Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வரிடம் தீபாவளி வாழ்த்து பிச்சை கேட்டு வராதீங்க! ஆ ராசா வீடியோவுடன் வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளிக்கு முதலமைச்சரிடம் வாழ்த்து பிச்சை கேட்டு யாரும் வரவேண்டாம் என்று திமுகவை சேர்ந்த சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பதிவிட்டுள்ளார். மேலும் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து கேட்க கூடாது என்பது தொடர்பாக திமுக எம்பி ஆ ராசா பேசிய வீடியோவை பதிவிட்டு விவாதத்தை கிளப்பி உள்ளார்.

தீபாவளி பண்டிகைகையை நாம் இன்று மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். இந்த பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

diwali dmk sivaji krishnamurthy

தமிழகத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்பட பல முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வழக்கம்போல் இந்த முறையும் திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின் தான் 2 நாட்களுக்கு முன்பு, ‛‛நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்து'' என்று கூறியிருந்தார். பொதுவாகவே திமுகவினர் தீபாவளி வாழ்த்து என்பதை கூறுவது கிடையாது. இது ஒவ்வொரு முறையும் விவாதத்தை கிளப்பும்.

இந்நிலையில் தான் தற்போது திமுகவை சேர்ந்த சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போட்டுள்ள பதிவு தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தீபாவளிக்கு முதலமைச்சரிடம் வாழ்த்து பிச்சை கேட்டு யாரும் வரவேண்டாம்'' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் திமுக எம்பி ஆ ராசா பேசுகிறார்.

அதில் ஆ ராசா, ‛‛தீபாவளிக்கு என்ன வாழ்த்து சொல்ல வேண்டும். தீபாவளி என்றால் என்ன? என்று முதலில் தெரியுமா? தீபாவளி எப்படி வந்தது என்று சொல்கிறேன். இந்த பூமாதேவி.. நாம் வாழும் பூமியை பத்மாசூரன் என்ற அசுரன் பாயாக சுருட்டினான். அங்கேயே பிரச்சனை ஆரம்பித்து விட்டது. உலகம் உருண்டையா இல்லையா?..

உங்க மதத்தில் என்ன சொல்கிறது என்றால் பத்மாசூரன் பாயாக பூமியை சுருட்டி கடலில் வைக்கிறான். உடனே தேவர்கள் எல்லாம் போய் பூமாதேவியை காணோம் என்று முறையிட்டனர். கிருஷ்ணர் பன்றி உருவம் எடுத்து கடலில் போய் பூமாதேவியை மீட்கிறார். அப்படி மீட்கும்போது பூமாதேவிக்கும், பன்றிக்கும் காதல் வருகிறது. காமம் வருகிறது. அவர்கள் ஒரு பிள்ளையை பெற்றெடுக்கிறார்கள். அந்த புள்ளை தான் நரகாசுரன். அவர் தேவர்களுக்கு எதிராக இருந்தார். யார் யாரெல்லாம் பிராமணர்களுக்கு எதிராக இருந்தார்களோ அவர்களை எல்லாம் கொல்ல வேண்டும். இதனால் நரகாசுரனை வதம் செய்து கொன்றார்கள்.

இப்போது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்லும் நீங்கள் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று கேட்டால் என்ன சொல்ல? இந்த உலகத்தை பாயா சுருட்ட முடியுதா? பன்றி அவதாரம் எடுக்க முடியுமா? பன்றியும், பூமாதேவியும் உடலுறவு - களவி செய்து ஒரு அசுரனை பெற்றெடுக்க முடியுமா? அறிவியலுக்கு எதிராக இருப்பதானாலும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரணத்தினாலும் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது இல்லை'' என்றார்.

இந்த வீடியோவை தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,‛‛தீபாவளிக்கு முதலமைச்சரிடம் வாழ்த்து பிச்சை கேட்டு யாரும் வரவேண்டாம்'' என்ற தலைப்பில் வீடியோ பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு இப்படியான சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

திமுகவில் மேடை பேச்சாளராக வலம் வரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாஜகவில் செயல்படும் நடிகை குஷ்பு, ஆளுநர் ஆர்என் ரவி உள்ளிட்டவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தார். நடிகை குஷ்பு, ஆளுநர் ஆர்என் ரவி பற்றிய விமர்சனத்தால் அவர் கைது செய்யப்பட்டார். திமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன்பிறகு மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்பட்டார்.

அதன்பிறகு சமீபத்தில் கூட சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த நடிகர் சரத்குமாரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத்குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்ததை மனதில் வைத்து சரத்குமார், ராதிகாவை அவர் தரக்குறைவாக தாககி பேசியிருந்தார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை கோரி ராதிகா சரத்குமார் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்ட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+