"நம்பர் பிளேட்".. இந்த எழுத்தை மட்டும் பயன்படுத்தாதீங்க.. போக்குவரத்து துறை அதிரடி.. அரசு அதிகாரிகள்?
சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.. அத்துடன் சில வழிமுறைகளையும் வாகன ஓட்டிகளுக்கு வெளியிட்டுள்ளது.
அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தமிழகமெங்கும் நம்பர் பிளேட்டில் 'ஜி' அல்லது 'அ' என்ற எழுத்துகள் எழுதப்பட்டோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டோ மோட்டார் வாகன சட்டத்துக்குப் புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
எனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுகுறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது.. அதில், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (கே)-ன் படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே.

அரசு வாகனம்: அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்புச் சான்று விலக்கு உள்ளது. உரிய வரி விலக்கு மற்றும் காப்புச் சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே "ஜி" அல்லது "அ" என்ற எழுத்துகள் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு வாகனங்களைத் தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் 'ஜி' அல்லது 'அ' என்ற எழுத்துகளைப் பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
விதிமீறல் வாகனங்கள்: இதைத்தவிர, நேரடியாக களத்தில் நின்றும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையிலும், ஏ.என். ஆர்.பி. வகை கேமராக்கள் மூலமாகவும் விதிமீறல் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.. இதுதவிர, நிலுவை அபராதமும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் கடந்த 4 மாதங்களில் ரூ.5.84 கோடியும், போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து சுமார் ரூ.12 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது... இந்த புகாரையடுத்து, விதிமீறும் அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து அரசு வாகனங்களுக்கும் தற்போது போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். அதன்படி, ஐபிஎஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
அரசு வாகன பதிவெண் பலகை: அரசு வாகன பதிவெண் பலகையில் (நம்பர் பிளேட் அரசு வாகனம் என்று குறிக்கும் வகையில் 'அ' என தமிழிலும், 'ஜி' என ஆங்கிலத்திலும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். இது விதிமீறல் என சுட்டிக்காட்டி பொதுமக்கள் பலர் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் போட்டோவுடன் புகார் தெரிவித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு இப்போது ரூ.500 முதல் ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அபராதம் நிச்சயம்: சென்னை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் இதுகுறித்து சொல்லும்போது, பாகுபாடின்றி, விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். அரசு வாகனங்களில் 'அ', 'ஜி' என்று குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அனைத்து அரசு துறையினருக்கும் அறிவுறுத்தி வருகிறோம்.
விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது உறுதி. வாகனங்கள் ஏதாவது விதிமீறலில் ஈடுபட்டல், அதுதொடர்பாக போக்குவரத்து போலீசாரின் சோஷியல் மீடியா பக்கத்தில் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று என்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications