ரஜினி கட்சியெல்லாம் ஆரம்பிக்க வேண்டாம்.. பாஜகவில் சேர்ந்துடலாம்.. கார்த்தி சிதம்பரம் அதிரடி அட்டாக்!
Recommended Video
சென்னை: காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் நேரடியாக நடிகர் ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் புதுக் கட்சி தொடங்கப் போவதாக இனியும் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். மாறாக பாஜகவிலேயே அவர் போய்ச் சேர்ந்து விடலாம் என்று நேரடியாகவே அட்டாக் செய்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.
நடிகர் ரஜினிகாந்த் எது பேசினாலும் அது கடும் சர்ச்சையாகி வருகிறது. சர்ச்சையாகும் வகையிலேயே அவரும் பேசி வருகிறார். மக்கள் ஒருபக்கம் போனால் இவர் இன்னொரு பக்கம் போகிறார். இப்படித்தான் ஆரம்பத்திலிருந்தே நடந்து வருகிறது.

முதலில் பெரியார்
பெரியார் குறித்த சர்ச்சை முடிந்த நிலையில் இன்று இன்னொரு பேட்டி அளித்தார் ரஜினி. அதில் என்ஆர்சி குறித்து அவர் கூறிய கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. அவரது கருத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மாணவர்களை அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக தூண்டி விட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர் போராட்டம்
தொடர்ந்து போராட்டங்களை அவர் கொச்சைப்படுத்துவது போல பேசி வருகிறார் என்றும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், ரஜினியை நேரடியாகவே கடுமையாக கண்டித்துள்ளார். இது யாரும் எதிர்பாராதது. கார்த்தி சிதம்பரம் ரஜினி குறித்து இதுவரை நேரடியாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் எந்தக் கருத்தும் தெரிவித்ததில்லை.
|
கார்த்தி சிதம்பரம்
இந்த நிலையில் நேரடியாக ரஜினியை அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்ட ஒரு டிவீட்டில், எதிர்பார்த்தது போலவே, சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போல எழுதிக் கொடுத்ததை வாசித்து வருகிறார் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியை விமர்சிக்கும் வகையில் இப்படி ஒரு டிவீட்டைப் போட்டார் கார்த்தி சிதம்பரம்.
|
ரஜினி பாஜகவில் சேரலாம்
அடுத்து இன்னொரு டிவீட்டைப் போட்டுள்ளார் கார்த்தி சிதம்பரம். இதுதான் ஹைலைட். அதாவது இந்த டிவீட்டில், கட்சி ஆரம்பிக்கப் போவதாக ரஜினி இனியும் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பேசாமல் அவர் பாஜகவிலேயே போய்ச் சேர்ந்து விடலாம் என்று கார்த்தி சிதம்பரம் தனது 2வது டிவீட்டில் போட்டுள்ளார். இது ரஜினியை நேரடியாக அட்டாக் செய்யும் வகையில் உள்ளது.

கடும் தாக்கு
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ரஜினி குறித்து சாப்ட் கார்னருடன் இருப்பவராக அறியப்படுபவர். இந்த நிலையில் அவரது மகனும், காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம், ரஜினியை நேரடியாகவே பாஜகவில் போய்ச் சேரலாமே என்று விமர்சித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அந்த அளவுக்கு ரஜினி தனக்கு நெருக்கமானவர்களையும் கூட எரிச்சலடையும் வகையில் செயல்படுகிறாரா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications