நெல் ஜெயராமன் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்- உறவினர் கோரிக்கை
சென்னை: நெல் ஜெயராமன் உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அவரது சகோதரர் மகன் ராஜூ தெரிவித்தார்.
திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் 169 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருக்கிறார். பாரம்பரிய நெல்வகைகள காப்பாற்றுவதற்காக தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார்.

சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.
இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.
நெல் ஜெயராமன் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்- உறவினர் கோரிக்கை #NelJayaraman pic.twitter.com/ZNWlBrhmdH
— Oneindia Tamil (@thatsTamil) December 5, 2018
இந்நிலையில் நெல் ஜெயராமன் குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அவரது சகோதரர் மகன் ராஜூ இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நெல் ஜெயராமன் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே வதந்திகளை நம்ப வேண்டாம். நெல் ஜெயராமனுக்கு ரூ 5 லட்சம் நிதியுதவி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என ராஜூ தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications