Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாட்ஸ்அப் டிபியில் மனைவி படத்தை வைத்துள்ளீர்களா, உஷாரா இருங்க.. சென்னையில் ஒரு எச்சரிக்கை சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாட்ஸ் அப் டிஸ்பிளே பிக்சரில் மனைவியின் படத்தை வைத்துள்ளீர்களா, உஷாராக இருங்கள். சென்னையில் ஒரு எச்சரிக்கை சம்பவம் நடந்துள்ளது. அந்த காலத்தில் எல்லாம் புகைப்படம் எடுத்தாலே ஆயுசு குறைந்துவிடும் என நம் தாத்தா, பாட்டிகள் போட்டோக்களையே எடுக்காமல் இருந்தனர். ஏதோ வீட்டில் நடந்த விசேஷங்களில் அத்திபூத்தாற் போல் சில புகைப்படங்கள் இருக்கும். இதற்க முன்னோர்கள் ஸ்டூடியோவுக்கு சென்றிருக்க வேண்டும்.

அதைதான் நாம் இன்று பார்த்து வருகிறோம். பின்னர் கால மாற்றத்திற்கேற்ப பெண் பூப்பெய்தல் சம்பவம், காது குத்து, பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. இவற்றை நம் வீடுகளுக்கு புகைப்பட கலைஞர்களை வரவழைத்தோ இல்லை அவர்கள் இருக்கும் இடங்களுக்கு நாம் சென்றோ எடுக்கலாம்.

கேமராக்கள்

கேமராக்கள்

இன்னும் சிலர் தங்களிடம் இருக்கும் கேமராக்களை வைத்து புகைப்படம் எடுத்து அதை ஸ்டூடியோவில் கொடுத்து அது பிரிண்டாகி வர 2, 3 நாட்களாகிவிடும். ஆனால் இன்று அப்படியல்ல.. ஸ்மார்ட் போன் மூலம் கக்கா போவது முதல் பெட்டில் படுத்துறங்குவது வரை அனைத்தையும் எடுத்து நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறோம்.

 புகைப்படம்

புகைப்படம்

தினந்தோறும் ஒரு புகைப்படத்தையாவது போனில் எடுத்து அதை ஷேர் செய்வது, வாட்ஸ் அப்பில் டிபியாக வைப்பது, அதற்கு வரும் கமென்டுகளை பார்த்து பூரிப்பது என இன்று காலம் செல்கின்றன. இது போல் போட்டோ, வீடியோ எடுப்பதன் மூலம் நிறைய குற்றங்களுக்கு துப்பு கிடைக்க உதவியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

 அளவுக்கு மிஞ்சினால்

அளவுக்கு மிஞ்சினால்

ஆனால் எதுவாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதாகிவிடும். அது போல் சென்னையில் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது. வாட்ஸ் அப் டிபியில் நமது புகைப்படத்தை மட்டும் வைக்காமல் கணவர், மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரிகள் ஆகியோரின் புகைப்படங்களையும் வைக்கிறோம்.

டிபி இமேஜ்

டிபி இமேஜ்

இது டிபியில் இருப்பவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சினைகளை கொடுக்கிறது தெரியுமா. சென்னையில் வாட்ஸ் அப் டிபியில் மனைவியின் புகைப்படத்தை யாரோ ஒருவர் வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த கணவரின் வாட்ஸ் ஆப்பிற்கு ஒரு புகைப்படம் வந்தது. அதை ஓபன் செய்த கணவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

 மனைவியின் ஆபாச புகைப்படம்

மனைவியின் ஆபாச புகைப்படம்

காரணம், மனைவியின் ஆபாச புகைப்படம்!.. ஆனால் அது உண்மையில் அவரது மனைவி அல்ல. அதாவது முகம் மட்டுமே மனைவியினுடையது, உடல் வேறு ஒரு நிர்வாணமான பெண்ணினுடையதாம். இந்த புகைப்படத்தை அனுப்பிய கும்பல் அந்த கணவரிடம், இந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணத்தை கொடுக்க வேண்டும் என்றதாம்.

சென்னையில் பகீர் சம்பவம்

சென்னையில் பகீர் சம்பவம்

இதனால் பதறிய கணவர் சென்னையில் காவல் நிலையத்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார். அப்போது நடந்த விசாரணையில்தான் மனைவியின் புகைப்படத்தை அந்த கணவன் டிபியில் வைத்ததும் அதை மர்ம நபர்கள் எடுத்து நிர்வாண பெண்ணின் உடலுடன் ஒட்டி ஆபாச புகைப்படம் போல் சித்தரித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எத்தனை துன்பம்

எத்தனை துன்பம்

மகிழ்ச்சிக்காக கணவர் தனது மனைவியை டிபியில் வைத்த புகைப்படத்தால் இன்று எந்தளவுக்கு பிரச்சினையை இழுத்துவிட்டுள்ளது பாருங்க! புகைப்படங்களை டிபியாக வைக்க இயற்கை, சுவாமி படங்கள், சுற்றுலா தலங்கள் என எத்தனையோ இருக்கின்றன. ஒன்று பெண்களின் படங்களை டிபியாக வைக்காதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் போனில் உள்ள கான்டாக்ட்கள் தவிர வேறு புது நபர் யாரும் பார்க்காத மாதிரி செட்டிங் செய்து டிபியை வைக்கலாம்.

டிபியில் வைக்க இந்த முறைகளை பயன்படுத்துங்கள்

டிபியில் வைக்க இந்த முறைகளை பயன்படுத்துங்கள்

வாட்ஸ் அப்பில் வலது மேல் மூலையில் 3 டாட்டுகள் இருக்கும். அதை அழுத்தினால் சில மெனுக்கள் ஓபன் ஆகும். அந்த மெனுவில் Settings இல் account யை கிளிக் செய்து privacyயை அழுத்தவும். அதில் Who can see my personal info என இருக்கும். அதில் profile photo, status என இருக்கும். அதை கிளிக் செய்தால் everyone, my contacts, nobody என இருக்கும். இதில் my contacts கிளிக் செய்தால் உங்கள் கான்டாக்ட் லிஸ்டில் சேவ் ஆன எண்கள் மட்டுமே உங்கள் புகைப்படத்தை பார்க்க முடியும். இதில் ஸ்டேட்ஸை பார்ப்பதற்கும் my contacts, my contacts except, only share with என இருக்கும். இதில் my contacts except என்றால் உங்கள் கான்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்களில் நீங்கள் செலக்ட் செய்வோரை தவிர மற்றவர்கள் நீங்கள் போடும் ஸ்டேட்டஸ்ஸை காணலாம். அது போல் only share with என்றால் நீங்கள் செலக்ட் செய்யும் உங்கள் கான்டாக்டுகள் மட்டுமே பார்க்க முடியும். இப்படியெல்லாம் ஆப்ஷன்கள் இருக்கும் போது எதற்காக வம்பில் சிக்க வேண்டும்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+