தீபாவளிக்கு சொந்த ஊருக்கு புறப்படும் முன்பு "இதை" கண்டிப்பா மறக்காதீங்க.. இல்லைனா பிரச்சனையாகிடும்
சென்னை: தீபாவளி வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், இன்றே சென்னைவாசிகள் தங்கள் சொந்த ஊர் நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அப்படி தீபாவளிக்குச் சொந்த ஊர் திரும்புவோர் வீட்டை விட்டுக் கிளம்பும் முன்பு சில விஷயங்களை மறக்காமல் செய்ய வேண்டும். அது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் என்ன தான் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் தீபாவளி மட்டும் எப்போதுமே ஸ்பெஷல் தான்.. சாதி மதங்களைத் தாண்டி கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகவே தீபாவளி இருக்கிறது.

இந்தாண்டு அக். 31ம் தேதி, அதாவது வரும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை நவ. 1ம் தேதியும் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி: இதனால் வியாழக்கிழமை தொடங்கி நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. தீபாவளி என்றால் சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்பிவிடுவார்கள். அதிலும் தொடர் விடுமுறையும் வருவதால் இன்று மாலை முதலே பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு பஸ்: சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் தீபாவளிக்காக எளிதாகச் சொந்த ஊர் சென்று திரும்ப பல்வேறு ஊர்களுக்கும் திரும்பச் சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதலே பொதுமக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் மெட்ரோ ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புத்தாடை, இனிப்புகளுடன் ஜாலியாக சொந்த ஊர்களுக்குக் கிளம்பும் மக்கள், வீட்டில் இருந்து காலை வெளியே எடுத்து வைப்பதற்கு முன்பு பாலோ செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
முதல் விஷயம்: முதலில் ஊருக்குச் செல்லும் போது தேவையான ஆடைகள், இனிப்பு உள்ளிட்ட எல்லா பொருட்களையும் பேக் செய்து ஒரு இடத்தில் வையுங்கள். பேக் செய்து அந்தந்த இடத்தில் வைத்துவிட்டால் எடுத்துச் செல்ல மறந்துவிடுவோம். எனவே, எல்லா பொருட்களையும் ஹாலில் கண்ணில் படுவது போல வையுங்கள். அப்போது தான் ஏதாவது மிஸ் ஆனாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாகக் கண்டிப்பாகத் தேவைப்படும் பொருட்களான மொபைல், சார்ஜர், பர்ஸ் உள்ளிட்டவை உள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அடுத்து முக்கியமாக வீட்டில் உள்ள அனைத்து மின்சாதன பொருட்களையும் ஆஃப் செய்யுங்கள். 4, 5 நாட்கள் கழித்துத் தான் வருவீர்கள் என்பதால் அனைத்து மின்சாதன பொருட்களும் அஃப் செய்து இருப்பதை உறுதி செய்யுங்கள். தேவைப்பட்டால் டிவி உள்ளிட்ட பொருட்களின் பிளக் பாயிண்டை கூட பிடுங்கி விடலாம். அதேபோல கேஸ் சிலிண்டரின் ரெகுலெட்டர் ஆஃப் செய்து இருப்பதை உறுதி செய்யுங்கள். பிரட்ஜில் கெட்டுப் போகக் கூடிய பொருட்கள் இருந்தால் அதை அப்புறப்படுத்துங்கள்.
இது முக்கியம்: மேலும், வீட்டில் உள்ள அனைத்து பைப்களும் முறையாக மூடப்பட்டுள்ளதை செக் செய்து கொள்ளுங்கள். இது தண்ணீர் வீணாவதைத் தடுக்கும்.. மேலும், தண்ணீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏதாவது இருந்து.. நீங்கள் குழாயை முறையாக மூடவில்லை என்றால் 4, 5 நாட்கள் கழித்து வீடு திரும்பும் போது வீடே நீச்சல் குளம் போல ஆகிவிடும். எனவே, இதிலும் கவனம்.
பஸ் அல்லது ரயில்களில் முன்பதிவு செய்திருந்தால் இப்போது பெரும்பாலும் டிக்கெட் பிரிண்ட் அவுட் கேட்பதில்லை. ஆனாலும், உங்களுக்குத் தேவை என்றால் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், டிக்கெட் மெசேஜ் கண்டிப்பாகக் காட்ட வேண்டும். எனவே, அதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும், உங்களின் ஒரிஜினல் ஆவணம் ஏதாவது (ஆதார், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை) ஒன்று நிச்சம் தேவை. அதையும் மறக்க வேண்டாம். மழை வர வாய்ப்பு இருப்பதால் குடையையும் மறக்க வேண்டாம்.
ரொக்கம் எடுத்துக் கொள்ளுங்கள்: கைவசம் குறைந்தது சில நூறு ரூபாயை ரொக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டேன்.. கூகுள் பே கூட இருக்கு.. ரொக்கம் பாதுகாப்பு இல்லையே எனக் கேட்கலாம்.. ஆனால், எல்லா இடங்களிலும் கூகுள் பே வாங்குவார்கள் எனச் சொல்ல முடியாது. அவசரத்திற்கு ரொக்கமே உதவும்.. எனவே அதையும் மறக்க வேண்டாம். கடைசியாக வீட்டை விட்டுக் கிளம்பும் போது வீட்டைப் பூட்டி இருப்பதை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications