சாப்பாட்டை தள்ளிப் போட்டால் தலை வலி வருதா.. உஷாரா இருங்கள்.. டாக்டர் பரூக் சொல்லும் டிப்ஸ்
சென்னை: இனிப்பு சாப்பிட்டால் தலைவலி வருகிறதா, சரியான நேரத்தில் சாப்பிட முடியாவிட்டால் தலைவலி வருகிறதா இதற்கு தீர்ப்பு குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஸ்வீட்களை எடுத்துக் கொண்டால் உடனே தலைவலி வருகிறது என்று பலர் கூறக் கேட்டிருக்கின்றேன். இன்னும் பலர் சரியான நேரத்தில் சாப்பிட முடியாவிட்டால் அல்லது பயணங்களின் போது தலைவலி வருகிறது என்கின்றனர்.ஆம்.. ரத்தத்தில் க்ளூகோஸ் திடீரென்று ஏறுவது/ இறங்குவது - தலைவலி / வலிப்பு போன்றவற்றை தூண்டும் செயல்களாக அமையக் கூடும்.
Both hypoglycemia & hyperglycemia triggers an episode of migraine/ or seizure in a vulnerable person இப்படியாக அதிக மாவுச்சத்தை (Carbohydrates ) எடுத்துக் கொண்டாலும் தலைவலி வருகிறது. சரி.. அதைக் குறைத்து எடுக்கிறேன் என்று பட்டினி கிடந்தாலும் தலைவலி வருகிறது.

கார்
இப்ப என்னதான் செய்ய? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நம் உடலை மகிழ்வுந்தாக (Car)கற்பனை செய்யுங்கள். மகிழ்வுந்து சிறப்பாக இயங்க அதற்கு ஏற்ற எரிபொருள் கொண்டு நிரப்ப வேண்டும். அந்த இன்ஜின் உருவாக்கும் போது பெட்ரோல் இன்ஜினாக உருவாக்கப்பட்டிருந்தால் அதை பெட்ரோல் கொண்டு மட்டுமே இயக்க வேண்டும்.

டீசல் ஊற்றினால்
திடீரென்று தவறுதலாக டீசல் ஊற்றிவிட்டால் வண்டி சீசாகி நின்று விடும். ஆனால் நமது மூளை இரண்டு விதமான எரிபொருள்களைக் கொண்டு இயங்கும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆம்.. சில வண்டிகள் பெட்ரோல் / எரிவாயு இரண்டிலும் இயங்கும் அல்லவா அது போல.. இது நமக்கான "அட்வாண்டேஜ்" முதல் எரிபொருள் - க்ளூகோஸ் ( மாவுச்சத்தை எரித்துக் கிடைப்பது).

இரண்டாவது எரிபொருள்
இரண்டாவது எரிபொருள் - கீடோன்கள் ( கொழுப்பை எரித்துக் கிடைப்பது) இதில் பிரதானமாக தற்போது உலகில் வாழும் 99.9% பேர் எரிபொருளாக பயன்படுத்துவது மாவுச்சத்தை எரித்துக்கிடைக்கும் "க்ளூகோசை" மட்டுமே இந்த க்ளூகோசை உடல் கிரிகித்துக்கொள்வதில் ஏற்படும் குளறுபடிகள் தான். டயாபடிஸ், உடல் பருமன், பிசிஓடி, ரத்த கொதிப்பு ( இந்த நோய்க்கும் இது ஓரளவு காரணம் என்று கூறலாம்).

ஃபேட்டி லிவர்
மைக்ரேன், ஃபேட்டி லிவர், வலிப்பு நோய் போன்ற பல வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. இப்போது கற்பனை செய்யுங்கள். நமது வண்டி பெட்ரோலில் ஓடும் போது பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது ஆனால் வண்டி உருவாக்கும் போது அது எரிவாயுவில் சிறப்பாக இயங்கும் என்ற வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்??

பிரச்சினை
எரிவாயுவில் வண்டியை ஓட்டிப்பார்ப்போம். அதில் பிரச்சனை இல்லாமல் இருக்கிறதா? என்று சோதிப்போம். இது தானே நம் அனைவரின் பதிலாக இருக்கும். அதைத்தான் "கீடோன்கள்" செய்கின்றன. கீடோன்கள் என்று கூறியவுடன் மருத்துவ அறிவியல் பயின்ற சகோதர சகோதரிகள் பதற்றம் அடைந்து விட வாய்ப்புள்ளது. என்னது கீடோன்களா? என்று கேட்பார்கள். கீடோன்கள் என்றாலே Diabetic Keto Acidosis தான் பெரும்பான்மை பேருக்கு நியாபகம் வரும். அதில் தவறொன்றுமில்லை. ஆனால் சிறு புரிதல் மாற்றம் ஏற்பட வேண்டிய நேரம் வந்து விட்டது.

க்ளூகோஸ்
க்ளூகோஸ் - நன்மை செய்யும் எரிபொருளே. ஆனால் அளவு மிகுதியானால் ஊறு செய்கிறது. அதுபோலவே கீடோன்களும் நன்மை செய்யும் எரிபொருளே. அவை அளவை மீறும் போது ஊறு செய்கின்றன. டைப் ஒன்று நீரிழிவு மற்றும் கட்டுப்பாடற்ற டைப் டூ நீரிழிவில் , உடலில் கீடோன்கள் மிக மிக அபாயகரமான அளவுக்கு எகிறி கோமா நிலைக்கு கொண்டு செல்லும் .இதை டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் , ஷார்ட்டாக DKA ( Diabetic keto acidosis)அந்த நோய்களில் சிறுநீரை அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்போம். சிறுநீரில் கீடோன்கள் வந்து கொண்டிருந்தால் நோய் இன்னும் குணமாகவில்லை என்று அர்த்தம்.

கீடோன்கள்
ஆனால் உணவின் மூலம் கீடோன்களை உடல் உற்பத்தி செய்யும் போது அவை கீடோ அமிலத்தன்மையை ஏற்படுத்துவதில்லை. மாறாக மூளை உடலில் உற்பத்தியாகும் கீடோன்களை எரிபொருளாக எடுத்துக்கொள்கிறது. இதை Nutritional ketosis என்று கூறுகிறோம். Diabetic keto acidosis என்பது சுனாமியில் ஸ்விம்மிங் போடுவது என்றால் Nutritional keto acidosis என்பது குற்றால அருவியில் குளிப்பது போன்ற உவமையை ஏற்கனவே பயன்படுத்தி இருக்கிறேன்.

100 ஆண்டு கால ஆராய்ச்சி
கடந்த நூறு ஆண்டுகால ஆராய்ச்சிகளில் அருதிப் பெரும்பான்மை க்ளூகோசை மட்டுமே ஒரே எரிபொருளாக வைத்து ஆய்வுகள் நடந்துள்ளன. ஏன் நம் பார்வை கீடோன்கள் பக்கம் திரும்பக் கூடாது? கீடோன்களை எரிபொருளாக பாவிக்கும் மனிதர்களுக்கு வாழ்வியல் நோய்கள் எத்தனை சதவிகிதம் குறைகின்றன என்பதை அறிய ஆய்வுகள் தொடர்ந்து நடக்க வேண்டும். சரி மீண்டும் டாபிக்குக்குள் வருகிறேன். க்ளூகோசை மட்டுமே நம்பி வாழும் மூளை எப்படி இயங்கும் தெரியுமா? க்ளூகோஸ் அளவு அதிகமாக கிடைத்தால் துள்ளிக்குதிக்கும். க்ளூகோஸ் அளவு குறைந்தால் எழக்கூட வழியின்று சுருண்டு படுத்துவிடும்.

மூளை முரண்டு பிடிக்கும்
இந்த இரண்டு நிலைகளிலும் மூளை முரண்டு பிடிக்கும். எனவே மைக்ரேன் / வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கட்டாயம் இனிப்பு / கூல்ட்ரிங்க்ஸ்/ சாக்லேட்/ இனிப்பு கலந்த டீ/காபி பருகுவதை தவிர்க்கவும் உணவை அதன் வேளையில் உண்ணாமல் ஸ்கிப் செய்வதை தவிர்க்கவும். உணவில் கார்போஹைட்ரேட்ஸ் அளவுகளை குறைத்து உண்ணவும். கலோரி குறைந்த கீடோன்களில் மூளையை இயக்கும் உணவு முறையான குறைமாவு உணவுமுறைக்கு மாறலாம். மைக்ரேனை தடுக்க கலோரி குறைத்தால் மட்டும் போதாது. கூடவே கீடோன்களை உருவாக்கும் கலோரி குறைந்த உணவு முறையாகவும் இருக்க வேண்டும்.

கீட்டோஜெனிக்
Low carbohydrate diets have two advantages of being both Low calorie as well as ketogenic. தங்களுக்கு மைக்ரேன் / வலிப்பு நோய் இருந்தால் உடனே இனிப்பை நிறுத்திவிடுங்கள். சில தியாகங்கள் செய்யாமல் சில இன்பங்களை அனுபவிக்க முடியாது. சில துன்பங்களை விட்டு விலக முடியாது.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications