உச்சமாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த புதிய வரிவிதிப்பை, இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது.

2025 நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்த $86.5 பில்லியன் பொருட்களில், $60.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள், அதாவது மூன்றில் இரண்டு பங்கு, இப்போது 50% வரிவிதிப்பின் கீழ் வரும். இந்திய அரசின் மதிப்பீடுகள் சற்று குறைவாக, $48.2 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் எனக் கூறுகின்றன.

டிரம்ப் ஈகோ

அமெரிக்க பிரதிநிதிகள் சபை வெளியுறவு கமிட்டியின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், டிரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது உக்ரைன் பற்றியது போல இல்லை.. டிரம்ப் ஈகோ காரணமாக இப்படி செய்துள்ளனர் என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கும் சீனா போன்ற மற்ற நாடுகளுக்கு வரி விதிக்காமல், இந்தியாவை மட்டும் டிரம்ப் குறிவைத்ததை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வரி விதிப்பு ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், மாஸ்கோவின் போரை இது நிறுத்தப் போவதில்லை என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. "இந்தியாவுக்கு வரி விதிப்பது புடினை நிறுத்தாது. டிரம்ப் உண்மையிலேயே ரஷ்யாவின் சட்டவிரோத உக்ரைன் படையெடுப்பைத் தடுக்க விரும்பினால், புடினைத் தண்டித்து, உக்ரைனுக்குத் தேவையான ராணுவ உதவியை வழங்க வேண்டும். மற்ற அனைத்தும் வெற்று சடங்குகள் தான்" என்று அந்நாட்டு எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

வரி விதிப்பு ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீது 50% வரி விதித்திருக்கும் நிலையில், பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் இது குறித்து அமெரிக்காவிற்கு தனது கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளார்.

அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை. இதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தியா நம்முடன் நெருக்கமாக இருக்க வேண்டும். சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பில் அமெரிக்காவுடன் சேர்வதால், இந்தியா நீண்டகால பாதுகாப்பைப் பெறாது. இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு இந்தியா தேவை. இந்தியா உலகில் சுதந்திரமான நிலைப்பாடு கொண்ட ஒரு பெரிய சக்தி. டிரம்ப் வரிகள் குறித்துச் செய்யும் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது,

இந்தியா சீனாவுடன் நெருக்கமாக விடக்கூடாது. நம்முடன் நெருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் டிரம்ப் அதற்கு எதிராக செயல்படுகிறார். அதை அனுமதிக்க கூடாது என்று கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+