Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சாரி' மது பிரியர்.. போஸ்ட் போட்டு கலாய்த்த ஹெச் ராஜா.. இயக்குனர் நவீன் கொடுத்த பதிலடியை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை : 'என்னவோ போதைல மட்டையாகறவன் தமிழ்நாட்டுல மட்டுந்தான் இருக்கறமாரி' உபி, குஜராத், அமெரிக்கா லண்டன்லயும் இருக்கானுங்க.. என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜாவுக்கு இயக்குனர் நவீன் பதிலடி கொடுத்துள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி திங்கள்கிழமை அன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, "எங்களிடம் கருத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள், காலையில் எங்களுக்கு மது அருந்த வேண்டும் என்று கூறுகிறார்கள். தயவுசெய்து நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நான் யாரையும் குறை சொல்வதற்காக கூறவில்லை.

Dont think that drinkers are only in Tamil Nadu: Director Naveens response to H Raja

காலையில் மது அருந்துபவர்களை குடிகாரன் என்று யாராவது சொன்னால், அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. மாலையில் அது வேற விசயம். காலையில் கடுமையான வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், தவிர்க்க முடியாமல் மது அருந்துகின்றனர். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமா? வேண்டாமா? அவர்கள் செய்கின்ற வேலைகள் எல்லாம் வேண்டும்.

வீட்டை விட்டு வெளியே வருகிறோம். சாக்கடை அடைத்திருந்தால், மூக்கைப் பிடித்துக் கொண்டு வீட்டினுள் சென்றுவிடுகிறோம். அதை சுத்தம் செய்வதற்கு யார் வருகிறார்கள்? அப்படிப்பட்டவர்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? எனவே, மாற்று வழி என்ன என்பதை கண்டுபிடிக்கலாம்." என்றார்.

அமைச்சர் முத்துசாமியின் இந்த பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா இன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

அந்த புகைப்படத்திற்கு கேப்சனாக "நேற்று இரவு சேலம் ரயில் நிலையத்தில் ஒரு குடிகாரன் குப்புற கிடந்தான். Sorry மந்திரி கோவப்பட போறாங்க. மது பிரியர் குப்புற கிடக்கார்" என்று ஹெச் ராஜா வைத்திருந்தார்.

இதற்கு திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் நவீன் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்க ஆட்சி செய்யற மணிப்பூர்ல ஒரு பொண்ணை நிர்வாணமா தூக்கிட்டு போறானுங்க, அந்த ஊரே பத்தி எறியுது. மொத அத பாருங்க சார். இவன் போத தெளிஞ்சதும் தான எந்திரிச்சு போயிறுவான். என்னவோ போதைல மட்டையாகறவன் தமிழ்நாட்டுல மட்டுந்தான் இருக்கறமாரி. உபி குஜராத் அமேரிக்கா லண்டன்லயும் இருக்கானுங்க." என்று கூறியுள்ளார்.

இதனிடையே ஹெச் ராஜா வெளியிட்ட பதிவில் திமுகவினரும் பாஜகவினரும் மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

முன்னதாக, அண்மையில் அமலாக்கத்துறை ரெய்டு குறித்து பேசிய ஹெச் ராஜா, தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்சிஜென்சி உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். பாஜக பயப்படாது. நாங்கள் பட்டியலிட்டு தூக்க வேண்டியவர்களை தூக்கிவிடுவோம். பொன்முடி, அவரது மகனுடன் தொடர்பில் இருப்பதால் 24 மணி நேரத்தில் கூட உதயநிதி வீட்டில் கூட அமலாக்கத்துறை சோதனையிடலாம் என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நான் கலைஞர் பேரன் , ஸ்டாலின் மகன். மோடிக்கும் பயமில்லை EDக்கும் பயமில்லை . எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. திமுகவின் ஒரு கிளை செயலாளரைக் கூட நீங்கள் பயமுறுத்த முடியாது" என்று பதிலடி கொடுத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+