சுகர் இருக்கிறவங்க பால் குடிப்பது நல்லதா? நாட்டு சர்க்கரை போடலாமா.. டாக்டர் பரூக் விளக்கம்
நீரிழிவு நோயாளிகள் பால் குடிப்பது உகந்ததா என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கருத்து
சென்னை: நீரிழிவு நோயாளிகள் பால் குடிப்பது உகந்ததா என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூர் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீரிழிவிற்கு பால் உகந்ததா??? நீரிழிவு நோயை வரவழைப்பதில் அடிக்கடி சீனியுடன் கலந்து பருகும் டீ மற்றும் காபிக்கு முக்கிய பங்குண்டு. ஆம்... என்னை சந்திக்கும் புதிதாக கண்டறியப்படும் நீரிழிவு நோயர் பெரும்பான்மையினருக்கு இருக்கும் பழக்கமாக ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேல் டீ/காபி பருகுவது இருக்கும்.
பலரிடமும் பால் குடிப்பீர்களா? என்று கேட்டால் இல்லை என்பார்கள். ஆனால் பால்-டீ பால்- காபி குடித்துக் கொண்டு தான் இருப்பார்கள். அவர்களைப் பொருத்தவரை பால் என்பது தனியாக குடித்தால் தான் அது பால் கணக்கில் வரும். ஆனால் நம் உடலைப் பொருத்தவரை பால் டீ / பால் காபி என்றால் பால் + டீ தூள் டிகாஷன் + கலக்கப்படும் சீனி/நாட்டு சர்க்கரை, இன்னும் பலர் மூன்று பால்-டீ குடித்து விட்டு
இரவு உறங்கச் செல்லுமுன் தனியாக சீனி அல்லது நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு கலந்த பாலைப் பருகுவர். இவ்வாறாக ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் + ஒரு டம்பளர் டீக்கு இரண்டு டீஸ்பூன் வீதம் மூன்று டீக்கு ஆறு டீஸ்பூன் சீனி தினமும் சரியான இடைவெளியில் உள்ளே போய்க் கொண்டிருந்தால் என்ன நடக்கும்?

பாலில் இருப்பது லேக்டோஸ்
பாலில் இருப்பது லேக்டோஸ் எனும் இரு மாவுப்பொருள் சேர்ந்த கூறு லேக்டோஸ் = கேலக்டோஸ் + க்ளூகோஸ். எனவே நாம் பருகும் பாலில் கேலக்டோஸ் கூடவே க்ளூகோஸும் இருக்கிறது. நமது குடலில் உள்ள பீட்டா கேலக்டோசிடேஸ் எனும் நொதி பாலில் உள்ள லேக்டோஸை கேலேக்டோஸ் மற்றும் க்ளூகோஸாக உடைக்கிறது. இவ்வாறு உடைக்கப்பட்ட க்ளூகோஸ் மற்றும் கேலக்டோஸ் இரண்டும் உடலால் கிரிக்கப்படுகின்றன. நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ரத்தத்தில் க்ளூகோஸ் கலக்கும் போது இன்சுலின் சுரக்கும்.

க்ளூகோஸ்
க்ளூகோஸை அனைத்து செல்களுக்கும் உணவாகத் தரும் வேலையை இன்சுலின் செய்கிறது. பாலில் இருந்து கிடைக்கும் கேலக்டோஸும் க்ளூகோஸ்-1- பாஸ்பேட் எனும் இடைநிலை வேதிப்பொருளாக மாறி கல்லீரலில் க்ளைகோஜெனாகவும் தேவைக்கேற்ப ரத்தத்தில் க்ளூகோஸாகவும் மாறி கலந்து விடும். எனவே ஒருவர் பால்/பால் டீ பருகும் போது இயற்கையான க்ளூகோஸ் திரவத்தைத் தான் பருகுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அதில் சுவை கூட்ட சீனி / நாட்டு சர்க்கரை கலக்கும் போது சுக்ரோஸ் சேருகிறது.

ஃப்ரக்டோஸ்
சுக்ரோஸில் க்ளூகோஸ் + ஃப்ரக்டோஸ் இரண்டும் இருக்கிறது. வெறும் பால் குடித்தாலே ரத்த க்ளூகோஸ் நன்றாக ஏறும். அதில் சீனியும் கலந்து குடித்துக் கொண்டே இருந்தால் மீண்டும் மீண்டும் இன்சுலின் தூண்டப்பட்டு போகப்போக இன்சுலின் சுரப்பு குறையும். இத்துடன் மூன்று வேளையும் தானியங்கள் சார்ந்த அதிக மாவுச்சத்து உணவுமுறையில் இருப்பதால் இன்சுலின் சுரப்பு போதாமல் போகும்.
சுரக்கப்பட்ட இன்சுலினும் வேலை செய்யாமல் தகராறு பண்ணும். இதை இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் என்கிறோம். இதனால் நீரிழிவு நோய் ஏற்படக்கூடும்.

நீரிழிவு நோய்கள்
கண்ட்ரோல் இல்லாத நீரிழிவு நோயர்கள் தாங்கள் அருந்தி வரும் பால்-டீ / பால்-காபியை நிறுத்தி விட்டு ப்ளாக் காபி , ப்ளாக் டீ , லெமன் டீ , போன்றவற்றை இனிப்பு ஏதும் சேர்க்காமல் பருகினாலே ரத்த க்ளூகோஸ் அளவுகள் பெருமளவு கட்டுக்குள் வரும். உடல் எடை குறைய வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் . தாங்கள் அடிக்கடி பருகும் பாலுக்கு தற்காலிக முழுக்கு போட்டு விட்டு ப்ளாக் டீ / ப்ளாக் காபி என்று இனிப்பு போடாமல் அருந்தினாலே நல்ல பலன் கிடைக்கும். பலரும் வாக்கிங் போய் விட்டு அங்கேயே ஒரு சீனி கலந்த டீ குடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதை பார்க்க முடிகிறது. எடை குறைப்பதற்காக வாக்கிங் செல்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன பழக்கம் நன்மை தராது.

அதிகாலை வாக்கிங்
காரணம் அதிகாலை வாக்கிங் போகும் போது நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை கல்லீரலில் உள்ள க்ளைகோஜெனை வைத்து உடல் இயங்கிக் கொண்டிருக்கும். நம் வேகமான நடையில் மீதமுள்ள மிச்ச சொச்சம் கல்லீரல் க்ளைகோஜெனும் காலியாகி பிறகு நமது உடல் சேர்த்து வைத்த கொழுப்பை எரிக்கும். அப்போது தான் எடை குறையும். அதை விடுத்து காலை சீனி கலந்த டீ பருகிவிட்டு வாக்கிங் சென்றாலும் தவறு தான். வாக்கிங் சென்று வந்த உடனேயே சீனி கலந்த டீ அருந்துவதும் தவறு தான். உங்களின் நீரிழிவு கட்டுப்பட உடல் எடை குறைய பால் உட்கொள்ளுதலை நிறுத்தி விட்டு இனிப்பு உட்கொள்ளுதலை நிறுத்தி விட்டு ப்ளாக் டீ, ப்ளாக் காபி, லெமன் டீ என மாறுவது பயன்தரும். இன்னும் நீரிழிவு நோய் வராதவர்கள். அதை வராமல் தடுக்க ஒரு வழி கூறுகிறேன். பாலில் லேக்டோஸ் எனும் இயற்கையான இனிப்பு இருக்கிறது. எனவே உங்கள் டீ காபியில் மேற்கொண்டு இனிப்பு கலப்பதை இன்றோடு நிறுத்திடுங்கள். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications