சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்.. "வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு".. வடமாநில தொழிலாளர்களுக்கு.. மனசார சோறு போடும் முதல்வர்!

வெளிமாநில தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உதவி வழங்கினார்

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கினால் தமிழகத்தில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு நம் தமிழக முதல்வர் சாப்பாடு தந்து... அவர்களுக்கான வசதிகளையும் ஏற்படுத்தி தரமான ஒரு சம்பவத்தை நிகழ்த்தி காட்டியுள்ளார்.. எடப்பாடியார் செய்த இந்த காரியத்தை பிற மாநில தலைவர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்... "பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால், வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகின்றான்.. எடப்பாடி.. எடப்பாடி.. எங்கள் எடப்பாடி" என்று ட்விட்டர்வாசிகள் முதல்வரை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்!

Recommended Video

    தடுப்பூசி போட்டா கொரோனா வராது | கொரோனா Hope | Quarantine | LockDown

    லாக்டவுன் அறிவித்ததில் இருந்தே தீராத ஒரு பிரச்சனையாக இருப்பது வெளிமாநில தொழிலாளர்களின் அவதிதான்.. வேலையில்லாமல் போனதுடன், சாப்பாடு இன்றி, தங்க வசதியின்றி, குழந்தைகள் குட்டியுடன் அல்லாடும் நிலைமைதான் ஏற்பட்டு வருகிறது!

    வடமாநிலங்களில் இந்த பிரச்சனை தலைதூக்கி வருவதுடன், சில உயிர்களையும் காவு வாங்க தொடங்கி விட்டது.. பிழைப்பு தேடி ஏராளமான வடமாநில தொழிலாளர்களும் தமிழகத்தில் உள்ளனர்.. அங்கு விவசாயம் பொய்த்துபோய், வேலைதேடிதான் இவர்கள் குடும்பம் குடும்பமாக இங்கு தங்கி உள்ளனர்.

    முதல்வர்

    முதல்வர்

    திடீரென ஊரடங்கு பிறப்பிக்கவும் மக்கள் திணறிவிட்டனர்.. விழிபிதுங்கிவிட்டனர்.. அதனால் மேற்கு வங்கம், ஒடிசா, அஸ்ஸாம், உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வெளிமாநில முதல்வர்கள் தமிழகத்தில் உள்ள தங்கள் மாநில மக்களை பற்றி கவலைப்பட ஆரம்பித்துவிட்டனர்.. அவர்களுக்கு உதவிட கோரி ஏராளமான மாநில தலைவர்கள் நம் முதல்வருக்கு கோரிக்கையும் வைத்தனர்.

    பாராட்டு

    பாராட்டு

    ஆனால், இந்த கோரிக்கைகளுக்கு முன்னதாகவே, வெளிமாநில தொழிலாளர்களுக்கு நம் முதல்வர் சகல வசதிகளையும் செய்துதர ஆரம்பித்துவிட்டார்.. சில தினங்களுக்கு முன்புகூட நடிகை கஸ்தூரி நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இந்த செயலை ஸ்பெஷலாக குறிப்பிட்டு தமிழக அரசுக்கு பாராட்டும் தெரிவித்திருந்தார்.

    உத்தரவு

    உத்தரவு

    வெளிமாநில தொழிலாளர்கள் யாரெல்லாம் உள்ளார்களோ அவர்களுக்கென சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.. வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு, தற்காலிக இருப்பிடம், மருத்துவ வசதிகளை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று சில தினங்களுக்கு முன்பும் அறிவித்திருந்தார். நேரத்துக்கு சாப்பாடு, தினமும் ஸ்கிரீனிங் என இவர்களுக்கு அனைத்துவிதமான வசதிகளையும் முதல்வர் செய்தார்.. இந்த நேரத்தில் இன்னொரு சிறப்பான காரியத்தையும் நடத்தி உள்ளார்.

    சாப்பாடு

    சாப்பாடு

    வெளிமாநில மக்கள் யார் யார் என கணக்கிட்டு, அவர்களை எல்லாம் வரவழைத்து தன் கையாலேயே சாப்பாடு போட்டு வயிறார சாப்பிட வைத்தார்.. அவர்களுக்கு தேவையான பொருட்கள் என்னென்னவோ அவை அத்தனையும் தனித்தனியாக அழைத்து வழங்கினார்.. அடிப்படை வசதிகளையும் செய்து தந்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரிலும் முதல்வர் பதிவிட்டுள்ளார்.

    தொழிலாளர்கள்

    பதிவில், "1,34,569 வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன... வெளிமாநிலத்தில் உள்ள அவர்களின் உறவினர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" என்று தெரிவித்துள்ளார்.

    தலைவர்கள்

    தலைவர்கள்

    பிற மாநில தலைவர்கள் நம் முதல்வரிடம் உதவிதான் கேட்டார்கள்.. ஆனால், நேரடியாக வெளிமாநில மக்களை வரவழைத்து, தன்கையாலேயே சகலத்தையும் வழங்கி தவியாய் தவித்து கிடக்கும் அவர்களது உறவுகளின் வயிற்றில் பாலை பார்த்துள்ளார்.. நாங்க இருக்கோம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார்.. முதல்வரின் உடனடி நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.. இது பிற மாநில தலைவர்களையும் யோசிக்க வைத்து வருகிறது.. காரணம், மற்ற மாநிலங்களிலும் புலம் பெயர்ந்து தொழிலாளர்கள் சிக்கி தவித்து வரும்நிலையில், இப்படி ஒரு செயலை செய்து காட்டியது, அவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இப்போது விளங்கி வருகிறது.

    எடப்பாடி.. எங்கள் எடப்பாடி

    எடப்பாடி.. எங்கள் எடப்பாடி

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உட்பட நேரடியாக அனைத்தையும் கவனித்து அதிரடிகளை கிளப்பி வரும் எடப்பாடியாரை ட்விட்டர்வாசிகள் பாராட்டி தள்ளுகிறார்கள்.. "பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகின்றான்... எடப்பாடி.. எடப்பாடி... எங்கள் எடப்பாடி... என்றும் சூப்பர் சார்.. பாராட்டுக்கள் சார்" என்றும் வாழ்த்துக்கள் மலைபோல குவிந்து வருகின்றன.

    பினராயி விஜயன்

    இதனிடையே, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பரவலை குறைக்க தமிழக கேரள எல்லைகளை மூட இருப்பதாக பல்வேறு பொய்யான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது... இது தொடர்பாக பினராயி விஜயன் பேசும்போது, "தமிழர்கள் நம்முடைய சகோதரர்கள்... இது போன்று எப்போதும் யோசித்ததும் இல்லை... இந்த திட்டமும் நடைமுறைப்படுத்தப்படாது" என்று திட்டவட்டமாக கூறியுள்ளதும் நம்மை பெருமைப்படுத்தியே வருகிறது!

    English summary
    dont worry, will give enough support to other state workers says cm edappadi palanisamy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X