பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
பிராமணர் என்பதற்காக ஒருவரை வெறுப்பதும், விமர்சிப்பதும் கூட தீண்டாமைதான் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டு உள்ளார்
சென்னை: ஒருவரை தீண்டத்தகாதவர் என்று சொல்வது தீண்டாமை என்றால், அதைச் சொன்னவன் வம்சத்தில் இவர் வந்தார் என்று சொல்லி ஒருவரை வெறுப்பதும், விமர்சிப்பதும் கூட தீண்டாமைதான் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டு உள்ளார். பிராமண சமுதாயத்தை சேர்ந்த பல நண்பர்கள் தனக்கு இருப்பதாக கூறி உள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "பிராமணர் எதிர்ப்பு. பெரியார் தன் வாழ்நாள் முழுக்க இதைப் பேசியதை, எழுதியதை நான் இளம் நாட்களிலேயே அறிந்திருந்தேன்.
ஆனாலும் அதை நான் நடைமுறையில் ஒரு விஷயமாகவே எங்கும் பார்த்ததில்லை, உணர்ந்ததில்லை. அப்படி அவர்களைப் பார்க்கிறவர்/விமர்சிக்கிறவர் என் வட்டத்தில் இல்லாமல் போனார்களோ என்னவோ!

என் நண்பர் பிராமணர்
இன்று வரை என் மிக நெருங்கிய தனிப்பட்ட நண்பர், குடும்ப நண்பர் எல்லாருமே பிராமணர்தான். இந்த ஒரு சொல்லைச் சொல்லி இப்படி எழுதுவதும், இப்படி அவர்களைப் பகுத்துப் பேசுவதும் கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. இருந்தாலும் இப்போது ஏற்பட்டிருக்கிற இந்தச் சமூக மாற்றஙகள் காரணமாக சிலவற்றைப் பேசத்தான் வேண்டி இருக்கிறது - சில நல்ல தாக்கங்களை ஏற்படுத்த.

பிரச்சனையே இல்லை
எனக்கு அவர்களோடு இன்றுவரை எந்த முரண்பாடும் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. இதைப்போன்ற எண்ணம் கூட எங்கள் உறவுகளில் இருந்ததில்லை. எங்களுக்குள் இருக்கிற சமூக மாறுபாடுகளெல்லாம் ஒரு பொருட்டு கூட இல்லை. வாழ்க்கையின் வெவ்வேறு சூழல்களிலும், இடுக்கண்களிலும் அவர்கள் என்னோடு கூட இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் - இந்தக் கணம் வரை! அது என்றுமே மாறாது!

இறைச்சி சமைத்து கொடுத்தார்கள்
என்னை உரிமையோடும் அன்போடும் ஜேம்ஸ்.. சார்.. அண்ணா.. அங்கில்.. என்று அழைக்கிற பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் எனக்கு நெருக்கம். அவர்கள் எனக்குப் பல்வேறு கட்டங்களில் செய்தவைகளைச் சொல்லப்போனால் இந்தப் பகிர்வு பல பாகங்களாக தொடரவேண்டி வரும்.
இறைச்சி சாப்பிடுகிறவரே, பழக்கமில்லாத சில மாமிசங்களை உண்ண முகம் சுழித்து அருவருப்புப்படும்பொழுது, என்னை மகிழ்வுட்ட, எனக்காக தங்கள் வீடுகளில் அவற்றை வரவழைத்து உண்ணவைத்து மகிழ்ந்தவரும் உண்டு; சமைத்துத் தந்தச் சிலரும் உண்டு.

அன்புதான் காரணம்
ஒருவேளை பிரபலமானதற்குப் பின்னர் இந்த அந்தஸ்தை ஒரு காரணமாகச் சொல்லமுடியும். ஆனால், கல்லூரி நாட்களிலேயே ரொம்ப ஆச்சாரமான ஒரு குடும்பத்தில் எங்கள் நண்பனின் அம்மா, அவன் பாட்டிக்குத் தெரியாமல் எங்களுக்குச் சமைத்துக் கொடுத்த நிகழ்வுகளும் உண்டு. இதற்கு அன்பு மட்டுமேதானே காரணமாக இருக்கமுடியும்?

வீட்டில் உணவளித்த நண்பன்
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பண்டிகை நாளன்று என் உயிர்த்தோழன், உடன் பிறவாத் தம்பி, இசைக்கலைஞன் கணபதி வீட்டில் என்னை அழைத்து அவர்கள் சாப்பிடுகிற தட்டில் எனக்கு உணவளித்தார்களே, அது எதனால்?
இவன் செய்திருந்தால் இது இந்தத் தலைமுறை மாற்றம் என ஒரு காரணம் சொல்லிவிடலாம். ஆனால், அவன் அம்மா, அப்பா, பாட்டிதானே அழைத்து உபசரித்தார்கள், அது அன்பின் வெளிப்பாடுதானே?

தீண்டாமையை எதிர்ப்போம்
சில பழக்க வழக்கங்களில் ஊறிப்போன நம் மனதை பிறர்க்காகத் தளர்த்துவது அன்பின் நிமித்தமாகத்தானே? இந்த அன்புதான் என்னை, நம்மையெல்லாம் பிணைத்திருக்கிறது. பிராமணியம் தீண்டாமையை, மனுசாஸ்திரத்தைக் கொண்டுவந்தது என்பது உண்மையென்றால் அந்தக் கோட்பாட்டை எதிர்ப்போம், வேரறுப்போம்.

எது தீண்டாமை?
ஆனால் தினந்தோறும் நாம் புன்முறுவலோடு எதிர்கொள்கிற நம் சமுகமெனும் குடும்பத்தில் அங்கமான யாரையும் பாகுபாடின்றி நேசிப்போம், அன்பைப் பகிர்ந்து கொள்வோம்! ஒருவன் தீண்டத்தகாதவன் என்று சொல்வது தீண்டாமை என்றால், அதைச் சொன்னவன் வம்சத்தில் இவன் வந்தான் என்று சொல்லி ஒருவனை வெறுப்பதும், விமர்சிப்பதும் கூட தீண்டாமைதான்!" என்று பதிவிட்டு உள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications