சென்னைக்கு வந்துவிட்டது டபுள் டக்கர் பஸ்.. மெரினாவில் பார்த்தீங்களா.. சிவப்பு கலரில்.. மாஸ்ஸா.. செம!
சென்னை: சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மெரினா காமராஜர் சாலையில் இன்று காலை டபுள் டக்கர் பேருந்து சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள பேருந்துகளில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் எஸ்இடிசி பேருந்துகளில் மாற்றம் செய்யப்பட்டது போல தற்போது மாநகர, நகர பேருந்துகளிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

பேருந்துகள் மாற்றம்: தமிழ்நாடு இந்தியாவில் மிகப்பெரிய பேருந்து போக்குவரத்தை கொண்ட மாநிலம் ஆகும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு பேருந்துகள் இயங்குகின்றன. அரசு பேருந்துகள் சிறப்பாக இயக்கப்படுவதும் இங்கேதான்.ஆனால் அதே சமயம் பல பேருந்துகள் புனரமைக்கப்படாமல் இருக்கின்றன என்ற புகார்கள் அடிக்கடி வைக்கப்படுவது வழக்கம். அதாவது பழைய பேருந்துகளை அப்படியே வைத்து உள்ளனர். இதை புனரமைப்பதே இல்லை என்று புகார்கள் வைக்கப்படுவது வழக்கம்.
இதை மாற்றவே கடந்த சில மாதங்களாக பேருந்துகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக எஸ்இடிசி பேருந்துகள் புனரமைக்கப்பட்டன. பச்சை நிறத்தில் சிங்கிள் டோர் கொண்ட எஸ்இடிசி பேருந்துகள் முதல் கட்டமாக மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டன. உள்ளே இருக்கும் சீட்டுகள் மாற்றப்பட்டன. மொத்தமாக இதன் தோற்றம் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல் உள்ளே இருக்கும் வசதிகளும் மாற்றி புதுமைப்படுத்தப்பட்டன. இது மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த எஸ்இடிசி பேருந்துகள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் மேற்கு மாவட்டங்களுக்கும் இதேபோல் புதிய பேருந்துகள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
டபுள் டக்கர்: இந்த நிலையில்தான் சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எந்தெந்த பாதைகளில் இந்த பேருந்துகளை இயக்கலாம் என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதாவது
எந்தெந்த சாலைகள் இதற்கு தோதாக இருக்கும் என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அண்டர் கிரவுண்ட் பாதைகள் இல்லாத இடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன் ஒரு கட்டமாக மெரினா காமராஜர் சாலையில் இன்று காலை டபுள் டக்கர் பேருந்து சோதனை ஓட்டமும் நடைபெற்றது. சிவப்பு நிற டபுள் டக்கர் பேருந்து இன்று சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. பழைய டபுள் டக்கர் பேருந்து ஒன்றை வைத்து சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து விரைவில் டபுள் டக்கர் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகர பேருந்துகள்: தமிழ்நாட்டில் எஸ்இடிசி பேருந்துகளில் மாற்றம் செய்யப்பட்டது போல தற்போது மாநகர, நகர பேருந்துகளிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக நகர மற்றும் மாநகர பேருந்துகள் மாற்றம் செய்யப்பட உள்ளன.
உதாரணமாக முதல் கட்டமாக கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல தனியார் பணிமனையில் புனரமைக்கப்பட்ட சேலம் கோட்ட அரசு நகரப்பேருந்துகள் மாற்றப்பட்டு உள்ளன. பிரவுன் நிறத்தில் இருந்த பழைய பேருந்துகள் மொத்தமாக மாற்றப்பட்டு புத்தம் புதிய இளம் நீல நிறத்தில் உருவாக்கப்பட்டு உள்ளன. உள்ளே சீட்டுகளும் மாற்றப்பட்டு உள்ளன. மேற்கு மாவட்டங்களில் முதல் கட்டமாக இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து மாநிலம் முழுக்க நகரம் மற்றும் மாநகர பகுதிகளில் இதேபோன்ற பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications