டச் பண்ணிடாதீங்க.. கூகுளில் இந்த 6 வார்த்தையை தேடாதீங்க.. திடீர்னு ஒரு அலர்ட்.. இப்படியும் நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூகுளில் ஒரு சில முக்கியமான வார்த்தைகளை தேடும் பயனர்களை குறிவைத்து, மோசடிகள் நடப்பதாக பகீர் தகவல் கிளம்பியிருக்கிறது. இதுபோன்ற ஹேக்கர்கள் குறித்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் பெருக பெருக, மோசடிகளும் அதிகரித்தவாறே உள்ளன.. யூடியூப் வீடியோக்களால், பணம் கிடைக்கும் என்று கூறியும் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரும் பொதுமக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி கொண்டேயிருக்கிறார்கள். எனினும், தொழில்நுட்ப மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

google online scam

மோசடிகள்: இப்படிப்பட்ட சூழலில், மால்வேரை பயன்படுத்தி மோசடிகள் நடப்பதாக பகீர் தகவல் கிளம்பியிருக்கிறது.. கம்ப்யூட்டர்கள், நெட்வொர்க்குகள், கேஜெட்களை சேதப்படுத்துவதற்காக வெளிப்படையாக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர்தான் மால்வேர்.. இதனை பயன்படுத்தியே ஹேக்கர்கள் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுகிறார்களாம்.

எனவே, கூகுளை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்காகவே முக்கிய அலர்ட் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.. இங்கிலாந்தை சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனமான SOPHOS,, தங்கள் கணினியின் தேடுபொறியில் குறிப்பிட்ட 6 வார்த்தைகளை உள்ளிடும் பயனர்களை குறிவைத்து, புதிய ஹேக்கிங் நடப்பதாக எச்சரித்துள்ளது.

6 வார்த்தைகள்: எனவே, 6 வார்த்தைகளை இணைத்து ஒன்றாக உருவாக்கப்பட்ட வாக்கியங்களை கூகுள் தளத்தில் சர்ச் செய்ய கூடாது என்றும் 6 வார்த்தைகளை ஒன்றாக தேடும் பயனர்களையே ஹேக்கர்கள் அதிகமாக குறிவைப்பதாகவும் SOPHOS எச்சரித்துள்ளது.

உதாரணத்துக்கு, ஹேக்கர்கள் கூகுள் தேடல்களில் "ஆஸ்திரேலியா" என்ற வார்த்தையை பயன்படுத்தும் பயனர்களை குறி வைக்கிறதாம். இந்த சைபர் தாக்குதலுக்கு அந்த நாட்டின் குடிமக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்களாம்.

"பெங்கால் பூனைகள் ஆஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமானதா?" (Are Bengal Cats legal in Australia?) என்று கூகுளில் தேடினால் முதலில் வரும் இணைப்பை கிளிக் செய்தால், அந்த நபரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுவிடும்.

வங்கி கணக்கு: அதாவது, இந்த வாக்கியத்தை சர்ச் செய்ததுமே, கூகுளில் காண்பிக்கப்படும் முதல் லிங்கிற்குள் உங்கள் சாதனம் ஆட்டோமேட்டிக்காக நுழைந்துவிடுகிறது. அப்போது, உங்கள் சாதனத்திலுள்ள உங்களது தனிப்பட்ட தகவல்கள் அதாவது உங்கள் வங்கி கணக்கு, அதன் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ள PIN நம்பர், உங்கள் சாதனத்தில் உள்ள பாஸ்வோர்ட் விபரங்கள் அனைத்தையுமே ஹேக்கர்கள் திருடிவிடுவார்கள்.

இந்த தனிப்பட்ட தகவல்களை வைத்து, பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் அபாயமும் அதிகமாக நடப்பதால், கூகுள் தளத்தில் மேற்கூறிய வார்த்தைகளை ஒரு போதும் சர்ச் செய்ய வேண்டாம் என்று SOPHOS எச்சரித்துள்ளது.

பாஸ்வேர்டு: இப்போதெல்லாம் சைபர் குற்றவாளிகள் "SEO விஷம்" எனப்படும் ஒரு சாப்ட்வேரை பயன்படுத்தி, கூகுள் தேடல்களை தேடுவதற்கு நிரல்களை பயன்படுத்துகிறார்கள்.. இதில் யாராவது சிக்கும்படி நேர்ந்தால், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றி கொள்ள வேண்டும் என்றும், உடனடியாக பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில்கூட, Google Chrome பயன்படுத்தும் பயனர்களுக்கு இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிறுவனமான இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கை குழு (CERT-In), ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்திருந்தது. அதாவது, விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கணினி ஹேக் செய்யப்பட்டு உங்களது முக்கியமான தரவுகள் திருடப்படலாம் என்பதால், கூகுள் குரோமை விரைவில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+