தோசைக்கு அரைக்கறீங்களா? தோசை மாவை கல்லில் ஊற்றி.. தோசையம்மா தோசை, இது ரோபோ சுட்ட தோசை! செம பெங்களூர்
சென்னை: வீட்டில் செய்யக்கூடிய அனைத்து எடுபிடி வேலைகளையும், அனைவர் முன்னிலையில் டெஸ்லா நிறுவனத்தின் ஆப்டிமஸ் ரோபோ செய்து காட்டி அசத்தியது நினைவிருக்கிறது.. அதைவிட அசத்தலான ஒரு கண்டுபிடிப்பு பெங்களூரில் நடந்துள்ளது.. இளம் என்ஜினியர் ஒருவர் இந்த புதுவிதமான ரோபோவை டிசைன் செய்து, அதற்கு செல்லமாக ஒரு பெயரும் வைத்துள்ளார்.. இந்த ரோபோவை பற்றி அவர் சொன்னதுமே, பலரும் திரண்டு வந்து இணையத்தில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் குவித்து வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், "வீ ரோபாட்" என்ற நிகழ்ச்சியை டெஸ்லா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களை அங்கிருந்த ரோபோக்கள், நடனம் ஆடி வரவேற்றன. சாப்பாடு, கூல் டிரிங்க்ஸ் வழங்குவது என எல்லோருடனும் பழகி, பேசி செல்பி எடுத்து அசத்தியது.. இந்த ரோபோக்களுக்கு ஆப்டிமஸ் ரோபோ என்று டெஸ்லா நிறுவனம் பெயரிட்டுள்ளது.
கிச்சனில் பாத்திரம் கழுவும்
இந்த ரோபோக்கள் குறித்து டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் சொல்லும்போது, இந்த ஆப்டிமஸ் ரோபோக்கள், உங்களுக்கு தேவையான அடிப்படை செயல்கள், சேவைகளை வழங்கும். உங்களுக்கு ஓர் ஆசிரியராக இருக்கும்.. குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டும்.. வளர்ப்பு நாயுடன் வாக்கிங் செல்லும்..
உங்க வீட்டு அலமாரியில், பொருட்களை அடுக்கி தரும்.. கிச்சனில் பாத்திரங்களை கழுவும், துணி துவைத்து தரும்.. வீட்டை கிளீன் செய்து தரும். உங்களுடன் பேசி டான்ஸ் ஆடும்.. பார்களில் மதுபானங்களை வழங்கி சேவை செய்யும்.. இந்த ஆப்டிமஸ் ரோபோக்களின் விலை, ரூ.17 லட்சத்திலிருந்து 26 லட்ச ரூபாய் வரை இருக்கும்"என்றார் எலான் மஸ்க்..
வியப்பை தந்த எலான் மஸ்க்
இந்த ரோபோக்களின் செய்தி மீடியாக்களில் வெளியாகி பலருக்கும் வியப்பை தந்திருந்தது.. ஆனால், நம்ம பெங்களூரில் ஒரு ரோபா ஒட்டுமொத்த பேரையும் வியக்க வைத்துள்ளது..
ஐடி கம்பெனிகள் நிறைந்த பெங்களூரு, தற்போது தொழில்நுட்ப நிறுவனங்களின் புகலிடமாகவே மாறிவிட்டது.. எனவே பெங்களூருவில் ரோபோ பயன்பாடும் பெருகி வருகிறது.. ஹோட்டல்களில் கஸ்டமர்களுக்கு உணவு பரிமாறும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.. இதேபோல பெரிய பெரிய அப்பார்ட்மென்ட்களில்
வசிக்கும் இல்லத்தரசிகள், தங்களது வீடுகளை கூட்டி பெருக்கவும், தண்ணீர் வைத்து கழுவி எடுக்கவும் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
தோசை சுட்டு தரும் ரோபோ
ஆனால், இதில் ஒருபடிமேலே சென்று, இல்லத்தரசிகளின் சமையல் வேலையை எளிதாக்க இப்போது மற்றொரு ரோபோ வந்துள்ளது... இந்த ரோபா, தோசை சுட்டு தருகிறதாம்..
பெங்களூருவை சேர்ந்த என்ஜினீயர் ரெடிட் என்பவர் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளார் இதுபற்றி என்ஜினீயர் ரெடிட் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் தோசை சுடும் ரோபோவை பற்றி ஷேர் செய்துள்ளார்..
அதில், "நான் கடந்த சில மாதங்களாகவே பெங்களூருவில் தனிப்பட்ட முறையில் ஒரு ரோபோவை டிசைன் செய்திருக்கிறேன். இந்த ரோபோ தானாகவே தோசை சுட்டு தரும்.. கேஸ் ஸ்டவ்வில் தோசை கல்லை வைத்தால் மட்டும் போதும்.. மாவை ஊற்றி தோசையை சுட்டெடுக்கும்.
ரோபோ பெயர் திண்டி
என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் தோசை சுடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.. அதனால்தான், இந்த தோசை சுடும் ரோபோவை வடிவமைத்தேன். இந்த ரோபோவுக்கு திண்டி என்று பெயர் வைத்துள்ளேன். (திண்டி என்றால் தமிழில் சிற்றுண்டி என்று அர்த்தம்)
இந்த ரோபோ பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்து எனக்கு முக்கியம்.. ஏனென்றால், வணிக நோக்கத்துக்காக இதனை எழுதவில்லை.. என்னுடைய புதிய கண்டுபிடிப்பை உங்களிடம் சொல்லவே வந்தேன்" என்று பதிவிட்டிருக்கிறார்..
அச்சு அசல் கிரிக்கெட் ஸ்டேடியம்
ஆனால் இந்த ரோபோ விலையை பற்றி எதுவும் பதிவிடவில்லை.. இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், என்ஜினீயரின் கண்டுபிடிப்புக்காக அவரை பாராட்டி வருகிறார்கள்.
இந்த தோசை ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் ஸ்டேடியம் போலவே இருக்கிறது என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.. மற்றொருவரோ, "இந்த ரோபோவை பார்த்தால், உங்களது கடினமாக உழைப்பு தெரிகிறது. இதைவிட இன்னும் சிறப்பான ரோபோவை உருவாக்க என்னுடைய வாழ்த்துகள்" என்கிறார்.
தோசையம்மா தோசை, இது ரோபோ சுட்ட தோசை...!!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications