தோளில் போட்ட விஜய் கையை எடுத்துவிட்ட மாணவி.. அதற்கு பிறகுதான் நெகிழ்ச்சியே!
சென்னை: 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் இன்று பரிசு வழங்கினார். அப்போது சகோதர, சகோதரி போல் மாணவ-மாணவிகளை நினைத்து நடிகர் விஜய் அவர்களின் தோள் மீது கைபோட்டு போட்டோ எடுத்து கொண்டார். இந்த வேளையில் மாணவி ஒருவர் தனது தோளில் இருந்த நடிகர் விஜயின் கையை கீழே இறக்கி அதன்பிறகு செய்த செயல் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது.
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பவர்கள் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். இதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் அவர் வெளியிட்டார். தமிழகத்தில் 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளது.

தற்போது திரைப்படம் மற்றும் கட்சி பணி ஆகியவற்றில் ஒருசேர விஜய் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் அவர் திரைத்துறையை விட்டு முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டை போலவே நடிகர் விஜய் இந்த ஆண்டு 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை அழைத்து சென்னையில் வைத்து பாராட்டி கல்வி விருது வழங்கி வருகிறார்.
கட்சி தொடங்கிய பிறகு நடிகர் விஜய் முதல் முறையாக இந்த விழா நடக்கிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கான்வென்சன் சென்டரில் நடக்கும் விழாவில் மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் பாராட்டு சான்று, சால்வை அணிவித்து பாராட்டி வருகிறார். மேலும் மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு வைர கம்மல், வைர மோதிரம் பரிசளித்துள்ளார்.
மேலும் பாராட்டு பெறும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் நடிகர் விஜய் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கிறார். இந்நிலையில் தான் நடிகர் விஜய் மாணவி ஒருவரின் தோளில் சால்வை அணிவித்து அவரின் தோள் மீது கைப்போட்டோ போட்டோ எடுத்தார். இந்த வேளையில் திடீரென்று மாணவி விஜயிடம் கோரிக்கை வைத்தபடி தனது தோள் மீது இருந்த அவரது கையை எடுத்தார்.
அதன்பிறகு அவரும், அவருடன் வந்தவரும் விஜயின் இருவரின் கையையும் கோர்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய் புன்சிரிப்புடன் வழக்கம்போல் மாணவ-மாணவிகள் சொல்வது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது. மேலும் பல மாணவிகள் தங்களின் கையை விஜயின் கைகளில் சேர்த்து ஹார்ட் போன்று காட்டி கேமராவுக்கு போஸ் கொடுத்தது மாணவிகள் அவர் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications