இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்!
சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக எதிர்கொண்ட சட்டமன்றத் தேர்தல் தான் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடைசி தேர்தலாக அமைந்துவிட்டது. வரும் சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் திமுக சார்பில் களம் காண உள்ளார்.
2021 தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றிடம் நிலவியது. அதிமுகவில் ஆளுமை மிக்க தலைவராக இருந்த ஜெயலலிதா மறைந்துவிட்டார். கிட்டத்தட்ட 80 ஆண்டுகால முதிர்ந்த அரசியல் அனுபவசாலி மு.கருணாநிதியும் உயிருடன் இல்லை. தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உயிருடன் இல்லை. இதையே அரசியல் விமர்சகர்கள் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்றனர். தேர்தலுக்கு முன்னதாக புதிய கட்சித் தொடங்குவதாக அறிவித்திருந்த ரஜினிகாந்த், 'தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது' என்றார்.

அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்திருந்தார். செயல் தலைவர் நிலையிலிருந்த ஸ்டாலின் திமுகவின் தலைவராகி இருந்தார். உடன் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் அரசியல் களத்தில் ஒரு நட்சத்திர முகமாக மாறியிருந்தார்.
'ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போறாரு' எனப் பிரச்சார பாடலை தயார் செய்திருந்தது திமுக. டீ கடை முதல் திரும்பிய பக்கம் எல்லாம் இந்த வாசகம் கண்களில் பட்டன. 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 38 தொகுதிகளில் வென்றது. இது ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்குப் பெரிய தெம்பைக் கொடுத்தது. அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் நூலிழையில் வெற்றி பெற்றார். பின் அதை எதிர்த்து நீதிமன்றம் சென்று, அவர் பதவியைப் பறிக்கும் நிலை உண்டானது.
காற்றில் பறந்த வாக்குறுதி
மக்களவையில் அதிமுக அமைத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்கள் நிராகரித்தனர். பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் போராடினர். தமிழ்நாட்டில் வண்ணாரப்பேட்டையில் சிறுபான்மை மக்கள் தொடர் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். அதற்கு திமுக ஆதரவு அளித்தது.
ஆனால், அதிமுக துணையுடன் தான் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக 2021 தேர்தல் பிரச்சாரத்திற்காக ராயபுரம் பகுதிக்குச் சென்ற ஸ்டாலின், "ராஜ்ய சபாவில் அன்புமணி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் ஆதரவாக வாக்களித்ததால்தான் சட்டம் நிறைவேறியது. நீங்கள் போராடிய போது உங்களை வந்து சந்திக்காத ஜெயக்குமார், இப்போது வாக்கு கேட்டு வருகிறார்" என்று சரமாரியாக விமர்சித்தார்.
அத்துடன் ஜெயலலிதாவால் சபாநாயகராகப் பதவி ஏற்ற ஜெயக்குமார், அவர் சிறை சென்றதும் 'தான் தான் அடுத்த முதல்வர் என போஸ்டர் அடித்து ஒட்டினார். அது மேலிடத்தின் கவனத்திற்குச் சென்றதால் இவரது பதவி பறிக்கப்பட்டது" என்று சாடினார்.
"மத்திய அரசின் கைப்பாவையாக அதிமுக ஆட்சி நடக்கிறது. அது ஒரு அடிமை ஆட்சி. மோடிக்கு முன் கூனி, குறுகி நிற்கிறார் எடப்பாடி" என்று பரப்புரை செய்த ஸ்டாலின், 'ஊர்ந்து ஊர்ந்து போய் பதவியைப் பெற்றவர் எடப்பாடி. தாவித் தாவி பதவி உயர்வு பெற்றவர்" எனக் கிண்டல் செய்தார். அதற்குப் பதிலடியாக 'உழைக்காமலே கட்சியின் தலைமைக்கு வந்தவர் ஸ்டாலின்' என்றார் எடப்பாடி.
2021 சட்டசபைத் தேர்தலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் மைய அரசியலாக இருந்தது. மத்திய அரசு மருத்துவமனைக்கான அறிவிப்பை வெளியிட்டு, இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை என்பதை அடையாளப்படுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லில் எம்ய்ஸ் என எழுதிக் கொண்டு போய் ஊர் ஊராகக் காட்டினார்.
தேர்தல் பரப்புரையில் சேகர் ரெட்டி விவகாரம் சூடு பிடித்தது. மோடி அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது, சேகர் ரெட்டி மூலம் அதிமுகவினருக்குப் பணம் முறைகேடாகச் சென்றது. அதற்கான பட்டியல் கொண்ட டைரியை வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது. அதில் அதிமுக அமைச்சர்கள் பெயர்கள் உள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
மேலும் மணல் மாஃபியா கும்பல் சேகர் ரெட்டியுடன் அமைச்சர்களுக்குத் தொடர்புள்ளது என்றும் வகுந்து எடுத்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இதை விசாரிப்போம் என்றார். இறுதியில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சொன்னார். கொடநாடு கொலை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு உள்ளது என்றும் அவர் ஜெயிலுக்குப் போவது உறுதி என்றும் ஸ்டாலின் அடுக்கடுக்காக புகார்களை அள்ளித் தெளித்தார்.
தனியார் தொலைக்காட்சி மக்களுடன் ஸ்டாலினை நேர்காணல் செய்தது. அதில் வாரிசு அரசியல் பற்றிய கேள்வி ஒலித்தது. அதற்கு, "இனி என் குடும்பத்திலிருந்து என் மகனோ, மகளோ பதவிக்கு வரமாட்டார்கள்" என்றார். ஆனால், அவரது வாக்குறுதி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் காற்றில் பறந்தது.
25 ஆண்டுகள் பின் பெரும்பான்மை
இந்தச் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் 173 பேர் போட்டியிட்டனர். கூட்டணிக் கட்சிகளான 15 பேர் உதயசூரியன் சின்னத்தில் நின்றனர். திமுக தனிப் பெரும்பான்மையுடன் 133 இடங்களை திமுக கைப்பற்றியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 4, சிபிஐ 2, சிபிஎம் 2, காங்கிரஸ் 18, முஸ்லிம் லீல் 1 என வென்றன.
அதிமுக 66 தொகுதிகளில் வென்றது. பாமக 5, பாஜக 4 இடங்களைப் பிடித்தன. 2016இல் 89 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்த திமுக இந்த முறை அதிக பெரும்பான்மையுடன் அரியணையில் அமர்ந்தது. 2016இல் 134 இடங்களை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வென்றிருந்த நிலையில், அதில் 50% இடங்களை இழந்தது.
சில தொகுதிகளில் தேர்தல் முறைகேடுகள் வெட்டவெளிச்சமாகின. ஆகவே தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியில் தேர்தலை ஒத்தி வைத்தது. ஆயினும் ஒரு தசாப்த கால அதிமுக ஆட்சியைவீழ்த்தி, அதிகாரத்தைக் கைப்பற்றியது திமுக. 2021 தேர்தலில் மொத்தம் 73.63% வாக்குப்பதிவு பதிவானது. கடந்த 25 கால திமுக தேர்தல் வரலாற்றில் மறுபடியும் அதீத பெரும்பான்மையை உறுதிசெய்தது அக்கட்சி. இதற்கே, ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி, தனது தம்பியால் முதல் அமைச்சராகவே முடியாது என்று பகடி செய்தார். ஜோதிடம் கணித்துக் கூறிய யாரும் ஸ்டாலினுக்குக் கட்டம் சரியில்லை என்றும் அவர் ஆட்சியமைப்பது கனவில் நடக்காத காரியம் என்றும் கணித்துக் கூறினர்.
39.7% வாக்குகளை திமுக ஈட்டியது. அதாவது 2016இல் பெற்ற 31.39% விட 8.31% அதிகம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டுத் தலைமையில் கீழ் போட்டியிட்ட கடைசி தேர்தல் இதுதான். அதில் 33.29% வாக்குகளை அதிமுக பெற்றது. 2016இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனித்து நின்று 41.06% வாக்குகளைப் பெற்றிருந்தது. அதாவது பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் மோதிய இக்கட்சி சுமார் 7% வாக்குகளை இழந்திருந்தது.
எழுதியவர்: கடற்கரய்
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!











Click it and Unblock the Notifications